சோமவார பிரதோஷம்

சோமவார பிரதோஷம்



நினைத்ததை நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு

🌷பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும்.

🌷 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.  எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

விரதமுறை :

🌷பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறு பூசி சிவ நாமத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் மாலை பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.

பிரதோஷ பலன்கள் :

🌷 தினந்தோறும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை நேரத்தில் சிவனை தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

🌷 சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.

🌷 பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

🌷 காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்பது ஐதீகம்.

🌷 பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

🌷 பிரதோஷம் திங்கட்கிழமையில் வரும்போது சோம பிரதோஷம் என்றும், சனிக்கிழமையில் வரும்போது சனிப் பிரதோஷம் என்றும் கூறுவர். இவ்விரண்டு பிரதோஷ நாட்களும் மிகச் சிறப்பானது.

🙏தென்னாடுடைய சிவனே போற்றி!🙏
🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!🙏

🙏🙏🙏சிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை