பைரவருக்கான பரிகார முறைகள்...
பைரவருக்கான பரிகார முறைகள்
______________________________
பாமரனும் வணங்கும் விதமாக
'ஓம் பைரவாய நமஹ'
என்ற மந்திரமே போதுமானது. நெய்தீபம் ஏற்றி இத்திருநாமம் சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடி நிற்கும். மந்திர சுலோகங்களுக்கு விளக்கம் தெரியாமல் மந்திரம் சொல்லி வணங்குதல் ஆகாது. நம்பிக்கையே மூலாதாரணம் இறைவனை வணங்கும் முறையில் இதுவே முக்கிய அம்சம்.
ஸ்ரீ மஹா பைரவரை வணங்குவதால், தலை குனியா வாழ்க்கை, சுப மங்களம், பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல், கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம், கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல், போன்ற நற்பலன்கள் பெறலாம்.
சொத்து பிரச்சனை, வழக்கு, கடன், திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் பைரவருக்கு சில பரிகாரங்களை எந்த நாட்களில் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புவர்கள், ஆனந்த கால பைரவருக்கு தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் கோர்ட்டு வழக்கு, விவாகரத்து, திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும். சனியின் குருநாதர் பைரவர்.
வெள்ளிக்கிழமை அன்று ராகுகாலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மாலை அணிவித்து, புனுகு பூசி, சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு, அர்ச்சனை செய்து வழிபட்டால், அர்த்தாஷ்டம சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.
கண்டகச்சனியின் பிடியில் இருந்து விடுபட திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் பைரவருக்கு அல்லி மாலை அணிவித்து, புனுகுபூசி, சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த சாதம் படையலிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
ஏழரைச்சனியின் பிடியில் இருந்து விடுபட சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, புனுகு பூசி, கருவேப்பிலைசாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட வேப்ப எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். மனவளர்ச்சி குன்றியவர்கள் செவ்வாழை பழத்தில் தீபம் ஏற்றி வழிபட குணம் கிடைக்கும்.
சொத்து பிரச்சினை, இழந்த சொத்துகளை திரும்ப பெற, வழக்குகளில் வெற்றி கிடைக்க 11 மிளகை சிவப்பு நிற துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
திருமணத்தடை உள்ளவர்கள் நுனி வாழை இலையில் மஞ்சள் அரிசியை கொட்டி அதில் நட்சத்திர தீபம் ஏற்ற வேண்டும். பைரவருக்கு முந்திரி கொட்டைமாலை அணிவித்து, தயிர் சாதம் நைவேத்தியம் செய்து 5 அல்லது 7 அஷ்டமிகளில் வழிபட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரசியலில் செல்வாக்கு, உயர் பதவி கிடைக்க பைரவருக்கு கிராம்பு மாலை அணிவித்து வணங்கி வர நல்லபலன் கிட்டும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கமாலைஅல்லது எலுமிச்சை பழ மாலை அணிவித்து ,எள் கலந்த சாதம், இனிப்பு பதார்த்தங்கள், பாயசம் படைத்து முன்னோர்களை நினைத்து பிதுர்கடன் பூஜைக்கான மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து வழிபட்டு பத்து பேருக்கு அன்னதானம் செய்தால் பிதுர்கடன் தேஷம் நீங்கும்.
நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். இந்த துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூஜை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.
நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அதற்குரிய பைரவரை வழிபாட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.
பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது. அஷ்டமி அன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால், அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.
ஆகவே, அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. சாதாரணமாக, நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.
மிக அரிதாக, சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு, இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான், மிகுந்த சக்தியுடன் விளங்குகிறது.
ஓம் நமச்சிவாய 🙏
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment