ஹோமங்கள் செய்வது எதற்காக

ஹோமங்கள் செய்வது எதற்காக!!
__________________

நம் இந்து சாஸ்திரப்படி , இறைவனுக்கு எதையேனும் அளிக்க விரும்பினால், அதை அக்னி மூலம் தான் அளிக்க முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் மேற்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.

நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அளிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

அக்னிக்கு அளிக்கப்படும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உரிய முறையில் காலத்தே நம்மை வந்து பிரதி பலன்களை அளிக்கும். நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் ஹோமம் தான்.

கோவிலுக்கு சென்று, சாமி கும்பிடுவது, அர்ச்சனை செய்வது, அபிஷேகம் செய்வது, மொட்டை போடுவது, தீ மிதிப்பது இவை எல்லாமே பரிகாரத்தின் ஒரு வடிவமாக இருந்தாலும் ஹோமம் தான் கடைசி.

வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் நல்ல நாள் பார்த்துக் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி, குபேரன் பூஜை செய்ய வேண்டும்.

அப்போதுதான் அந்தக் குடும்பம் விருத்திபெரும்! சிலர் கிரக பிரவேசத்தன்று செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

சிலர், கணபதி ஹோமம் மட்டும் செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது தவறு ஆகும்.

மேலே சொன்ன முறையிலே செய்ய வேண்டும். அதுவும், பிரம்ம முகூர்த்தமாகிய காலை 4 மணி முதல் சூரியன் உதயம் ஆவதற்குள் செய்வது சாலச்சிறந்தது ஆகும்!


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை