ஐயப்பனின் அறுபடை வீடுகள்

ஐயப்பனின் அறுபடை வீடுகள்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖




சபரிமலை

மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி, எல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார். இந்தக் கோவிலுக்கு புனிதப்பயணம் புரிந்து வரும் பக்தர்களுக்கு ‎கிடைக்கும் இணையற்ற அறிவு, சமக்கிருத மொழியில், தத் த்வம் ‎அசி, அதன் பொருளானது "நீயும் ஒரு கடவுள்" என்பதற்கான ‎ஞானமே. இதனால் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ‎ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுவாமி என்று ‎அழைக்கிறார்கள்.

எருமேலி

எருமேலி கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது கோட்டயம் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் மணிமாலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இங்கு அய்யப்பன், வேட்டை நிமித்தமாக கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார்.

ஆரியங்காவு

பரசுராமன் நிறுவியதாகக் கருதப்படும் ஐந்து தலங்களில் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலும் ஒன்று. இங்கு அய்யப்பன் சௌராட்டிர குலப் பெண்னான புஷ்கலா தேவியுடன் அரசராக காட்சி அளிக்கிறார். கோயிலின் இடப்புறம் அய்யப்பனின் காவல் தெய்வங்களாகிய கருப்பசாமியும் கருப்பாயி அம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒற்றைக்கல்லில் தீர்த்த திருக்கல்யாண மண்டபம். திராவிட கட்டிடக் கலைப் பாணியில் கட்டப்பட்டது

அச்சன்கோவில்

அச்சன்கோவில் என்னும் ஊர், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது புனலூர் நகரத்தில் இருந்து 80 கி.மீ. வடகிழக்கில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோயில் புகழ் மிக்க கோயிலாகும். பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.

பந்தளம்

சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் ‎காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் தொழுகின்றனர்.

இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. ‎

குளத்துப்புழா

ஐயப்பனின் முக்கியமான் கோவில்களுள் ஒன்று. இங்கு ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் பால சாஸ்தா என்று அழைக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இக்கோயிலின் வாசல் சிறு குழந்தைகள் நுழையும் அளவிற்கே உள்ளது. இக்கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திலுள்ள குளத்துப்புழா எனும் சிற்றூரில் அமைந்துள்ளது.

- சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks


Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை