சிவ ஆகம விதிகளின்படி மணி அடித்தல்
சிவ ஆகம விதிப்படி மணி அடித்தல்..
:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*
அபிஷேகத்தின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு.
நைவேத்யத்தின் ஆரம்பம், உத்ஸவத்தின் ஆரம்பம், உத்ஸவத்தின் முடிவு.
நர்த்தனத்தின் முடிவு – இக்காலங்களில் மட்டுமே பெரிய மணி அடிக்க வேண்டும்.
கர்ஷணம் முதலான கிரியைகளின் ஆரம்பம், விக்னேச்வர பூஜை, புண்யாஹவாசன ஆரம்பம் ஆகிய காலங்களில் கை மணி அடிக்க வேண்டும்.
தூப, தீபம் காட்டும் போதும், பலி காலத்திலும் இடைவிடாமல் கைமணி ஒலிக்க வேண்டும்.
மணி நாத கிரமம் :1 அடி; மோக்ஷம், 2-அடி: போகம்,3-அடி : சகல ஸித்தி.
புண்யாஹவாசனம், தூப-தீபம் நைவேத்யம், பலி ஆகிய காலங்களில் 2-அடி அடிக்கலாம்.
தீபாரதனையின்போது (விரைவாக) 1-அடி அடிக்க வேண்டும்.
மற்ற தேவைக்கு 3-அடி அடித்து பெரிய மணி நாதம் எழுப்ப வேண்டும்.
இதுவே வீட்டில் பூஜை செய்து மணி அடிக்கும் பொழுது ,சாமிக்கு நைவேத்தியம் படைத்து பின்னர் தான் மணி அடிக்க வேண்டும்.
தெய்வங்களுக்கு நைவேத்தியம் எதுவும் செய்யாமல்... மணி அடிக்க கூடாது.
அப்படி நைவேத்தியம் செய்ய இயலாத காலங்களில் ஏதேனும் ஒருவகை இனிப்பை(சர்க்கரை,கல்கண்டு,வெல்லம் ) படைத்து பின்னர் மணி அடிக்க வேண்டும்.
You can join to my public group to learn more about spiritual information : -
Comments
Post a Comment