சிவ லிங்கம் விளக்கம்
🌺 சிவ லிங்கம் விளக்கம்!!!
சிவலிங்கம் பற்றி வெவ்வேறு கால கட்டங்களில் பலரும் பல விதமான தகவல்களை தெரிவித்துள்ளனர், அவற்றில் அதிகமான கருத்துக்கள் அவர்களின் அதீத கற்பனையால் புனையப்பட்டவைகளாகும்.
ஒரு சிலர் சரியான விளக்கங்களையும் கொடுக்க முற்பட்டுள்ளனர், ஆனால் அவை அனைத்து தரப்பு மக்களாலும் எளிதாய் புரிந்துகொள்ள முடியாதவாறு உள்ளன. இந்த பகுதியில் சிவலிங்கம் பற்றிய தெளிவான விளக்கம் அனைத்து தரப்பு மக்களாலும் புரிந்து கொள்ளகூடிய வண்ணம் எளிய தமிழில் விவரிக்கப்பட்டுள்ளது.
லிங்கம் என்றால் ‘குறியீடு’ (SYMBOL), சிவலிங்கம் என்பது சிவகுறியீடு.
இறைவனை பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம் (கடவுள்).
உருவம், குணம் இவை அனைத்தையும் கடந்து நிற்க்கும் பொழுது இறைவன் நிர்க்-குணப்பிரம்மம்.
உருவமாய் கண்களுக்கு காட்சி தரும்பொழுது இறைவன் ச-குணப்பிரம்மம். இறைவன் கண்களுக்கு காட்சி தரும்பொழுது உருவம்.
உருவமே இல்லாத, குறியீடே இல்லாத ஒரு சக்தி நிலை என்பது அருவம்.
உருவமும் அல்லாது, அருவமும் அல்லாது, இருக்கும் பொழுது அருவுருவம்.
சிவலிங்கம் என்பது அருவுருவம்... உருவமாக பார்த்தால் இறைவனும் மனிதர்களை போலவே அனைத்து உடலுறுப்புகளுடனும் கானப்படுவார்.
உருவம் என்பது வெறும் மனித உருவம் மட்டுமே அல்ல, மரம், செடி, விலங்குகள், பறவை என அனைத்து உருவங்களிலும் இறைவனை கானலாம். தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்னன்னு மனிதர்களாய் பல உருவத்தில் இறைவனை பார்த்துள்ளோம்.
இறைவன் உருவமுமாய், அருவமுமாய் இருக்கின்றார், இதில் உருவமே இல்லை என்பதை நம்புவதா? அருவம் என்பதை நம்புவதா? என்ற கேள்வி உங்களுக்கு எழுமேயானால் அதற்கான பதிலும் ஒரு கேள்விதான்.!
தண்ணீர் உருவமா? இல்லை அருவமா ? ஆம் தண்ணீர் உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றது. நீராவியாக இருக்கும் பொழுது தண்ணீர் அருவம் அது நம் கண்களுக்கு தெரியாது. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைக்கும் பொழுது அதன் உருவம் நம் கண்களுக்கு தெரியும். தண்ணீர் எவ்வாறு நாம் பிடித்து வைக்கும் பாத்திரத்தின் உருவத்தை எடுத்துக் கொள்கின்றதோ அதே போல்தான் இறைவனும். இறைவன் நீராவியை போல அருவமாகவும் இருக்கின்றான். பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கின்றான்.
இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இதனை நாம் உணர்ந்துகொள்ளவே உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத அருவுருவம் என்னும் ஒரு குறியீடு..
வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்! அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!
லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி! எவ்வாறு மேலைநாடுகளில் Crystal Gazing- இல் மனத்தை ஒருமைப்படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு என்றே சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது.
சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர். எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக உள்ளது.
லிங்கம்=லிங்+கம்
லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (Merge)
கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (Emerge) இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்.
சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும் லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.
துர்வாச முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.
பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம் கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம் வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது! “திருமூலர்” லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!
சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்கின்றனர்!
லிங்கத்தின் அடிப்பாகம்
பிரம்ம பீடம் = வட்ட வடிவம்.
அதன் மத்திய பாகம்
விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்.
அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது.
அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம். இதுவே இரண்டு பாகமாக இருக்கும்!
மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்.
அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள். அது சக்தி சொரூபம்.
பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம்
என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்.
திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்.
ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு! இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!
யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!
ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம-காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்துல கூட "ஆத்ம யோனி" என்று வரும்! “ஆத்ம யோனி” என்பது ஆத்மா செல்லும் பாதை!
ஆக்கல்-அளித்தல்-அழித்தல் என்னும் முத்தொழிலில், எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge), லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)! இதுவே எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!
எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது. மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு.
நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான். அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்.
பகுத்தறிவுப் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான். காளஹஸ்தியில் வெறும் ஆவுடையார் மட்டும் தான். மேலே லிங்கமே இருக்காது! வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான். கீழே ஆவுடையாரே இருக்காது.
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, சிவலிங்க தத்துவம் மிகவும் உயர்ந்த தியான தத்துவம் என்பதை உணர்ந்து கொண்டு, மன நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள். சஞ்சலமே தேவையில்லை. சங்கரமே தேவை.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது.
அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
அனைத்துக்கும் பரம்பொருளான பெருமாளே, தன் யோக நித்திரையின் போது, கைகளில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்கிறான்! ஒடுங்கி-விரியும் முத்தொழிலின் தத்துவத்தை உணர்த்தவே இப்படி.
பெருமாள் கையில் சிவலிங்கம் இருக்கும் இந்த அழகிய திருக்கோலத்தை இன்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணலாம்
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment