அமாவாசையில் செய்ய கூடாதது
அமாவாசையில் செய்ய கூடாதது
•••••••••••••••••••••••••••••••••••••••
அமாவாசை நாளை ஒரு சிலர் நல்ல நாள், நல்ல செயலை மேற்கொள்ளலாம் என்கிறார்கள். வேறுசிலர் அது முன்னோர்கள் நினைவு தினம், அதனால் நல்ல விஷயம் செய்யக்கூடாது என்கிறார்கள்.
அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் என்பது உண்மையே. தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறோம்.
இந்த நாளில் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் போட்டிகளைச் சந்திக்கின்ற வகையில் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது, அல்லது ஏற்கெனவே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டில் புதிய நடைமுறைகளை அமல்படுத்துவது முதலான செயல்களில் ஈடுபடலாம்.
மாறாக, புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், க்ருஹப்ரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள்,அதாவது பெண்பார்க்கும் நிகழ்ச்சி, பந்தல்கால் நடுதல், நிச்சயதார்த்தம், புதிய வியாபாரம் துவங்குதல், முதன்முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யக்கூடாது.
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி அழைத்தாலும் அமாவாசைக்கு அடுத்த தினம் மட்டும் ஆகாத தினமே!இது எங்கும் இருக்கும் நம்பிக்கை. பஞ்சாங்களில் அது பிரதமை திதி. அமாவாசையும் ஒரு திதிதான். மாதந்தோறும் ஏற்படும் நிகழ்வு. இரண்டு தினங்களும் பெரும்பான்மையோருக்கு முக்கியமானவை.
வானியல்படி சூரியனுக்கும்,சந்திரனுக்கும் பூமி இடையில் வரும் நாள் தான் அமாவாசை. சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டுவிடுவதால் கண்ணுக்கு தெரிவதில்லை. சூரியனின் ஒளி பட்டே சந்திரன் பிரகாசிக்கிறது. இது அறிவியல். அமாவாசை எப்போது ஏற்படும் என்பதை பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.
பல்வேறு சுபகாரியங்களை குறிப்பிட்ட திதிகளில் செய்யலாம் என்று பஞ்சாங்கம் சொல்கிறது. அதில் அமாவாசை திதி எந்தவொரு நல்ல செயல்களுக்கும் குறிப்பிடப்படவில்லை.
சந்திரன் மறைந்திருக்கும் நாள் என்பதால் சந்திரனுக்கு உரிய விஷயங்கள் பாதிப்புக்குள்ளாகத்தான் செய்யும். மனமும் உடலும் சந்திரனுக்குரியவை. எனவே மனநிலையும் உடல்நிலையிலும் பாதிப்புகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அன்றைய தினம் எப்படி நல்ல காரியங்களை தொடங்குவது சரியாக இருக்கும்.
அமாவாசையில் செய்தாலும் செய்யலாம் வெறும் வானத்தில்(அடுத்த நாளான பிரதமையில்) செய்யக்கூடாது. வேறு வழியில்லாத நேரத்தில் செய்தாலும் செய்யலாம் என்பது அமாவாசையில் மேற்கொள்ளலாம் என்று உருவாகிவிட்டது.
சந்திரன் நல்ல நிலையில் அமையப்பெற்ற ஜாதகம் உள்ளவர்கள் ,உச்சம் பெறும் ரிஷபம்,ஆட்சி வீடான கடகத்தில் ஜனித்தவர்கள் ,இவற்றோடு குரு போன்ற சுபர் பார்வை பெற்றவர்கள் அமாவாசை தினத்தில் சுப காரியம் செய்தால் அதிக பாதிப்பு இருக்காது என்றும் சொல்வார்கள்.
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது.
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகப் பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் வீட்டு வாசலில் கோலமிடுதல் கூடாது.
முன்னோர்களை வணங்குதல், கோயிலுக்கு செல்வது ஆகியவையே மரபாக இருந்துவரும் ஒன்று. அதுவே நமது ஐதீகம். அமாவாசை நல்ல நாள் என்பது இப்போது ஏற்பட்ட ஒன்று. ஆனால் ஒரு விஷயம் நமது மனம்போல எல்லா நாளும் நல்ல நாளே. .
ஓம் நமச்சிவாய 🙏
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment