ராகு காலம் எமகண்டம்
ராகு காலம் எமகண்டம்
ராகு காலம் என்பது போல் கேது காலம் ஏன் இல்லை?
ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது காலம் என்பது இல்லை என்று சொல்லக் கூடாது. அதனைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம்.
ராகு காலம், எமகண்டம் என்பது என்ன என்றால், அந்த நேரங்களில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.
விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாக பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள்.
செவ்வாய், வெள்ளி ராகுகாலம் இரண்டும் ஏன் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?
செவ்வாய் கிரகத்துக்கும் ராகு கிரகத்துக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருப்பது நன்கு புலப்படும், ஆகவேதான் செவ்வாய்க்கிழமையன்று ராகு கிரகத்துக்கான ப்ரீதிகள் (துர்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றுதல், நாகத்துக்கு (பாம்பு புற்றுக்கு) பால் வார்த்தல், அம்மனுக்கு நெய்தீபம் போடுதல் போன்றவை நடத்தப்படுகின்றன.
ஸ்வர் பானு என்னும் அசுரன்தான் ராகு என்று பெயர் மாற்றமடைந்துள்ளான் என்கிறது புராணம். அனைத்து அசுரர்களுக்கும் தலைவராக குருவாக இருந்து அசுரர்களை வழி நடத்தியவர் சுக்கிரன் என்னும் கிரகம். ஆகவே, ராகுவும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் நட்புடன் கூடியவர்கள்.
தனது நண்பரான குரு சுக்கிரனின் ஆதிக்கத்துக்குட்பட்ட வெள்ளிக்கிழமையில் தனக்கான பரிகாரத்தை செய்தால், ராகு அதிகமான மகிழ்ச்சியடைகிறார். ஆகவே தான், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ராகு காலம், மற்ற நாட்களை விட அதிகமான பலம் வாய்ந்தவை.
நவகிரங்களுக்குள் புதன் கிரகம் வலிமையானது. புதனைவிடச் செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், அதைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சூரியனும் பலம் பெற்றது. சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலமுள்ள கிரகங்கள் என்கிறது ஜோதிஷ சாஸ்திரம்.
ஆகவே, ராகு கிரகமும் அதனால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பன்னிரண்டு ராசிகளில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்தமாக வீடு என்று உண்டு. ராகு கேதுகளுக்கு தனியாக வீடு என்பது இல்லை (இதில் கருத்து வேறுபாடு உண்டு). இதேபோல் கிழமை விஷயமும். ஒவ்வொரு கிரகத்துக்கும் தலா ஒவ்வொரு கிழமை வீதம், மொத்தம் ஏழு கிழமைகள்தான். ராகு கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்.
அதாவது ஒவ்வொரு நாளும் முப்பது நாழிகையுடைய பகலின் (12 மணி நேரத்தின்) எட்டில் ஒரு பகுதியான மூன்றே முக்கால் நாழிகை (1. 30 மணி நேரம்) ராகு காலம் என்று அழைக்கப்படுகிறது. இது பகல் பொழுதின் அளவான 12 மணி நேரத்துக்கு கணக்கிடப்பட்டுள்ளது. பகல் பொழுதின் அளவில் நிகழும் ஏற்ற இறக்கங்களையொட்டி, ராகு காலத்தில் சிற்சில நிமிடங்கள் வேறுபடலாம்.
ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள்.
ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார்கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம்.

Comments
Post a Comment