திருநிலை பெரியாண்டவர்
சிவகணங்கள் பூஜித்த லிங்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநிலை என்னுமிடத்தில் அமைந்துள்ளது திருநிலை பெரியாண்டவர் திருத்தலம்..
ஒருமுறை சிவபெருமான் மனித வடிவில் உலகை வலம் வந்தபோது, அவருடன் 21 சிவகணங்களும் எவர் கண்ணிலும் படாமல் மறைந்து சென்றன. அங்காள பரமேஸ்வரி சூலாயுதத்தை எறிந்தபோது, மண்ணில் மறைந்திருந்த சிவகணங்கள் மண்கட்டிகளாக தெறித்து விழுந்தன.
பின்னர் ஈசன் சுயவடிவை அடைந்ததும் அவையும் சிவகணங்களாக வெளிப்பட்டன. இதைக் குறிக்கும் வண்ணம் இங்கே 21 சிவகணங்களும் லிங்க வடிவில் உள்ளன. சிவனுடன் நந்தியும் மனித வடிவில் சென்றது.
எனவே இங்குள்ள நந்தி மனித உடலுடன் காணப்படுகிறது. இங்குள்ள விநாயகரும் இரண்டு கரங்களோடு மனித உடலுடன் காட்சி தருகிறார். இவருக்கு திருநீறு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.
இந்தத் திருநீற்றைப் உடலெங்கும் பூசி சிறிது உட்கொள்வதால், நோய் நீங்குவதாகவும் கல்வி, செல்வம் கிட்டுவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. பல சித்தர்களும் முனிவர்களும் கண்ணுக்குப் புலப்படாமல் இந்த சிவபெருமானை வணங்கிச் செல்கின்றனராம்.
லிங்க வடிவில் உள்ள 21 சிவகணங்கள் மூலவரான பெரியாண்டவரை தினமும் பூஜிப்பதாக ஐதீகம் உள்ளது. சிவபெருமான் மனித வடிவில் வந்ததால் அவர் காலடிகள் நேரடியாகப்பட்ட தலம் என்ற பெருமையை உடையது.
ஓம் நமச்சிவாய 🙏
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment