கிரகப்பிரவேசம்
கிரகப்பிரவேசம் வேதங்களில்!வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம். கிரகப்பிரவேசம் செய்யும் முறை:............... பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம். தெய்வாம்சம் பொருந்திய இல்லம் கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்