கேதாரேஸ்வரர்
கேதாரேஸ்வர பூஜை...
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
🕉️ ஐப்பசி மாதம் அமாவாசை கூடிய நன்னாளில் சிறந்த இந்தக் கேதாரேஸ்வர விரத பூஜையைச் செய்ய வேண்டும் என்பது ஸ்காந்த புராண வாக்கு.
🕉️ இந்தக் கேதாரேஸ்வரக் கதையை கேட்பதால் சகல சௌபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். ஆரோக்கியம் ஆயுள் புகழ் அனைத்தும் விருத்தியாகும்.
🕉️ இந்த விரத பூஜையை இருபத்தொரு வாரங்கள் தொடர்ந்து செய்துவந்தால் பரிபூர்ண பலன் இகத்திலும் பரத்திலும் உடன் சித்திக்கும் என்பது எப்பெருமான் வார்த்தையாகக் கௌதமர் கூறுகிறார்.
🕉️ மேலும் இந்தப் பூஜையால் சகல பாக்கியத்தைப் பெறுவது மட்டுமல்ல மிகுந்த சோபையையும் விரும்பிய பயன்களையும் பெறுவது திண்ணம். சிவலோகத்திலும் சிறப்படையலாம்.
🕉️ இந்தப் பூஜையை அடக்க ஒடுக்கத்தோடு எந்த வர்ணத்தவராயினும் செய்யலாம்.
🕉️ அதாவது புரட்டாதி மாதம் அஷ;டமதிதி சுக்கில பட்சத்திலிருந்து இந்தப் பூஜையைத் தொடங்கி அமாவாசை வரை செய்ய வேண்டும் என்கிறது ஸ்காந்தம்.
🕉️ இருபத்தொரு மஞ்சள் சரடுகளைக் கையில் கங்கணமாகக் கட்டிக்கொண்டு சுத்தமான இடத்தில் ஒரு கும்பத்தை பூஜையில் உள்ள படி அலங்கரித்து வைத்து பட்டு வஸ்திரத்தாலும் இருபத்தொரு சரடுகளாலும் சுற்றி அதில் நாணயம் போட்டு அல்லது நவரத்தினம் தங்கம் பவளம் போட்டு சந்தனம் புஷ;பம் கொண்டு முறைப்படி அர்ச்சித்து இருபத்தொரு மறையோர்களையும் வழிபட்டுப் பூஜையைச் செய்ய வேண்டும்.
You can join to my public group to learn more about spiritual information : -
Comments
Post a Comment