தச மஹா வித்யா தேவியர் - பகுதி 4

 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 4



தச மஹாவித்யா தேவியரில் நான்காவதாக தரிசிக்க இருப்பது புவனம் காக்கும் ஸ்ரீபுவனேஸ்வரி.

புவனங்களுக்கு எல்லாம் தலைவியாகத் திகழ்பவள், ஸ்ரீபுவனேஸ்வரி. ஞானியர் போற்றும் குண்டலினி சக்தி இவளே.


"நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு

வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று

ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே"


" வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ " என்ற படி, வேண்டியவற்றை வேண்டிய படி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் புவனேஸ்வரி தேவி ஒருவளே.


🌺 அபய-வரத முத்திரைகள்:


நாம் அனைவரும் அந்த ஆதிசக்தியின் குழந்தைகள். அம்மையின் திருக்கரங்களில் திகழும் அபய-வரத முத்திரைகள், அவளது தாயுள்ளத்தையே காட்டுகின்றன. உலகத்தவருக்கு பயம் வந்தால், அதைப் போக்க பராசக்தியால்தான் முடியும்.


அப்படி, சகல ஜீவராசிகளுக்கும் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதையே தனது அபய முத்திரையால் உணர்த்துகிறாள் சக்திதேவி. எதை நினைத்ததும் இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்று விடுபடுகிறோமோ அதை அபயம் என்று போற்றுவதாகக் கூறுகிறார் ஆதிசங்கரர்.


🌺 வழிபடுவதால் ஏற்படும் நலன்:


அன்னையை வழிபடுபவர்கள் சொற்செல்வம், கவித்துவம், ஸர்வ வசியம், ராஜ்ய லாபம், சூரியனைப் போன்ற காந்தி பெற்றவர்களாகவும் விளங்குவர். உலகில் உள்ள அனைத்து பெண் வடிவங்களாகவும் இவள் போற்றப்படுகிறாள்.


எனவேதான், நமது மதத்தில் பெண்களை சுவாசினியாகவும், கன்னிகையாகவும், தெய்வமாகவும் போற்றுவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


எல்லாம் வல்ல அன்னையே ஒளி, புகழ், அழகு, ஸம்பத்து, இரவு, ஸந்த்யை, செயல், ஆசை, இருள், பசி, புத்தி, நுண்ணறிவு, ஸ்துதி, சொல், நிச்சயம், செய்யும் அறிவு, பணிவு, சோபை, சக்தி ஆகியவை யாகவும், அவை போன்ற மற்ற சக்திகளாகவும் திகழ்கிறாள் எனப் போற்றுவர்.


நெருப்பின் வெம்மை போன்று உலகின் அனைத்துப் பொருட்களிலும் விரவியிருப்பவள் புவனேஸ்வரி தேவி. இதை உணர்ந்தோமானால், இன்றைக்கு உலகில் உள்ள எவ்வித பேதங்களும் இருக்காது.


🌺 ஸ்ரீ புவனேஸ்வரி காயத்ரி:


ஓம் நாராயண்யை வித்மஹே புவனேச்வர்யை தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத்


🌺 மூல மந்திரம்:  *குரு மூலம் அறியவும்*


ஓம் புவனேஸ்வர்யை நம:


****** சர்வமும் சக்தி மயம் ******

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை