தச மஹா வித்யா தேவியர் - பகுதி 2

 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 2



தச மஹாவித்யா தேவியரில் இரண்டாவதாக தரிசிக்க இருப்பது சாதிக்கவைக்கும் ஸ்ரீ தாராதேவி.


"சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்

அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே"


‘தாரா நாம மஹாசக்தி: வர்த்ததே தாரிணீச்வரீ’ என்ற வாக்கியத்தின்  படி, இந்த தேவி, மகா சக்தி படைத்தவள். தசமகா தேவியரில் இரண்டாவது மஹா பெரிய சக்தி. வாழ்க்கையில் ஒற்றுமை வேண்டும் என்றால், இவளை வழிபடுவது அவசியம்.


🌺 வழிபடுவதால் ஏற்படும் நலன்:


சர்வ ஸித்திகளையும் அளிக்கவல்ல இந்த தாரா தேவி, ராவணனை வதம் செய்ய ஸ்ரீராமனின் சக்தியாக விளங்கியவள். ஸ்ரீகாளி தேவியின் பல அம்சங்களை உடையவள்.

தாராதேவியை வழிபடுபவர் ஜீவன் முக்தனாக விளங்குவர். இடைவிடாது பொங்கி வரும் கவி சக்தியைப் பெறுவர். அனைத்து துறைகளிலும் தேர்ச்சி உடையவராவார்கள். அரசாங்கத்திலும், சபையிலும், விவாதத்திலும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவர்.


🌺 காள ராத்ரி:


சாக்த தந்த்ரங்கள் பதினோரு இரவுகளைக் கூறுகின்றன. அவை: காள ராத்ரி, வீர ராத்ரி, மோஹ ராத்ரி, மஹா ராத்ரி, க்ரோத ராத்ரி, கோர ராத்ரி, தாரா ராத்ரி, அபலா ராத்ரி, தாருணா ராத்ரி, சிவ ராத்ரி, திவ்ய ராத்ரி என்பனவாம். இதில் 'காள ராத்ரி' பற்றி காணலாம்.


பிரளய காலத்தில் நான்கு சமுத்திரங்களும் பொங்கி எழ, அந்தச் சமயத்தில் தேவர்களை, மானிடரை காப்பதால் இவளை ‘காள ராத்ரி’ என்று வழிபடுகின்றனர்.


பூவுலகில் தீபாவளி அன்று அமாவாசை சம்பந்தம் இருப்பின் அது "காள ராத்ரி" வழங்கப்படுகிறது. இந்த நாள் தாரா தேவியை வழிபட மிகச் சிறந்த நாளாகும். அதே போன்று செவ்வாய்க் கிழமையன்று அமாவாசை திதியும் சேர்ந்து கிரஹணமும் ஏற்பட்டால், அது தாரா தேவியின் அருளைப் பெற மிகச் சிறந்த நாளாகும்.


🌺 வேறு வடிவங்கள்:


தாரா, உக்ர தாரா, மஹோக்ர தாரா, வஜ்ரா தாரா, காளீ தாரா, ஸரஸ்வதீ தாரா, காமேச்வரீ தாரா, சாமுண்டா தாரா என மந்த்ர சாஸ்திரங்கள் இந்த தேவியைப் போற்றுகின்றன.


உக்கிரமான காலங்களில் பக்தர்களைக் காப்பதால் இவளை ‘உக்ர தாரா’ என்றும் வழிபடுகின்றனர்.


🌺 திருநாமங்கள்:


தாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணீரூபா, ஸத்வரூபா, மஹா ஸாத்வீ, ஸர்வ ஸஜ்ஜன பாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, தமோரூபா, மஹா மாயா, கோர ரூபா, பயானகா, கால ரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸ காரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞான ப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்த வஸ்த்ரா, ரக்தமாலா ப்ரசோபிதா, சித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என்னும் இந்த முப்பது திருநாமங்களையும் தினமும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.


🌺 ஸ்ரீதாரா காயத்ரி மந்திரம்:


ஓம் தாராயை வித்மஹே உக்ர தாராயை தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத்


🌺 மூல மந்திரம்:. *குரு மூலம் அறியவும்*


ஓம் தாராயை நம:


***** சர்வமும் சக்தி மயம் ******

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை