விளக்கேற்றுவதன் பலன்கள்

விளக்கேற்றும் பலன்கள்


பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் பலன் : 
சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். 
வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும். 
ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும். 
புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும் . 
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் . 
கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் . 
மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும் . 
பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும். 
தீபமேற்றும் முகத்தின் பயன்கள் : 
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும் 
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும் 
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும் 
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும் 
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும் 
தெய்வத்திற்கு விளக்கேற்ற உகந்த எண்ணெய் : 
கணபதி - தேங்காய் எண்ணெய் 
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய் 
மகாலட்சுமி - பசுநெய் 
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய் 
ருத்திரர் - இலுப்பெண்ணெய் 
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய் 
விளக்குக்கு ஊற்றும் எண்ணையும் அதன் பயன்களும் : 
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும் 
பசுநெய் - சகல செல்வமும் பெருகும். 
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது 
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும். 
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு 
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது 
தீபம் ஏற்றும் திசைகளும் அதன் பயன்களும் : 
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும் 
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும் 
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி. 
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை ,சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும். 
விளக்கை துலக்க வேண்டிய நாட்கள் மற்றும் அதன் பயன்கள் : 
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும் 
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும ் 
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும் 
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும் 
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. 
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. 
இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். 
எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது 
திரிகளும் அதன் பயன்களும் : 
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. 
பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரி - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும். 
வாழைத் தண்டின் நாரில் செய்த திரி- முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும். 
தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரி- முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும். 
வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரி- செல்வம் பெருகும். 
புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரி- அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும். 
சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும். 
வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது. 
வளம் பெருக்கும் அகல்: 
கார்த்திகைமாதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பது ஐதீகம். 
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு. 


You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை