Posts

Showing posts from October, 2018

அன்புக்கும் அருளுக்கும் பாலமுருகன்

Image
அன்புக்கும் அருளுக்கும் குறை வைக்காத பால முருகன்... அழகுக் குமரன் அவனை நாளும் தரிசிக்கக் குறையொன்றும் இல்லையே..! கந்த சஷ்டியில், 'சூரர்' களை வதைத்த திருமுகத்துக்கு உரியவரான குமரனின் தரிசனத்தை பார்ப்போமே... 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பார்கள். தெய்வம், தன்னை அன்புடன் கொண்டாடி போற்றுபவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வரமாகத் தருவது போலவே- குழந்தையும் தன்னிடம் அன்பு காட்டி கொஞ்சுபவர்க்கெல்லாம், தன்னிடமுள்ள எது ஒன்றையும் கேட்காமலேயே கொடுக்கக்கூடியது. 'இதனால்தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று கூறியிருக்கிறார்கள். அந்த தெய்வமே குழந்தை வடிவில் இருந்துவிட்டால்..!!!, அங்கே அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமே இல்லை. அப்படிக் குழந்தை வடிவத்தில் நம்மால் கொண்டாடப்பெறும் தெய்வங்கள் சைவத்தில் சிவகுமாரனும், வைணவத்தில் வசுதேவ குமாரனான கண்ணனுமே ஆவர். அழகுக்கும் தமிழுக்கும் ஒரு வடிவமாகத் திகழ்பவர் முருகப் பெருமான். முருகனைக் குழந்தையாக அன்பு செலுத்தி, அவன் புகழ் பாடிப் பரவசப்பட்டவர்கள் பலர். அக

தியாஜ்யம் என்றால் என்ன..!?

Image
நாம் தினசரி தியாஜ்யம் என்ற சொல்லை காலேண்டர் இல் பார்த்து இருப்போம் . தியாஜ்யம் என்ற சொல்லுக்கு விலக்கப்படும் நேரம் என்று பொருள் அது விஷ நாழிகை ஆகும் தினசரி ஒரு முஹுர்த்தம் (மூன்றே முக்கால் நாழிகை ) தியாஜ்யம் வரும் . ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடம் .அறுபது நாழிகை ஒரு நாள் . ஞாயிறு 32 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். திங்கள் , புதன் 42 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். செவ்வாய் , வியாழன் 31 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். வெள்ளி 21 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். சனி 14 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். இதே போல் நட்சத்திரம் மற்றும் திதி க்கும் தியாஜ்யம் உண்டு. மேலும் மாத தியாஜ்யம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் முகூர்த்த நிர்ணயத்தில் நட்சதிர தியாஜ்யம், திதி தியாஜ்யம், வார தியாஜ்யம், லக்ன தியாஜ்யம் என பல தியாஜ்யங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இவை எதற்கு பார்க்க வேண்டும் எனில் சில காரியங்கள் இந்த லக்ன, திதி, நட்சத்திர, வாரத்தில் செய்ய வேண்டும் என்பதே, தியாஜ்ய காலங்களில் அவற்ற

தோஷங்கள் நீங்கும் பிரதோஷ வழிபாடு

Image
தோஷங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு ஆகும். சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடும் பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில்

பிரதோஷ வழிபாடு பொருட்கள் மற்றும் பலன்கள்

Image
பிரதோஷ வழிபாட்டின் போது அபிஷேக பொருட்களால் விளையும் நன்மைகள் சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம். 1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 2. தயிர் - பல வளமும் உண்டாகும் 3. தேன் - இனிய சாரீரம் கிட்டும் 4. பழங்கள் - விளைச்சல் பெருகும் 5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும் 6. நெய் - முக்தி பேறு கிட்டும் 7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும் 8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும் 9. எண்ணெய் - சுகவாழ்வு 10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம் 11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும் You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

சிவாலய அன்னாபிஷேகம்

Image
சிவாலய அன்னாபிஷேகம் அன்னம், பரபிரம்மம் என்பர். அதாவது, 'உணவே தெய்வம்' என்பது, இதன் பொருள். இதனால் தான், சமையல் செய்யும் போது, கெட்ட எண்ணங்களை தவிர்த்து, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும் என்று கூறுவர். சமையலின் போது, மனதில் எந்த மாதிரி எண்ணங்கள் ஓடுகிறதோ, அது, சமைக்கும் உணவுக்கு தாவும்; அந்த உணவை சாப்பிடுவோருக்கு அந்த எண்ணங்களின் தாக்கம் பாயும். இதனால் தான், சமையலை, 'தபஸ்' என்றும், சமையல்காரர்களை, தபசுப்பிள்ளை என்பர். 'தபஸ்' என்றால் தவம். முனிவர் ஒருவர், இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், மூச்சடக்கி, பேச்சடக்கி, உணவை மறந்து, நெருப்பின் மீது நின்று, இன்னும் எத்தனை வித்தைகள் உண்டோ, அத்தனையையும் செய்து, மனதை ஒருமுகப்படுத்தி, தவம் செய்வார். இதே போல, சமையலின் போதும், கவனம் சிதறாமல், மனம் ஒன்றி செய்தால் தான், அது ருசிக்கும். இப்படி நல்ல எண்ணங்களுடன், மந்திரங்கள் சொல்லி சமைக்கப்படும் உணவைத் தான், கோவில்களில் சுவாமிக்கு படைக்கின்றனர். கோவில் மடப்பள்ளியில் சமைப்பவர் மனதில், வக்ர எண்ணம் இருந்தால் அது, கடவுளைக் கோபப்படுத்தி, ஊரையே பாதிக்கும். இதற்காகத்தான், அன்

சோமவார பிரதோஷம்

Image
சோமவார பிரதோஷம் நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு 🌷பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். 🌷 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.  எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். விரதமுறை : 🌷பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும். பிரதோஷ பலன்கள் : 🌷 தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். 🌷 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். 🌷 பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில

அன்னாபிஷேகம்

Image
சோற்றுக்குள்_சொக்கன் * **************************** ஐப்பசி பௌர்ணமி- மாபெரும் அந்தஸ்து தரும் அன்னாபிஷேகம் (24/10/18) “சோறு கண்ட இடம் சொர்கம்” என்று. அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்.” நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான் . சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். பின் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை    பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம். சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர். இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் –  சொர்க்கம் கிடை

மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா...!!

Image
மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா..?? பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்பது தெரியும். ஆனால் அவை ஒலியை நன்கு கேட்கும் திறனை கொண்டிருக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தரையில் நடமாடும் விலங்கினங்கள் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் பாம்பின் கீழ்த்தாடையில் அமைந்துள்ள உருளையான ஓர் அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பல் எப்படி அலைகளுக்கு ஏற்ப அசைகிறதோ அது போல் இந்த உருளையான அமைப்பு ஒலி அதிர்வுகளுக்கு ஏற்ப அசைகிறது. இதனால்தான் மண்ணுக்குள் புதைந்துள்ள பாம்புகள் கூட அதிர்வுகள் மூலம் எளிதில் நடமாட்டத்தை அறிந்து கொள்கின்றன. பாம்புக்கு செவிப்பறை இல்லாத போதும், செவிச்சுருள் பகுதி உள்ளது. அதிர்வுகள் இப்பகுதியில் உணரப்பட்டவுடன் அது, நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மகுடி ஒலிக்கு பாம்பு ஆடாது. மகுடியை ஆட்டுவதாலும், பாம்பாட்டி கால்களை அசைப்பதாலும்தான் பாம்பு ஆடுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பாம்பால் மகுடியின் சத்தத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதே தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. பாம்பின் கீழ்த்தா

பைரவர் வழிபாடு

Image
வைரவர் வழிபாட்டு விரத நாட்கள் மூன்று செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம். சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம். ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம். வீரபத்திரர் வழிபாட்டு விரத நாள் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் வீரபத்திரரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

இராகு கேது தோஷம் நீங்க

Image
ராகு-கேது பலன்கள் பெற சில பரிகார பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம். பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம். கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கலாம். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தலாம். தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மாலை சாத்தி வழிபாடு செய்யலாம். பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒரு பொழுது மட்டும் விரதம் இருக்கலாம். அன்னதானம் செய்ய விரும்பவர்கள் புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கலாம். வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடலாம். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும் என்பது அவசியம். அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடலாம். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

சிவபெருமானிடம் இருந்து நாம் ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

Image
சிவபெருமானிடம் இருந்து நாம் ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் சூப்பர்மேன் விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! சிவனிடம் வருமானம், வரம் வேண்டுவது மற்றுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது அன்றாட வாழ்விலும், தொழில் முறைகளிலும் நல்ல முன்னேற்றம் காண உதவும். சிவனின் படர்ந்த ஜடாமுடியில் இருந்து, ருத்ரதாண்டவம் ஆடும் அவரது காலடி வரை, நமது வாழ்வியில் குறித்தும், பண்பு நலன்கள் குறித்தும் பல விஷயங்கள் சூசகமாகக் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7 விஷயங்கள்!!! இயல்பாகவே மற்ற கடவுள்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சிவபெருமான் மிகவும் எளிமையான தோற்றம் கொன்றவர். ஆனால், மிகவும் உடல்திறன் அதிகமாகவும், திடகாத்திரமாகவும் காட்சியளிக்கும் கடவுளாக திகழ்வார் சிவபெருமான். இதிலிருந்து, எளிமையாக இருப்பவர்களின் வாழ்க்கை தான் நல்ல உயர்வான, திடமான நிலை

விளக்கேற்றுவதன் பலன்கள்

Image
விளக்கேற்றும் பலன்கள் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் பலன் :  சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.  வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.  ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.  புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் .  ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .  கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .  மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் .  பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.  தீபமேற்றும் முகத்தின் பயன்கள் :  ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்  இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்  மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்  நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்  ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும

ஐயப்பனின் அறுபடை வீடுகள்

Image
ஐயப்பனின் அறுபடை வீடுகள்... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ சபரிமலை மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார். இந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்கு ‎கிடைக்கும் இணையற்ற அறிவு, சமக்கிருத மொழியில், தத் த்வம் ‎அசி, அதன் பொருளானது "நீயும் ஒரு கடவுள்" என்பதற்கான ‎ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ‎ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று ‎அழைக்கிறார்கள். எருமேலி எருமேலி கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது கோட்டயம் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மணிமாலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். ஆரியங்காவு பரசுராமன் நிறுவியதாகக் கருதப்படும் ஐந்து தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன

கோயில் வழிபாடு

Image
ஆலய வழிபாடு செய்வது *:-*:-*:-*:-*:-*::-*:-*:-*:-*:-*:-*:-* ️  இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ள தென்றும் எனவே ஆலயங்களிலே சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து  போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். ️  பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?  பாரிடை ஐந்தாய்ப

சிவாய நம...

Image
சிவாய நம_ எனும் திருவைந்தெழுத்து ஓதுவார் அடையும் இன்பம்... :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-* சிவனை எமக்கு புறத்தே நினைவூட்டும் சின்னங்களாக விபூதியும் உருத்திராக்கமும் விளங்க அகத்தே நமக்கு அருள்தரும் மந்திரமாக திழருவைந்தெழுத்து உள்ளது. சைவர்கள் நியமமாகச் செபிக்கும் மந்திரமாக இது உள்ளது. நமசிவா ய என்னும் ஐந்தெழுத்தைக் கொண்ட இம்மந்திரம் நினைப்பவனைக் காப்பது என்னும் பொருள் கொண்டது. நமச்சிவாய அல்லது சிவாயநம என்று சொன்னால் துன்பம் எல்லாம் நீங்கிவிடும். சிவாயநம வென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்று திருவைந்தெழுத்தின் சிறப்பை ஓளவையார் போற்றுகிறார். பிறவிப் பிணியை நீக்க விரும்புவோர்க்கு உரிய புகலிடமாக உள்ள சைவசமயம் கூறும் நான்கு பாதங்களான சரியை கிரியை யோகம் ஞானமாகிய படிகளிலே பொருந்தி ஒழுகி சமாதிநிலை சீவன் முத்திநிலைகளில் சேர்ந்தவர்களுக்கு இறுதியான நன்னெறியென கூறப்படுவது பஞ்சாட்சர மந்திரமாகும். சிவாயநம என்று ஓதினால் பிறவித் துன்பத்தின் வழி செல்லவிடாது முத்தி வழியிலே செலுத்தும். நமச்சிவாய என ஓதினால் அது பிறவிக்கு வழிகா

மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்

Image
மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்... 🌺🌼🏵️🌷🌺🌼🏵️🌷🌺🌼🏵️ ➖➖➖➖➖➖➖➖➖➖➖ கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்! துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!! பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,  லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும்  அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க  வைப்பவளே! அருள்புரிவாயாக. You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

துர்க்கா தேவி மந்திரம்

Image
துர்க்கா தேவி மந்திரம்... 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி மநோக்ருஹ மந்மத மத ஜிஹ்வாபிஸாசீருத் ஸாதயோத் ஸாதய ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய ஹூம் பட் ஸ்வாஹா You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

சகலகலா வல்லி சரஸ்வதி தேவி

Image
சகலகலா வல்லி சரஸ்வதி தேவி நாமமாலா ... :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-* சகல கலைகளிலும் சிறக்க வைக்கும் தேவியின் சகலகலாவல்லிமாலை வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளி த்துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே! நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே! அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே! தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே! பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தா

கேதாரேஸ்வரர்

Image
கேதாரேஸ்வர பூஜை... 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 🕉️ ஐப்பசி மாதம் அமாவாசை கூடிய நன்னாளில் சிறந்த இந்தக் கேதாரேஸ்வர விரத பூஜையைச் செய்ய வேண்டும் என்பது ஸ்காந்த புராண வாக்கு. 🕉️ இந்தக் கேதாரேஸ்வரக் கதையை கேட்பதால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். ஆரோக்கியம் ஆயுள் புகழ் அனைத்தும் விருத்தியாகும். 🕉️ இந்த விரத பூஜையை இருபத்தொரு வாரங்கள் தொடர்ந்து செய்துவந்தால் பரிபூர்ண பலன் இகத்திலும் பரத்திலும் உடன் சித்திக்கும் என்பது எப்பெருமான் வார்த்தையாகக் கௌதமர் கூறுகிறார். 🕉️ மேலும் இந்தப் பூஜையால் சகல பாக்கியத்தைப் பெறுவது மட்டுமல்ல மிகுந்த சோபையையும் விரும்பிய பயன்களையும் பெறுவது திண்ணம். சிவலோகத்திலும் சிறப்படையலாம். 🕉️ இந்தப் பூஜையை அடக்க ஒடுக்கத்தோடு எந்த வர்ணத்தவராயினும் செய்யலாம். 🕉️ அதாவது புரட்டாதி மாதம் அஷ;டமதிதி சுக்கில பட்சத்திலிருந்து இந்தப் பூஜையைத் தொடங்கி அமாவாசை வரை செய்ய வேண்டும் என்கிறது ஸ்காந்தம். 🕉️ இருபத்தொரு மஞ்சள் சரடுகளைக் கையில் கங்கணமாகக் கட்டிக்கொண்டு சுத்தமான இடத்தில் ஒரு கும்பத்தை பூஜையில் உள்ள படி அலங்கரித்து வைத்து பட

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்

Image
புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன்... புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் வழக்கம். மேலும் புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உள்ள காரணத்தை பார்க்கலாம்... ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 6-வது ராசியாக வருவது கன்னி ராசி. சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழைந்து வெளிவரும் கால அளவே மாதமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சூரியன் கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் புரட்டாசி மாதம் ஆகும். கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் மகாவிஷ்ணுவின் சொருபம். எனவே தான் புரட்டாசி மாதத்தில், பெருமாளை வழிபடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது. புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், அந்த மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து துளசி நீரை பருக வேண்டும் என்று சாஸ்திரம் செல்கிறது. புரட்டாசி மாதம் என்

சிவ ஆகம விதிகளின்படி மணி அடித்தல்

Image
சிவ ஆகம விதிப்படி மணி அடித்தல்.. :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-* அபிஷேகத்தின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு. நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தின் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு. நர்த்தனத்தின் முடிவு – இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும். கர்ஷணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்.  தூப, தீபம் காட்டும் போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும். மணி நாத கிரமம் :1 அடி; மோக்ஷம், 2-அடி: போகம்,3-அடி : சகல ஸித்தி. புண்யாஹவாசனம், தூப-தீபம் நைவேத்யம், பலி ஆகிய காலங்களில் 2-அடி அடிக்கலாம். தீபாரதனையின்போது (விரைவாக) 1-அடி அடிக்க வேண்டும். மற்ற தேவைக்கு 3-அடி அடித்து பெரிய மணி நாதம் எழுப்ப வேண்டும். இதுவே வீட்டில் பூஜை செய்து மணி அடிக்கும் பொழுது ,சாமிக்கு நைவேத்தியம் படைத்து பின்னர் தான் மணி அடிக்க வேண்டும்.  தெய்வங்களுக்கு நைவேத்தியம் எதுவும் செய்யாமல்... மணி அடிக்க கூடாது.  அப்படி நைவேத்தியம் செய்ய இயலாத

தமிழ் கடவுள் முருகன்

Image
தமிழ் கடவுள் முருகன்... ➖➖➖➖➖➖➖➖➖➖ சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. இவருக்கு கணங்களின் அதிபதியான கணபதி அண்ணனாகவும், வைணவக் கடவுளான திருமால் மாமனாகவும் அறியப்படுகிறார்கள். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகள். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது. முருகப்பெருமான் தமிழ்க் கடவுள்.  சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர். முருகன் ஓம் எனும் பிரணவ

காசியில் கருடன், பல்லி

Image
காசியில் கருடன் பறப்பதில்லை, பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா .!!! 🦎🦅🦎🦅🦎🦅🦎🦅🦎🦅 ➖➖➖➖➖➖➖➖➖➖ இதற்க்கு புராணங்கள் சொல்லும் பதில் என்னவென்றால். .  ஒருமுறை ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக சிவலிங்கம் வேண்டுமென்றும். ,அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படியும் தெரிவித்தார்.  அனுமனும் காசியை அடைந்தார். எங்கு பார்த்தாலும் லிங்கங்கள் இருந்தன. . அவற்றில் எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார்.  அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.  அப்போது காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.  அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அதற்க்காக தாங்கள் இவரை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்