தியாஜ்யம் என்றால் என்ன..!?
நாம் தினசரி தியாஜ்யம் என்ற சொல்லை காலேண்டர் இல் பார்த்து இருப்போம் .
தியாஜ்யம் என்ற சொல்லுக்கு விலக்கப்படும் நேரம் என்று பொருள் அது விஷ நாழிகை ஆகும்
தினசரி ஒரு முஹுர்த்தம் (மூன்றே முக்கால் நாழிகை ) தியாஜ்யம் வரும் .
ஒரு நாழிகை என்பது இருபத்தி நான்கு நிமிடம் .அறுபது நாழிகை ஒரு நாள் .
ஞாயிறு 32 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம்.
திங்கள் , புதன் 42 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம்.
செவ்வாய் , வியாழன் 31 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம்.
வெள்ளி 21 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம்.
சனி 14 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம்.
இதே போல் நட்சத்திரம் மற்றும் திதி க்கும் தியாஜ்யம் உண்டு.
மேலும் மாத தியாஜ்யம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
முகூர்த்த நிர்ணயத்தில் நட்சதிர தியாஜ்யம், திதி தியாஜ்யம், வார தியாஜ்யம், லக்ன தியாஜ்யம் என பல தியாஜ்யங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
இவை எதற்கு பார்க்க வேண்டும் எனில் சில காரியங்கள் இந்த லக்ன, திதி, நட்சத்திர, வாரத்தில் செய்ய வேண்டும் என்பதே, தியாஜ்ய காலங்களில் அவற்றிக்கு உரிய சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
சித்தரை மாதத்தில் அஷ்டமி, ஏகாதசி திதியும், அசுவனி, ரோகினி நட்சதிரமும் கும்ப லக்னமும் இணைந்து வருவது.
வைகாசி மாதத்தில் துவாதசி திதியும், சித்திரை, சுவாதி, உத்தராடம் நட்சதிரங்களும், மீன லக்னமும் சேர்ந்து வருவது.
ஆனி மாதத்தில் திரயோதசி திதியும் புனர்பூச நட்சதிரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது.
ஆடி மாதத்தில் ஷஷ்டி திதியும், பூரம், அவிட்டம் நட்சதிரங்களும், மிதுன லக்னமும் சேர்ந்து வருவது.
ஆவணி மாதத்தில் பூராட நட்சதிரமும், மேஷ லக்னமும் சேர்ந்து வருவது.
புரட்டாசியில் ஸப்தமி திதியும், சதயம், பூரட்டாதி, ரேவதி நட்சதிரமும், கன்னி லக்னமும் சேர்ந்து வருவது.
ஐப்பசியில் நவமி திதியும், உத்திரட்டாதி நட்சதிரமும், விருட்சக லக்னமும் சேர்ந்து வருவது.
கார்த்திகை மாதத்தில் பஞ்சமி திதியும், கிருத்திகை, மிருக சீரிடம், பூசம் நட்சதிரங்களும், துலாம், மகர லக்னங்களும் சேர்ந்து வருவதும்.
மார்கழி மாதத்தில் துவிதியை, நவமி திதிகளும், விசாகம் அனுசம், பூரட்டாதி திதிகளும், லக்னம் எதுவும் இல்லை.
தையில் மாதத்தில் பிரதமை திதியும், திருவாதிரை, ஆயில்யம், அஸ்தம் நட்சதிரங்களும், கடக லக்னமும் சேர்ந்து வருவது.
மாசி மாதத்தில் தசமி, சதுர்தசி திதியும், திருவோணம், மிருக சீரிடம், மூலம் நட்சதிரங்களும், லக்னம் எதுவும் இல்லை.
பங்குனி மாதத்தில் சதுர்த்தசி திதியும், பரணி, கேட்டை நட்சதிரங்களும், சிம்ம லக்னமும் சேர்ந்து வருவது.
அந்த அந்த திதி, நட்சத்திர, லக்னக்களுக்கு கொடுக்கப்பட்ட சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும்.
உதாரணமாக புது மனைபுக ரோகிணி நட்சதிரமும், துவிதியை திதியும் ரிஷபம் லக்னமும் சுபம் என இருக்கும், ஆனால் மாத தியாஜ்யத்தில் இவை வரும் நாட்கள் இவை விலக்கப்பட வேண்டும் என்பதே இதன் விளக்கம்.
You can join to my public group to learn more about spiritual information : -
You can join to my public group to learn more about spiritual information : -
Comments
Post a Comment