தச மஹா வித்யா தேவியர் - பகுதி 6
ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 6
************************************
தச மஹாவித்யா தேவியரில் ஆறாவதாக தரிசிக்க இருப்பது துஷ்ட சக்திகளை அழிக்கும் ஸ்ரீ சின்னமஸ்தா.
"தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாயச"
என்ற வாக்கியத்துக்கு இணங்க 'தீயவர்களை அழிக்கவும் நல்லோர்களை காக்கவும் ஆயுதங்களைத் தாங்கியுள்ளேன்' என்று விவரிக்கிறாள் சக்தி தேவி.
🌺 அன்னை உருவம்:
இந்த தேவியின் திருவுருவம், தரிசிப்பவருக்கு ஒருவித பயத்தை உண்டாக்கும். எனினும், உயர்வான தத்துவத்தை உணர்த்துவது இந்த வடிவத்தின் நோக்கம்.
நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் இடா, பிங்களா, சுஷும்னா என மூன்று நாடிகள் முக்கியமானவை.
நமது உடலின் இயக்கமே ரத்த ஓட்டத்தினால் தான் ஒரு மனிதனுக்கு சீரான உடல்நிலை இருப்பதற்கும், யோக மார்கத்தில் சிறந்து விளங்கி, தன்னை அறிந்து பிறவிப் பயனை அடைவதற்கும் இந்த தேவியானவள் அருளுகிறாள் என்பது, நம் முன்னோர்கள் இந்த சக்தியின் உபாசனையை செய்து நமக்கு அளித்த அனுபவம்.
அதேபோல் வர்ணினீ, டாகினி தேவியர்களுடன் தலையைக் கொய்தவளாக உக்ர கோலத்தில் அம்பிகைக் காட்சித் தருவாள். இந்தத் திருக்கோலமும் தீயவற்றை அழிக்கவே என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
‘அதி சௌம்ய அதி ரௌத்ராயை’ என்ற வாக்கியப் படி, மிக கருணை கொண்டவளாகவும், அதே சக்தி மிக கோபம் கொண்டவளாகவும் மிக கருணை உடையவளாகவும் திகழ்வது தீயதை அழிக்கவும், நல்லவற்றை ரட்சிக்கவும் தான். இந்த சக்தியை பிரசண்ட சண்டிகா என்றும் கூறுவர்.
🌺 வழிபடுவதால் ஏற்படும் நலன்:
இந்த மாபெரும் சக்தியை வழிபடுவதினால் துஷ்டர்கள் விலகுவர், நல்ல எண்ணம் தோன்றும், நான்கு புருஷார்த்தங்களும் கிடைக்கும், லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும், உலகம் வசப்படும்.
மஹா பாதகங்கள் நசுக்கப்படும், புத்திரன் இல்லாதவர் புத்திரனையும், வறுமையுடையவர் பொருளையும் பெறுவர், கவித்துவமும் பாண்டித்தியமும் கிடைக்கும் ஆறு மாதங்கள் தொடர்ந்து இந்த தேவியை எவரொருவர் வழிபடுகிறாரோ, அவருக்கு கவிகளில் சிறந்தவராக விளங்குவார்.
🌺 வீர ராத்ரீ:
இந்த சக்தியை அனைத்து காலங்களிலும் வழிபடலாம். இவள் தோன்றிய நேரம் வீர ராத்ரீ எனக் கூறுவர். வீர ராத்ரீ எனில் செவ்வாய்க் கிழமை, அமாவாசை திதி, மக நட்சத்திரம் ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து வருவது.
எவரொருவர், இந்த தேவியின் 12 நாமங்களை காலையில் எழுந்து துதிக்கின்றார்களோ, அவர்களுக்கு எந்த நேரத்திலும் எதிரிகள் தொல்லை இருக்காது என தேவி அருளுகிறாள்
🌺 தேவியின் 12 திருநாமங்கள்:
சின்னக்ரீவா
சின்ன மஸ்தா
சின்ன முண்டதரா
அக்ஷதா
க்ஷோத க்ஷேமகரீ
ஸ்வக்ஷா
க்ஷோணீ சாச்சாதன க்ஷமா
வைரோசனீ
வராரோஹா
பலிதானப்ரஹர்ஷிதா
பலிபூஜித பாதாப்ஜா
வாசுதேவப்ரபூஜிதா
ஆகிய தேவியின் நாமங்களைக் கூறி இந்த தேவியை போற்றி வழிபடுவது சிறப்பு.
பரம கருணை உடைய ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் அருளால் தீய எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு நல்ல வழியில் செல்ல அந்த தேவியை வழிபடுவோம்
🌺 ஸ்ரீ சின்னமஸ்தா காயத்ரீ
ஓம் வைரோசின்யை வித்மஹே சின்னமஸ்தாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
🌺 மூல மந்திரம்:. *குரு மூலம் அறியவும்*
ஓம் சின்னமஸ்தாயை நம:
****** சர்வமும் சக்தி மயம் ******
Comments
Post a Comment