தச மஹா வித்யா தேவியர் - பகுதி 8

ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் 

பகுதி - 08



தச மஹாவித்யா தேவியரில் எட்டாவதாக தரிசிக்க இருப்பது வெற்றிகள் அருளும் ஸ்ரீ பகளாமுகி.


🌺 உருவக் காரணம்:


நமது சனாதன தர்மத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாஸனையும் உலக நன்மைக்காகத்தானே தவிர, தனி மனித விருப்பு - வெறுப்புகளை நிறைவேற்றி கொள்வதற்காக அல்ல. இதை நாம் புரிந்து கொண்டோமானால் நாம் இந்த தேவதைகளின் பெருமைகளை மேலும் அறியலாம்.


இதுபோன்று தீமைகளை அழிக்கும் தெய்வங்களை நாம் வணங்கும் போது, நம்மில் இருக்கும் அசுரத்தன்மை விலகி, நம்மை சுற்றி இருக்கும் தீமைகளும் போக்கப்படுகிறது. அப்படிபட்ட அசுர தன்மை கூறிக்கும் வகையில் அசுரனை தண்டிக்கும் கோலத்தில் இந்த தேவியை தியானிப்பது மரபு.


🌺 பெயர் காரணம்:


அசுரர்கள், தேவர்களை அழிக்க சில ஆபிசார பிரயோகங்கள் செய்த வஸ்துக்களை புதைத்து விட்டுச் சென்றனர். புதைத்து விட்ட சென்ற வஸ்துக்களை ‘க்ருத்யா' என்று கூறுவர்.


அவற்றை அழிக்கும் வாக்கு அல்லது சொல்லுக்கு, ‘வலகஹனம்' என்று பெயர்.

வலகா என்பது ‘பலகா’ என மறுவி, பிறகு ‘பகளா’ என்று அமைந்தது. அதனுடன் ‘முகி’ சேர்ந்து ‘பகளாமுகி’ என்ற பெயர் ஏற்பட்டது.


‘பகளா’ எனில் பேசக்கூடிய சக்தியை அளிப்பவள் என்றும் பொருள் உண்டு அதே போல் ‘முகி’ என்பதற்கு பிளப்பது என்று பொருள். அதாவது, தீயவற்றைப் பிளக்கும் சக்தியாக பகளாமுகீ தேவியானவள் போற்றப்படுகிறாள். அதர்வண வேதத்தில் பகளா சூக்தம், யஜுர் வேதத்தில் ஆபிசாரிகப் பிரகரணம் ஆகியவற்றில் இந்த தேவியின் தன்மை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.


🌺 வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்:


இந்த அன்னையின் சக்தியானது பால் போல் குணமுடைய தூயவர்களிடம் வீண் வாதம் செய்பவர்களின் வாக்கு, முகம், கால் இவற்றை ஸ்தம்பிக்கச் செய்து, நல்லோருக்கு வெற்றியை அளிக்கவல்லது. பிறர் செய்யும் தீய செயல்களில் இருந்து பக்தர்களை காக்க வல்லது.


மஞ்சள் வண்ணப் பூக்களால் இந்த தேவியை அர்ச்சித்தால், வேண்டிய பலன் கிடைக்கும்.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட மாதா ஸ்ரீபகளாமுகி தேவியானவள் நம்மையும், நமது குடும்பத்தாரையும், நமது நாட்டையும் தீயவர் களில் இருந்து காத்து நன்மை புரியட்டும்.


🌺 ஸ்ரீபகளாமுகி காயத்ரீ:


ஓம் பகளாமுக்யை வித்மஹே ஸ்தம்பின்யை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்


🌺 மூல மந்திரம்:. *குரு மூலம் அறியவும்*


ஓம் பகளாமுக்யை நம:


****** சர்வமும் சக்தி மயம் ******

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை