அன்னாபிஷேகம்

சோற்றுக்குள்_சொக்கன்*
****************************


ஐப்பசி பௌர்ணமி-
மாபெரும் அந்தஸ்து தரும் அன்னாபிஷேகம் (24/10/18)
“சோறு கண்ட இடம் சொர்கம்” என்று.
அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்.”
நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான் . சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். பின்
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை    பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம்.

சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர். இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் –  சொர்க்கம் கிடைக்கும் என்பதும்  ஐதீகம்.

மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார். அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து, அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும் அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.
சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் நாளன்று,  சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின்  அருளை பெற்றிடுவோம்.
  *ஓம் நமசிவாய நம!*
   *ஓம் நமசிவாய நம!*
   *ஓம் நமசிவாய நம!*


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை