சாரதா நவராத்திரி
அனைவருக்கும் சாரதா நவராத்திரி முதல் நாள் வாழ்த்துகள்.
அம்பிகை நமது கஷ்டங்களை நீக்கி, சகலவிதமான நன்மைகளை அளித்து, அவள் மேல் அதிகமான அசைக்க முடியாத பக்தி கிட்டிட அருள் மழை பொழிய பிராத்தனைகள்.
தேவி மானச பூஜை 64 உபசாரங்கள் மற்றும் அதன் விளக்கத்துடன் ஒரு பார்வை:-
ஐங்கார-ஹ்ரீங்கார-ரஹஸ்யயுக்த - ஶ்ரீங்கார-கூ³டா⁴ர்த²-மஹாவிபூ⁴த்யா । ஓங்கார-மர்ம-ப்ரதிபாதி³நீப்⁴யாம் நமோ நம: ஶ்ரீகு³ருபாது³காப்⁴யாம் !!
ஶீ லலிதா தியானம்:-
ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத்
தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம்
பாணிப்யாம்-அளிபூர்ண-ரத்ன-சஷகம்-ரக்தோத்பலம் பிப்ரதீம்
சௌம்யாம் ரத்ன-கடஸ்த-ரக்தசரணாம் த்யாயேத் பராம் அம்பிகாம்!!
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத பாசாங்குச புஷ்ப பாண சாபாம்
அணிமாதிபிராவ்ருதாம் மயூகை: ரஹமித்யேவ விபாவயே பவானீம்.
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித லஸத்ஹேம பத்மாம் வராங்கீம்
ஸர்வாலங்கார யுக்தாம் ஸதத மபயதாம் பக்தநம்ராம் பவானீம்
ஸ்ரீவித்யாம் சாந்தமூர்த்திம் ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத் ப்ரதாத்ரீம்.
என்று அம்பாளை தியானம் செய்து இந்த ஸ்வரூபத்திலேயே
அவளை
"ஶீ லலிதா மஹாதிரிபுரசுந்தரிம் அம்ருத சைதன்ய மூர்த்திம் த்யாயாமி!
ஆவாஹயாமி !" என்று மனதில் ஆவாஹனம் செய்துகொண்டு இந்த 64 உபசாரங்களையும் மானசீகமாக செய்வது அந்தர்யாகம் எனப்படும் தேவி மானச பூஜை.
64 உபசாரங்கள் :-
1.பாத்யம் -கல்பயாமி
திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2.ஆபராணாவரோபணம் கல்பயாமி-- -
நகைகளை கழற்றுதல்
.
3.ஸுகந்ததைலாப்யங்கம் கல்பயாமி-
வாஸனை எண்ணை உடம்பு முழுவதும் தேய்த்துவிடல்
4)மஞ்ஜனசாலாப்ரவேசனம் கல்பயாமி-
குளியலறைக்கு அழைத்துச் செல்லுதல்.
5)மஞ்ஜனசாலாமணிபீடோசனம் கல்பயாமி-
குளியலறையிலிலுள்ள மணிமயஆஸனத்தில் அம்பாளை அமர்த்துதல்
6). திவ்யஸ்னானீயோத்ஸ்வம் -கல்பயாமி:-
ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில்
தேய்த்துவிடல்
7)உஷ்ணோதகஸ்நானம் -கல்பயாமி-
வென்னீரில் அம்பாளை குளிக்கவைத்தல்
8.) கனககலசச்யுதஸகலதீர்த்தாபிஷேகம்-கல்பயாமி -
தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9) தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் கல்பயாமி-
வெளுத்ததுணியால் உடம்பு துடைத்துவிடல்
10.) அருணதுகூலபரிதானம் -கல்பயாமி-
அம்பாளுக்கு
சிவப்பு பட்டை உடுத்தி விடுதல்
11)அருணகுசோத்தரீயம் கல்பயாமி-
சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12.) ஆலேபமண்டபப்ரவேசனம் -கல்பயாமி--
அலங்கார அறைக்கு அழைத்துச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் கல்பயாமி--
மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் அம்பாளை அமர வைத்தல்
14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்த ஸர்வாங்கேண விலேபனம் -கல்பயாமி-
அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசி விடுதல்
15) கேசபாரஸ்ய காலாகருதூபம் கல்பயாமி-
தலை காய்வதற்கும், வாசனைக்கும் அம்பாளின் கூந்தலுக்கு தூபமிடுதல்
16).மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலா கல்பயாமி-
மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும்புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகளை அம்பாளுக்கு அணிவிப்பது
17). பூஷண மண்டபப்ரவேசனம் கல்பயாமி -
நகைகள் அணிவதற்காக உள்ள அறைக்கு அழைத்து செல்வது
18). பூஷண மண்டமணிபீடோபவேசனம் கல்பயாமி-
முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் அமரவைப்பது
19). நவமணிமகுடம் கல்பயாமி-
புதிதான ரத்ன கிரீடம் அணிவிப்பது
20) சந்த்ர சகலம் கல்பயாமி-
சந்த்ர கலை அணிவிப்பது
21).ஸீமந்தஸிந்தூரம் கல்பயாமி-
வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம் கல்பயாமி-
நெற்றிப்பொட்டில் ரத்னம் வைத்துவிடுவது
23). காலாஞ்ஜனம் கல்பயாமி-
அம்பிகையின் கண்களூக்கு
கறுப்பு மை இட்டுவிடுவது
24. வாளீயுகளம் கல்பயாமி-
காதுகளில் அணியும் வாளி என்ற நகை (ஜிமிக்கி )அணிவிப்பது
25.) மணிகுண்டலயுகளம் -கல்பயாமி-
ரத்ன குண்டலங்கள் அணிவிப்பது
26). நாஸாபரணம் கல்பயாமி-
அம்பாளுக்கு
மூக்குத்தி - புல்லாக்கு அணிவிப்பது
27) அதரயாவகம்
-கல்பயாமி-
அம்பிகையின்
உதட்டிற்கு சிவப்புசாயம் பூசிவிடுவது
28). ப்ரதமபூஷணம் -
கல்பயாமி-
மாங்கல்யம் அணிவிப்பது
29. கனகசிந்தாகம் -கல்பயாமி-
தங்கமயமான புளியிலை போன்ற நகையை அணிவிப்பது
30). பதகம் கல்பயாமி-
மார்புகளில் பதக்கம் அணிவிப்பது
31). மஹாபதகம் -கல்பயாமி-
நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம் அணிவிப்பது
32). முக்தாவலி -கல்பயாமி-
முத்துமாலை அணிவிப்பது
33). ஏகாவளி கல்பயாமி-
கழுத்தில் ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
அணிவிப்பது
34). சன்னவீரம் கல்பயாமி-
ஒரு ஆபரண விசேஷம் அணிவிப்பது
35). கேயூரயுகள சதுஷ்டயம் -கல்பயாமி-
ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள் அணிவிப்பது
36). வலயாவளி -கல்பயாமி-
கைகளில் வளைகள் அணிவிப்பது
37. ஊர்மிகாவளி -கல்பயாமி-
விரல்களில் மோதிரங்கள்
அணிவிப்பது
38. காஞ்சீதாம கல்பயாமி-கல்பயாமி-
அம்பிகையின் இடுப்புக்கு
ஒட்டியாணம் அணிவிப்பது
39. கடிஸூத்ரம் -கல்பயாமி-
இடு்ப்பில் அரைஞாண்கயிறு அணிவிப்பது
40.) ஸௌபாக்யாபரணம் கல்பயாமி-
அரை மூடி(அரசிலை) அணிவிப்பது
41. பாதகடகம் கல்பயாமி- காலகளில்
கால்காப்பு அணிவிப்பது
42. ரத்னநூபுரம் -கல்பயாமி-
கால்களுக்கு ரத்னமயமான கொலுசு அணிவிப்பது
43. பாதாங்குளீயகம் -கல்பயாமி- கால் விரல்களில்
கால்மெட்டி அணிவிப்பது
44. ஏககரேபாசம் -கல்பயாமி-
ஓரு கையில் பாசக்கயிறு கொடுப்பது
45. அன்யகரேஅங்குசம் கல்பயாமி -
மற்றொரு கையில் அங்குசம் கொடுப்பது
46. இதரகரே புண்ட்ரேக்ஷுசாபம் -கல்பயாமி-
வேறொருகையில் கரும்பு வில்லை கொடுப்பது
47.அபரகரே புஷ்பபாணம் கல்பயாமி-
மற்றொருகையில் புஷ்பபாணங்களை கொடுப்பது
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே கல்பயாமி -
அம்பாளின் பாதங்களில் ரத்னமயமான பாதுகைகளை அணிவிப்பது
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபி: ஸஹ மஹா சக்ராதிரோஹணம் கல்பயாமி-
தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஆரோஹனம் செய்து அருள்வது
50. காமேஸ்வராங்கபர்யங்கோபவேசனம் -கல்பயாமி-
காமேச்வரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் அவருடன் கூடி இருத்தல்.
51. அம்ருதாஸவ சஷகம் கல்பயாமி-
பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம் -கல்பயாமி-
ஆசமனம் செய்வித்தல்
53. கற்பூர வீடிகா கல்பயாமி-
பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின தாம்பூலம், (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.) அர்ப்பணம் செய்வது.
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம் கல்பயாமி-
ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்புடன் காட்சி தருவது
55. மங்களாரார்த்திகம் -கல்பயாமி-
தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம் அம்பாளுக்கு காண்பித்தல்
56. சத்ரம் கல்பயாமி-
குடை. அர்ப்பணிப்பது
57. சாமரயுகளம் -கல்பயாமி-
இரண்டு வெண்சாமரங்கள் வீசுவது
58. தர்பணம் -கல்பயாமி-
கண்ணாடி அம்பிகைக்கு காண்பிப்பது
59. தாளவ்ருந்தம் கல்பயாமி-
விசிறி விடுவது
60. கந்தம் கல்பயாமி-
சந்தணம் அணிவிப்பது
61. புஷ்பம் கல்பயாமி-
பூக்கள் அர்ப்பணம் செய்வது
62. தூபம் கல்பயாமி-
சாம்பிராணிதூபம் அம்பாளுக்கு காட்டுவது
63. தீபம் கல்பயாமி-
நெய்தீபம் காட்டுவது
64. நைவேத்யம் -கல்பயாமி-
நிவேதனம் செய்வது
இவை "சதுஷ்சஷ்டியுபசாராஜ்யா"
என்று வர்ணிக்கப்படும் லலிதாம்பிகைக் கேற்பட்டதான 64 உபசாரங்கள்.
இந்த மானச பூஜையை ஒவ்வொரு ஆதார சக்ரங்களிலும் அனுபவித்து பரமானந்தம் பெறுவோம்.
நமோ தேவ்யை.
Comments
Post a Comment