தச மஹா வித்யா தேவியர் - பகுதி 3
ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 3
தச மஹாவித்யா தேவியரில் மூன்றாவதாக தரிசிக்க இருப்பது உலகுக்கு நன்மை அருளும் ஸ்ரீவித்யாதேவி.
சாட்சாத் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அம்சம் சக்தியே ஸ்ரீ வித்யா தேவியாகும். இவளே லோக மாதா அதாவது லோகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் (புல், தாவரம், விலங்குகள், ஈ, எறும்பு முதல் மானிடர் வரை) மாதா!
🌺 அன்னை அருளை வருணித்து புகழேவே இந்த மானிடர் பிறவி எடுத்திருக்க வேண்டும் எனலாம்...
* அன்னை வாஸம் செய்யும் பட்டினம் ’ஸ்ரீபுரம்’. இது மகாமேருவின் சிகரத்தில் உள்ளது.
* அன்னை மகா மந்திரம் ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது.
* அன்னை யந்திரம் ‘ஸ்ரீசக்ரம்’.
* அன்னை அமர்வாசனம் ‘ஸ்ரீ சிம்மாஸனம்’ என அறியப்படுகிறது.
* செக்கச் சிவந்தத் திருமேனி, சம்பகம், அசோகம் முதலான பூக்கள் சூடிய கூந்தல், பத்மராகக் கற்களால் ஜொலிக்கும் கிரீடம், பிறைச்சந்திரன் போன்ற நெற்றி, கருப்பு நிறக் கஸ்தூரிப் பொட்டு, அழகிய புருவங்கள், மீன் போன்ற கண்கள், சம்பகப் பூப்போன்ற நீண்ட மூக்கு, நட்சத்திரம் போல் ஜொலிக்கும் மூக்குத்தி, கடம்பப் பூங்கொத்து அலங்கரிக்கும் காதுகளில், சந்திர-சூரியரே தோடுகளாக திகழ்கின்றன.
* பத்ம ராகத்தாலான கண்ணாடி போன்ற கன்னங்கள், பவளத்தை பழிக்கும் உதடுகள் என்று இந்த அன்னையின் அழகை விவரிக்கிறது லலிதா சகஸ்ரநாமம்.
* அன்னை வழிபாட்டில் ஸ்ரீசக்ரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதில் ஸ்ரீகாமேஸ்வரருடன் இணைந்து இவ்வுலகங்களை பரிபாலனம் செய்து வரும் தேவியை, நவாவரண பூஜை எனப்படும் ஸ்ரீசக்ர பூஜையினால் மகிழ்விக்கச் செய்தால், உலகம் நன்மையைச் சந்திக்கும்; இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாது.
🌺 ஸ்ரீ வித்யா வழிபட்டவர்கள்:
பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், கணபதி, முருகன், அகத்தியர், இந்திரன், மன்மதன், சந்திரன், குபேரன், அத்ரி மஹரிஷி, துர்வாஸர், லோபாமுத்ரை, நந்தீச்வரர், வருணன், புதன், யமன், தத்தாத்ரேயர், பரசுராமர், தேவர், வாயு, பிரஹஸ்பதி, ரதி தேவி, ஆதிசேஷன் ஆகியோர் உலக மாதாவை ‘ஸ்ரீவித்யா தேவி’யாக உபாசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
🌺 வழிபடுவதால் ஏற்படும் நலன்:
இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் உலகில் உள்ள உயர்ந்த பலன்களை அடையலாம் என்கின்றன சாஸ்திரங்கள். நமக்குள் உள்ள வீண் பயமும் அகலும். இந்த தேவியானவள் தர்ம ஸ்வரூபிணீ. எனவே தர்ம வழியில் சென்று, நம்மால் இயன்ற அளவு இந்த தேவியை ஆராதித்து வந்தால், இவ்வுலகத்திற்கு வேண்டிய நலன்கள் அருள் புரிவாள்.
பிறவா முக்தி ஆனந்தத்தையும் தேவியானவள் நமக்கு அருளுவாள்.எல்லாம் வல்ல அன்னையை, பராசக்தியை தாரா தேவியின் வடிவில் வழிபட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைவோமாக.
🌺 ஸ்ரீவித்யா காயத்ரி:
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே ஸர்வ சக்த்யை ச தீமஹி
தன்னோ வித்யா ப்ரசோதயாத்
🌺 மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீவித்யாயை நம
ஸ்யாமளாதண்டகத்தின் நிறைவு துதி. மூலம் மற்றும் தமிழாக்கம் :-
ஸர்வாதீர்த்தாத்மிகே,
ஸர்வ மந்த்ராத்மிகே,
ஸர்வ தந்த்ராத்மிகே,
ஸர்வ யந்த்ராத்மிகே,
ஸர்வ பீடாத்மிகே,
ஸர்வ தத்வாத்மிகே,
ஸர்வ சக்த்யாத்மிகே,
ஸர்வ வித்யாத்மிகே,
ஸர்வயோகாத்மிகே,
ஸர்வநாதாத்மிகே,
ஸர்வ சப்த்தாத்மிகே,
ஸர்வ வர்ணாத்மிகே,
ஸர்வ விஸ்வாத்மிகே,
ஸர்வதீக்ஷாத்மிகே
,ஸர்வ ஸர்வாத்மிகே,
ஸர்வகே ஹே ஜகந் மாத்ருகே,
பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்,
தேவீ துப்யம் நமோ
தேவி துப்யம் நமோ
தேவிதுப்யம் நம:
இதை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளேன்.
எல்லா நீர்நிலைகளிலும் நிறைந்து இருப்பவளே,
எல்லா மந்திரங்களிலும் உறைந்து இருப்பவளே, எல்லாவற்றிலும் தந்திரரூபமாக இருப்பவளே,
எல்லாவற்றிலும் யந்திர ரூபமாக இருப்பவளே,
எல்லா பீடங்களிலும் பூர்ணமாக இருப்பவளே,
எல்லாவற்றிலும் உட்பொருளாக இருப்பவளே,
எல்லா சக்திகளையையும் உள்ளடக்கியவளே ,
எல்லா கலைகளையும் உணர்ந்தவளே,
எல்லா யோகங்களையும் கற்றவளே,
எல்லா நாதங்களிலும் இருப்பவளே,
எல்லா சப்தங்களிலும் ஒலிப்பவளே,
எல்லா பிரிவுகளுமாக இருப்பவளே,
எல்லா உலகத்திலும் இருப்பவளே,
எல்லா உபதேசங்களிலும் பூரணமாய் இருப்பவளே, எல்லாவாற்றிலும் எல்லாமாய் இருப்பவளே,
அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவளே, அகிலமெல்லாவற்றுக்கும் தாயே,
என்னைக் காப்பாற்று !
என்னைக் காப்பாற்று !
என்னைக் காப்பாற்று!
தேவி நீயே துணை!
தேவி நீயே துணை!
தேவி நீயே துணை!
🌺 மூல மந்திரம் : *குரு மூலம் அறியவும்*
ஓம் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தர்யை நமஹா
****** சர்வமும் சக்தி மயம் ******
Really Fine Explanation !
ReplyDeleteIf From From Part 1 To Part 10 Fully Mposted usefull for Everyone For Hindus