தச மஹா வித்யா தேவியர் - பகுதி 7

ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 7



தச மஹாவித்யா தேவியரில் ஏழாவதாக தரிசிக்க இருப்பது துன்பங்கள் நீக்கும் ஸ்ரீ தூமாவதி தேவி.


தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்த தாட்சாயணி பிறகு வேள்வி குண்டத்தில் தன் சரீரத்தை வீழ்த்தினாள். அதனால் அதற்கு கௌரி குண்டம் எனப்பெயர் ஏற்பட்டது.


அந்த குண்டத்தினின்று எழுந்த புகை மண்டலமே தூமாவதி என்ற சக்தியாய் உருவெடுத்தது என சாக்த தந்திரங்கள் கூறுகின்றன.


இவள் தோன்றிய மாதம் பால்குனம், செவ்வாய்க்கிழமை, அட்சயதிரிதியை, ஸாயங்கால நேரம். இவள், ஸர்வ ஸம்ஹார சஞ்சலா - அனைத்தையும் சம்ஹாரம் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவள்.


🌺 தேவியின் தோற்றம்:


கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள். கருத்த முகம் உடையவள் ஆதலால் காலமுகீ என்றும் ஜ்யேஷ்டா தேவி, மூதேவி, முத்ததேவி என்று பலவிதமாக வடிவங்கள் உடையவர்.


அன்னை குறித்த தகவலை நேரடியாக அறிய முடியா விட்டாலும் வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டியது கிடைக்கும், தீயவர்களுக்கு தீயவை ஏற்படும், தொற்று நோய்கள் தீரும் வஞ்சனை எண்ணம் கொண்டு அதர்மம் வழியில் நடப்பவர்களை பிடித்து (மூதேவி பிடிப்பு) அவர்களை அழித்து, தர்மம் நிலை நாட்டுவதும் நல்ல எண்ணம் உடையவர்களின் துன்பம் நீக்குவது அன்னை பணி.


அருவருக்கத்தக்கதாக தோன்றும் இந்த தூமாவதியின் உருவமானது உபாசகர்களால், நல்ல வகையிலேயே நோக்கப்படுகிறது. எல்லாம் வல்ல அன்னையை தூமாவதி நினைத்து வழிபடுவோமாக.


🌺 ஸ்ரீ தூமாவதி காயத்ரீ


ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரின்யை தீமஹி

தன்னோ தூமா ப்ரசோதயாத்


🌺 மூல மந்திரம்:. *குரு மூலம் அறியவும்*


ஓம் தூமாவத்யை நம:


****** சர்வமும் சக்தி மயம் ******

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை