Posts

Showing posts from December, 2018

ராகு காலம் எமகண்டம்

Image
ராகு காலம் எமகண்டம் ராகு காலம் என்பது போல் கேது காலம் ஏன் இல்லை? ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம். ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள். செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது? செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீ

27 நட்சத்திரங்களின் பிற பெயர்கள்

Image
27 நட்சத்திரங்களின் பிற பெயர்கள் ➖➖➖➖➖➖➖➖➖ அசுவினி = பரி, புரவி, வாசி, ஐப்பசி, இரலை, புரவி, ஏறு, யாழ், தலை நாள், மருத்து நாள், சென் பூதம், குதிரை பரணி = காடுகிழவோன், தாழி, அடுப்பு, முக்கூட்டு, வேழம், சோறு, பகடு, பகலவன், தாசி கார்த்திகை = அறுமீன், அழல், ஆரல், அளக்கர், எரி, அங்கி, ஆல், ஆறாமீன், அறுவாய், நாவிதன், அளகு, இறால், நாடன், வாணன், தழல் ரோகிணி = பண்டி, மாட்டு வண்டி, உருள், வையம், ஊறல், பிரமநாள், சதி, அயன் நாள், தேர், விமானம், சகடம் (அகம் 86), மிருகசீரிடம் = மான் தலை, மாழ்கு, மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன் திருவாதிரை = செங்கை, யாழ், சடை, இறைநாள் (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை,ஈசன் தினம் புனர்பூசம் = கழை, கரும்பு, ஆவனம், ஏரி, அதிதி நாள், பிண்டி, மூங்கில், பாலை பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள் ஆயில்யம் (ஆஸ்லேஷா) = அரவு நாள், கௌவை, பாம்பு மகம் = வேள்வி, வேட்டுவன், கொடுங்கம், வாய்க்கால், மாசி, முதலில் வரும் சனி, பிதிர் நாள், எழுவாயெழுஞ்சனி (திவாகர நிகண்டு) பூரம் (பூர்வ பல்குனி) = எலி,

27 நட்சத்திரத்திற்குரிய தெய்வங்கள்

Image
ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்களை வணங்கிப் பயனடையலாம்.. 01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி 03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்) 08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி 13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி 14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான். 17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர். 18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர் 20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான். 22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ண

பைரவர் வழிபாடு பலன்கள்

Image
பைரவர் வழிபாடும் – தீரும் பிரச்சனைகளும்... நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். குழந்தைப் பேறு கிடைக்க தேய்பிறை அஷ்டமி திதியில் நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். வறுமை நீங்க நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும். திருமணம் நடக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக் கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கை கூடும். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

பைரவரின் உடலில்

Image
பைரவரின் உடலில் அங்கங்களாக உள்ள 12 ராசிகள் பிருஹத்ஜாதகம் என்ற நூலில் பனிரெண்டு ராசிகளும் பைரவருடைய உடலின் அங்கங்களாக இருப்பதாகவும், அவை மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கைகள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டங்கள், விருச்சிகம்-மர்ம ஸ்தானங்கள், தனுசு-தொடை, மகரம்-முழங்கால்கள், கும்பம்-காலின் கீழ்பகுதி, மீனம்-கால்களின் அடிப்பாகம் என பனிரெண்டு ராசிகளும் நிறைந்துள்ளன. மேலும் பைரவரின் சேவர்களாக நவக்கோள்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய அன்பர். எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்த கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பார். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

மார்கழி மாதம்

Image
இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம் மார்கழி மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும். மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம்.பகவத்கீதையில், கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், மாதங்களில் நான் மார்கழி என்கிறார். இந்து சமயத்தின் வேதங்களும், ஆகமங்களும், மார்கழி மாதத்தை இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகக் குறிப்பிடுகின்றன. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் திறக்காத

சிவனின் அருளைப் பெற

Image
எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளை பெறலாம்!!! மேஷம் மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம் திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். மிதுனம் திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். கடகம் திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம். சிம்மம் சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச

ஸ்ரீ காளஹஸ்தி

Image
ஸ்ரீ காளஹஸ்தி யின் சிறப்புகள் _________________________ காளஹஸ்தி சிவனுக்கு, தென் கயிலாய நாதர், ஆராவமுது, திருக்காளத்தி நாதர், கணநாதர், ஐங்குடுமித் தேவர், கல்லாலடியார், ஐந்து கொழுந்து, கல்லாடியில் கரும்பு, குடுமித்தேவர், மருந்து, மலை மேல் மருந்து, கபாலி, காளத்தி, காளத்திக் கற்பகம், ஜோதிவிடங்கர், பொன்முகரித் துறைவர் என 16 வகை பெயர்கள் உள்ளது அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, சிற்புட்கேசி, வண்டார்குழலி ஆகிய 7 பெயர்கள் உள்ளன. காளஹஸ்தி கோவிலின் தல விருட்சமாக அகண்ட வில்வம், கல்லால மரம் ஆகியவை உள்ளன.இத்தல தீர்த்தமாக பொன் முகரி, பிரம்ம தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம் உள்பட மொத்தம் 14 தீர்த்தங்கள் இருக்கின்றன. இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம் ' என்றழைக்கப்படுகிறது. காளத்தி நாதர் இரு கண்களும் இழந்தவராக உள்ளார். அவருக்கு இடது கண்ணாக அம்பாளும், வலது கண்ணாக கண்ணப்பனும் திகழ்வதாக கருதப்படுகிறது. காளத்த நாதர் வீற்றிருக்கும் மலைப்பகுதிக்கு ஆனந்த நிலையம் என்றொரு பெயரும் உண்டு. காளத்திநாதர் கோவில் கட்டப்பட்டு சுமார் ஆயிரம

தீபத்தில் அடங்கியுள்ள ஆத்மார்த்தம்

Image
தீபத்தில் அடங்கியுள்ள ஆத்மார்த்தம் __________________________ தீபத்தின் உள்ளார்ந்த விடயங்களை நாம் அறிந்து வைத்திருப்பது எமது இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளிமயத்தை என்றுமே துலங்கச்செய்யும். அந்த வகையில் சில விடயங்களை நாம் இங்கு காண்போம். தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடக்கூடாது. தீபத்தை எப்படி குளிர வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு. தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் விளக்கை அணை எனக் கூறக்கூடாது, விளக்கை குளிரவை எனக் கூறவேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக் கூடாது. பெண்களே செய்ய வேண்டும். தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை)      “ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம” என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது

தெய்வீக சிந்தனை

Image
ஆன்மீக சிந்தனை_🌺 _____________ உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து_  “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும், பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி

சிவ லிங்கம் விளக்கம்

Image
🌺 சிவ லிங்கம் விளக்கம்!!! சிவலிங்கம் பற்றி வெவ்வேறு கால கட்டங்களில் பலரும் பல விதமான தகவல்களை தெரிவித்துள்ளனர், அவற்றில் அதிகமான கருத்துக்கள் அவர்களின் அதீத கற்பனையால் புனையப்பட்டவைகளாகும். ஒரு சிலர் சரியான விளக்கங்களையும் கொடுக்க முற்பட்டுள்ளனர், ஆனால் அவை அனைத்து தரப்பு மக்களாலும் எளிதாய் புரிந்துகொள்ள முடியாதவாறு உள்ளன. இந்த பகுதியில் சிவலிங்கம் பற்றிய தெளிவான விளக்கம் அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்து கொள்ளகூடிய வண்ணம் எளிய தமிழில் விவரிக்கப்பட்டுள்ளது. லிங்கம் என்றால் ‘குறியீடு’ (SYMBOL), சிவலிங்கம் என்பது சிவகுறியீடு. இறைவனை பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம் (கடவுள்). உருவம், குணம் இவை அனைத்தையும் கடந்து நிற்க்கும் பொழுது இறைவன் நிர்க்-குணப்பிரம்மம். உருவமாய் கண்களுக்கு காட்சி தரும்பொழுது இறைவன் ச-குணப்பிரம்மம். இறைவன் கண்களுக்கு காட்சி தரும்பொழுது உருவம். உருவமே இல்லாத, குறியீடே இல்லாத ஒரு சக்தி நிலை என்பது அருவம். உருவமும் அல்லாது, அருவமும் அல்லாது, இருக்கும் பொழுது அருவுருவம். சிவலிங்கம் என்பது அருவுருவம்... உருவமாக பார்த்தா

பிரதோஷத்தன்று

Image
பிரதோஷத்தன்று இப்படி இருந்தால் சிறந்தது!! ➖➖➖➖➖➖ பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், வளர்பிறை தேய்பிறை என இரு பிரதோஷ தினங்களிலும் விரதம் மேற்கொள்ளலாம். அப்படி விரதம் இருக்க நினைப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு அந்த நாள் முழுக்க                    "சிவ நாமத்தையோ"                                                      அல்லது                      “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தையோ ஜபிக்கலாம். நேரம் இருந்தால் சிவபுராணம் படிக்கலாம். மாலை வேலையில் சிவன் கோயிலிற்கு சென்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறந்தது. நந்தி தேவரிடமும் சிவபெருமானிடமும் நமது குறைகள் அனைத்தையும் தீர்வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு கோவிலை வளம் வந்து விரதத்தினை முடிக்கலாம். பிரதோஷ விரதத்தினை முடிக்கும் சமயத்தில் நம்மால் முடிந்தவரை பசியால் வாடும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நமக்கு சிறப்பை சேர்க்கும். அன்னதானம் வழங்க இயலாதோர் தங்களால் முடித்த உதவியை ஏழைகளுக்கு செய்யலாம். ஓம் நமச்சிவாய

அகத்தியர் அருளிய மந்திரம்

Image
அகத்தியர் அருளிய முருகப்பெருமான் மந்திரங்கள்...    ________________________         ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா --------------------------------------------------- முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம் """""""""""""""""""""""""""""""""""'''" சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே _________________________ மேற்கண்ட  மந்திரங்கள் அகஸ்தியர் அருளியது.. """""""&qu

சிவ வழிபாடு

Image
சிவ வழிபாடு செய்யும் நம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய சிவ ரகசியங்கள்!!! *********************** சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர். சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ! இதய ஆகாசம் - அதை த

வீட்டில் செல்வம் பெருக..

Image
நம் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்க!! **************************** • வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரை வைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும். • மகாலஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதென்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் சிறந்த வசியமாகும். • முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியாக இருக்கும். • சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகு கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும். அப்போதுதான் மகாலஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள். • முக்கியமான காரியங்கள் பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்” என ஆறு முறை உ

அமாவாசையில் செய்ய கூடாதது

Image
அமாவாசையில் செய்ய கூடாதது ••••••••••••••••••••••••••••••••••••••• அமாவாசை நாளை ஒரு சிலர் நல்ல நாள், நல்ல செயலை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். வேறுசிலர் அது முன்னோர்கள் நினைவு தினம், அதனால் நல்ல விஷயம் செய்யக்கூடாது என்கிறார்கள். அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் என்பது உண்மையே. தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறோம். இந்த நாளில் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் போட்டிகளைச் சந்திக்கின்ற வகையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது, அல்லது ஏற்கெனவே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது முதலான செயல்களில் ஈடுபடலாம். மாறாக, புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், க்ருஹப்ரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள்,அதாவது பெண்பார்க்கும் நிகழ்ச்சி, பந்தல்கால் நடுதல், நிச்சயதார்த்தம், புதிய வியாபாரம் துவங்க

அன்பே சிவம்

Image
🌺 என்றும் அன்பே சிவம் ______________________________ இறைவனிடம் ஏதோ பெற வேண்டும் என்று நினைக்கிறபோது அது உணர்வு தான் – அவனே தான் இந்த நிலையிலே சிக்கிக் கொண்டு அந்தந்த இடத்துக்குத் தக்கவாறு இன்பத்தையும் அனுபவிக்கிறான்; துன்பமும் அடைகிறான். அந்த இடத்தில் நான் அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்ற கருணையானது உள்ளத்திலே எழுமேயானால் அதுதான் உறவு. அந்த உறவை, உண்மையான உறவை, அவனோடு கொண்ட போது அதிலிருந்து அறம் எப்படி உண்டாகிறது?  சேவையாக உண்டாகிறது. அப்பொழுது, அறிந்தது சிவம். இங்கே என்ன?  காட்டுவது அன்பு. சிவம் என்ற ஒரு நிலையை அறிவு உணர்ந்தது; அது செயல்படும்போது அன்பாக மலர்ந்தது. அப்பொழுது அன்பு என்பது என்ன என்று பார்க்கும்போது சிவத்தின் செயலே; பூரணமாக சிவத்தின் செயலே. செயலிலே விளைவாக எப்பொழுதும் வந்து கொண்டிருப்பது சிவத்தின் செயல். ஆகவே, நல்ல செயலையே செய்வேன் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து மதித்து அந்த உறவு கொண்டு கடமையாற்றி வருவது – அதுவே சிவயோகம், எப்பொழுதுமே சிவயோகம் தான். எந்தப் பொருளிலேயும் அவனைக் காணலாம்; எந்த நிலையிலேயும் அவனைக் காணலாம்; அவனாகவே இருக்கலாம். உடலால் வேறுபட்டு

சப்த தாண்டவம்

Image
சப்த தாண்டவ தலங்கள் ____________________________ சப்த விடங்கத் தலங்கள் என்பது தமிழ்நாட்டில் சிவபெருமானின் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக்

சுவாமி சரணம் ஐயப்பா

Image
ஐயப்பன் அவதரித்த காரணம் _______________________ ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார். சில வருடங்களுக்கு பிறகு ராஜசேகரனுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு மகாராணிக்கு தான் பெற்ற குழந்தையின் மீதே பாசம் அதிகமானது. மணிகண்டனுக்கு இளவரசன் பட்டம் சூட்ட முடிவெடுத்தார் ராஜசேகரன். இதை விரும்பாத அரசி மணிகண்டனை சூழ்ச்சியால் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தாள். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக பொய்யுரைத்து அதற்கு புலிப்பால் தான் மருந்து என்று மருத்துவரையும் பொய்யுரைக்க செய்தார். புலிப்பாலை கொண்டுவர ஐயப்பனை அனுப்பி வைத்தார் அந்த அரசி. இதில் இருக்கும் சூழ்ச்சியை அறிந்த பிறகும் ஐயப்பன் புலிப்பாலை கொண்டுவர காட்டிற்குள் சென்றார். அங்கு மகிஷி என்னும் அரக்கியை தன் வில் மூலம் கொன்று வீழ்த்தினான் வில்லாளி வீரன். ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததற்கான நோக்கமே அந்த அரக்கியை கொள்வதற்காக தான். தங்களுக்கு பெ

சிவ பெருமானின் அவதாரங்கள்

Image
பரமேஸ்வரனின் அவதாரங்கள்_ ______________________ திருமாலின் தசாவதாரம் அனைவரும் அறிந்தது. அதே போல் சிவபெருமானுக்கு அவதாரங்கள் இருக்கிறதா? என்றால் ஆம் . சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது. சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள், பூமியில் மனிதனாக அவதரிப்பது. சிவபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக்கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவதாரம் 1 – பிப்லாட் அவதாரம் தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான். அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தான். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை ப

முழு முதற் கடவுள்

Image
முழு முதற் கடவுள்!! தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வணங்கப்படுபவர் முழு முதற் கடவுள் விநாயகர். அதனால்தான் அவரை முழு முதல் கடவுள் என்கிறோம். தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் விக்னகணபதி. 1. விநாயகர் சகஸ்ரநாமம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே 2. விநாயகர் ஸ்லோகம்: கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் 3. விநாயகர் ஸ்லோகம்: ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத். 4. விநாயகர் ஸ்லோகம்: ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. 5. விநாயகர் ஸ்லோகம்: மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே. 6. விநாயகர் காயத்ரி மந்திரம்: வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

நான்காம் பிறை

Image
நான்காம் பிறை பார்த்தால்!!! :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-* மூன்றாம் பிறை பார்த்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும்., நான்காம் பிறை பார்த்தால் 'நாய்படாத பாடுதான்' என்றும் அநேகமானவர்கள்  கூறி கேட்டதுண்டு. அது மூன்றாம் பிறை பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டதே தவிர, நான்காம்பிறை பார்ப்பவர்களுக்கெல்லாம் நாய்பாடு ஏற்படும் என்பதல்ல. இதற்கு உதாரமணமாக... ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் வருந்திய சந்திரனோ,  தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார்,  ஆனால், முழுவதுமாக மன்னிக்கவில்லை. மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார். நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை தவிர

திருநிலை பெரியாண்டவர்

Image
சிவகணங்கள் பூஜித்த லிங்கம் காஞ்சிபுரம்  மாவட்டத்தில் திருநிலை என்னுமிடத்தில் அமைந்துள்ளது திருநிலை பெரியாண்டவர் திருத்தலம்.. ஒருமுறை சிவபெருமான் மனித வடிவில் உலகை வலம் வந்தபோது, அவருடன் 21 சிவகணங்களும் எவர் கண்ணிலும் படாமல் மறைந்து சென்றன. அங்காள பரமேஸ்வரி சூலாயுதத்தை எறிந்தபோது, மண்ணில் மறைந்திருந்த சிவகணங்கள் மண்கட்டிகளாக தெறித்து விழுந்தன. பின்னர் ஈசன் சுயவடிவை அடைந்ததும் அவையும் சிவகணங்களாக வெளிப்பட்டன. இதைக் குறிக்கும் வண்ணம் இங்கே 21 சிவகணங்களும் லிங்க வடிவில் உள்ளன. சிவனுடன் நந்தியும் மனித வடிவில் சென்றது. எனவே இங்குள்ள நந்தி மனித உடலுடன் காணப்படுகிறது. இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இந்தத் திருநீற்றைப் உடலெங்கும் பூசி சிறிது உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும் கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. பல சித்தர்களும் முனிவர்களும் கண்ணுக்குப் புலப்படாமல் இந்த சிவபெருமானை வணங்கிச் செல்கின்றனராம். லிங்க வடிவில் உள்ள 21 சிவகணங்கள் மூலவரான பெரியாண்டவரை தினமும் பூஜிப

பைரவருக்கான பரிகார முறைகள்...

Image
பைரவருக்கான பரிகார முறைகள் ______________________________ பாமரனும் வணங்கும் விதமாக                     'ஓம் பைரவாய நமஹ' என்ற மந்திரமே போதுமானது. நெய்தீபம் ஏற்றி இத்திருநாமம் சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடி நிற்கும். மந்திர சுலோகங்களுக்கு விளக்கம் தெரியாமல் மந்திரம் சொல்லி வணங்குதல் ஆகாது. நம்பிக்கையே மூலாதாரணம் இறைவனை வணங்கும் முறையில் இதுவே முக்கிய அம்சம். ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவதால், தலை குனியா வாழ்க்கை, சுப மங்களம், பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல், கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம், கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல், போன்ற நற்பலன்கள் பெறலாம். சொத்து பிரச்சனை, வழக்கு, கடன், திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் பைரவருக்கு சில பரிகாரங்களை எந்த நாட்களில் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவர்கள், ஆனந்த கால பைரவருக்கு தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் கோர்ட்டு வழக்கு, விவாகரத்து, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும். சனியின் குருநாதர் பைரவர். வெள்ளிக்கிழமை

ஹோமங்கள் செய்வது எதற்காக

Image
ஹோமங்கள் செய்வது எதற்காக!! __________________ நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம். நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது. அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும். நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் ஹோமம் தான். கோவிலுக்கு சென்று, சாமி கும்பிடுவது, அர்ச்சனை செய்வது, அபிஷேகம் செய்வது, மொட்டை போடுவது, தீ மிதிப்பது இவை எல்

விஷ்ணுபதி புண்ணிய காலம்

Image
விஷ்ணுபதி புண்ணிய காலம் ___________________ புண்யகாலம் என்பதை 1 .விஷு புண்யகாலம் 2 . உத்தராயண புண்ய காலம் 3 .தக்ஷிணாயன புண்ய காலம் எனபலவராகக் கூறுவோம். இதைப்போலவே விஷ்ணுபதி புண்யகாலம் என்பதுவும் மிகவும் சிறப்பானது. பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசிதிதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர். ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். அதிகாலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது. இந்தபுண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறிபிரார்த்தனை புரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளைகுறைவற செய்யலாம். முறைப்படி பூஜைசெய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் . அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தி