Posts

Showing posts from September, 2018

பெருமாள் துதி

Image
இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம் ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ! பொதுப்பொருள் : திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம். இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

பாலாம்பிகை

Image
உடல் நலம் பெற... உங்களுக்கு வேண்டியவர் / தெரிந்தவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தால் அவர் குணம் அடைய சொல்ல வேண்டிய ஸ்லோகம் பாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோக ஹரேதி ச!   ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹா ரோக நிவாரணம் !!   தேவாதி தேவ தேவேஸ ஸர்வப்ராணப்ருதாம்வர !   ப்ராணிநாமபி நாதஸ்த்வம் ம்ருத்யுஞ்ஜய நமோஸ்துதே !! இதை விடாமல் ஜபித்து கொண்டிருந்தால் வியாதி பூரண குணமாகி நன்றாக ஆகிவிடுவார் You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

மஹாலய பட்சம் திதி பலன்கள்

Image
மகாளயபட்சம்__திதி_கொடுக்க_ஆரம்பித்துவிட்டீர்களா__ .., மகாளய பட்சத்தில் வரும் திதியின் பலன்கள் ! பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளய பட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது. நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்தவொரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும். எந்த_திதியில்_என்ன_பலன்_ ? முதல்நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால

ருத்ராட்சம்

Image
ருத்ராட்சம் அணிவதுபற்றி சிவபுராணம்!!! பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல், திருநீறு தரித்தல், ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும். ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன், மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான். ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், நரகங்களிலிருந்து விடுபடுகிறான். எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி; எவ்வகை ஆசாரத்தைக் கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்தை உச்சரித்து, ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில் செய்த பாவங்களை அது எரித்துவிடும். இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன் பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது. ஆதலால் ஒருவன் எந்நேரமும் ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும். ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை; ருத்ராட்சம் அணிந்து ஒருமு

ஆடிப்பூரம்

Image
ஆடிப்பூரம் தேவிக்குரிய விசேட தினங்களுள் ஆடிப்பூரமும் ஒன்றாகும் இத்தினம் ஆடிமாதப் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது. மனிதகுலத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இப்பூவுலகில் தோன்றிய நாளென்றும், தேவிபக்குபமடைந்த நாளென்றும் ஆடிப்பூர நாள் கருதப்படுகின்றது. அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு விசேட அபிடேக ஆராதனைகளும், உற்சவங்களும், நடைபெறும். அத்துடன் சிவன் கோயில்களிலுள்ள அம்பாளுக்கு திருவிழா நடைபெறும். ஆடிப்பூரம் வெள்ளிக்கிழமைகளில் நேர்ந்து விட்டால் அவ்விழா சிறந்த பலன்களைத் தரும் என்று கருதி விழாவினை விரிவாக அமைத்துக் கொள்ளுதல் மரபு. You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

மனத்தூய்மை

Image
மனத்தூய்மை தரும் நல்வாழ்வு “நான் யார்’ என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை. உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புவமை இல்லாத ஒரு பெரிய பொருளை (இறைவனை) போல நம்மையும் உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது. நானே பிரம்மமாக (தெய்வமாக) இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீதும் ஆசை வராது. அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்று ஆகியவை நம்மை விட்டு விலகிவிடும். தன்னை அறிந்த நிலையில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகிறது. You can join to my public group to learn more

பாவமும் புண்ணியமும்..

Image
#__புண்ணியமும்__பாவமும்_ பதிவுகளில் நன்மையே பயக்கும் செயல்களைப் புண்ணியம் என்றும் தீமை பயக்கும் செயல்களைப் பாவம் அல்லது பழிச்செயல்கள் என்றும் வழங்குகின்றோம். புண்ணியம்: எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் தராது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியம் எனப்படும். பாவம்: ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுணர்ச்சிக்கோ, பகுத்திறிவுக்கோ துன்பம் விளைவிப்பதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் எனப்படும். பாவப் பதிவுகள் இருவழிகளில் வெளிப்படும். 1. உடலில் நோய் 2. உள்ளத்தில் களங்கம். சிறுகதை ஒரு திருடன்! அவனைக் காவலர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி அவன் ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்! ஆசிரமத்திலிருந்த துறவி அவனைப் பார்த்துவிட்டார்.  ""பசி உயிர் போகிறது'' என்றான் திருடன். துறவி தட்டுத் தடுமாறி அவனுக்கு சமைத்துப் போட்டார். அவன் திருடன்

குளிப்பதைப் பற்றி இந்து மதம் கூறுவது

Image
குளிப்பதைப் பற்றி இந்து மத சாஸ்திரம் என்ன சொல்கிறது. காலை 4 மணியிலிருந்து 5 மணி வரை முனிவர்கள் குளிக்கும் நேரம். இது மிகவும் நல்ல நேரம். காலை 5 மணியிலிருந்து 6.30 மணி வரை மனிதர்கள் குளிக்கும் நேரம். இதுவும் நல்ல நேரம். காலை 6.30 மணிக்கு மேல் குளிப்பது நல்லதல்ல. இது அசுரர்கள் குளிக்கும் நேரம். #_குளிக்கும்_முறைகளில்_உள்ள_அபூர்வ_ரகசியங்கள்_ குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்). தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். *குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள்.* *அந்தநீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும்.

மஹாலய பட்சம்

Image
வளர்பிறை_பிரதமை_மஹாலய_பட்சம் _ மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம். #_மஹாளய_பட்சம்_புரட்டாசி_மாத_பவுர்ணமிக்கு_மறுநாள்_பிரதமை_திதியில்_துவங்கி_அமாவாசை_வரை_நீடிக்கிறது_. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது

திருநீறு மகிமை மிக்க திருநீறு

Image
#__திருநீறு__மகிமை__ புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதை பட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. • பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. • அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. • சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. • நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. • அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். • முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கி

ஏகாதசி விரத மந்திரம் தமிழில்

Image
ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.  அந்த வகையில் நீங்கள் ஏகாதசி ஆகிய இன்று மிக எளிதாக ஜபிக்கக்கூடிய பெருமாளின் அழகிய தமிழ் மந்திரம் இதோ உங்களுக்காக.  “அரியே, அரியே, அனைத்தும் அரியே! அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல் வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”  “ஓம் நமோ நாராயணாய" ..  You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

வைகாசி விசாகம்

Image
#__வைகாசி__விசாகம்__ *************************** கடவுள்களின் அவதாரங்கள் பல நட்சத்திரங்களில் நடந்திருக்கின்றன. கிருஷ்ண அவதாரத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் அவதரித்தார். ராமாவதாரத்தில் அதே பரந்தாமன் ஸ்ரீராமன் என்ற பெயரில் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இதுபோல கடவுள் அவதாரத்தில் பெருமை பெற்ற நட்சத்திரங்களில் ஒன்று விசாகம். சிவபெருமானுக்கு திருக்குமரனாயும், திருமாலுக்கு மருமகனாயும் விளங்குகிறார் சுப்ரமணியன் என்னும் குமரக் கடவுள். முருகன் ஞானமே வடிவானவர் என்பதால் ஞான ஸ்கந்தர், ஞான பண்டிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஞான மூர்த்தி அவதரித்த நன்னாளே வைகாசி விசாகம். – தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்கும் உரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும். – திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும். பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில் தான். புத்த பெருமான் அவதாரம் செய்ததும் வைகாசி விசாகத

குபேரர் வரலாறு

Image
#__குபேரர்__வரலாறு__ இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர். சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள். புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர். பிரம்மாவின் பேரனான விஸ்ரவன் என்

சிவ வழிபாடு முறை

Image
#___சிவாலயத்தில்____வழிபாடு____செய்யும்____முறை____..!! உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழர்களில் உங்களுக்கு மட்டுமே இந்த பதிவை வாசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. ஏனெனில்,நீங்கள் மட்டுமே பைரவப் பெருமானின் அருளையும், சிவபெருமானின் ஆசியையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்கிறீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய பூர்வபுண்ணியம் வலிமையாக இருக்கிறது; தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன; இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன; ஒவ்வொருவருமே பேச்சு, மூச்சு, சிந்தனை முழுவதும் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது? என்ற நோக்கத்தின்படியே செயல்படத் துவங்கிவிட்டனர்; விளைவு? நமது எதிர்கால சந்ததியினருக்கு நமது பண்பாடு பற்றிய அடிப்படை ஞானம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது; இணையமும், கணினிபற்றிய அடிப்படை ஞானம் இல்லாதவர்களை கற்காலத்தைச் சேர்ந்தவரைப் போல எண்ணத் துவங்கிவிட்டனர்; அப்பா 40 வருடம் அரசுப்பணி புரிந்து தனது 58 வயதில் பெற்ற சம்பளத்தை அவரது மகன்/ள் 21 வயதில் பெறத் துவங்கினான்/ள். சிறு சிறு நகரங்களும் செல்வச் செழிப்பைப் பெறத் துவங்கின; ஆனால், அதே சமயம் செல்வ வளம்

பிரதோஷ வழிபாடு

Image
*20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்* மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் 1. தினசரி பிரதோஷம் 2. பட்சப் பிரதோஷம் 3. மாசப் பிரதோஷம் 4. நட்சத்திரப் பிரதோஷம் 5. பூரண பிரதோஷம் 6. திவ்யப் பிரதோஷம் 7. தீபப் பிரதோஷம் 8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் 9. மகா பிரதோஷம் 10. உத்தம மகா பிரதோஷம் 11. ஏகாட்சர பிரதோஷம் 12. அர்த்தநாரி பிரதோஷம் 13. திரிகரண பிரதோஷம் 14. பிரம்மப் பிரதோஷம் 15. அட்சரப் பிரதோஷம் 16. கந்தப் பிரதோஷம் 17. சட்ஜ பிரபா பிரதோஷம் 18. அஷ்ட திக் பிரதோஷம் 19. நவக்கிரகப் பிரதோஷம் 20. துத்தப் பிரதோஷம் *1.தினசரி பிரதோஷம்* தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். *2. பட்சப் பிரதோஷம்* அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும்

சிவனுக்கு உகந்த விரதங்கள்

Image
#___சிவவிரதங்கள்__எட்டு________ 1. சோமவார விரதம்; திங்கள் கிழமைகளில் இருப்பது 2. உமா மகேஸ்வர விரதம்; கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது 3. திருவாதிரை விரதம்; மார்கழி மாதத்தில் வருவது 4. சிவராத்திரி விரதம்; மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது 5. கல்யாண விரதம்; பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது 6. பாசுபத விரதம்; தைப்பூச தினத்தில் வருவது 7. அஷ்டமி விரதம்; வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது 8. கேதார கவுரி விரதம்; ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம். சைவ சமய விரதங்கள் (நோன்புகள்) மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆகைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக் கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் நமது முன்னோர்கள் விரதங்களை கடைப்பிடித்தனர் - உணவுகட்டுப்பாடு  ஒழு

இந்து மதம்

Image
*"இந்துவாகப் பிறந்த அனைவருமே", அவசியம் இதைத் தெரிந்துக்கொள்வோம் :-* 1. தமிழ் வருடங்கள்(60) 2. அயணங்கள்(2) 3. ருதுக்கள்(6) 4. மாதங்கள்(12) 5. பக்ஷங்கள்(2) 6. திதிகள்(15) 7. வாஸரங்கள்(நாள்)(7) 8. நட்சத்திரங்கள்(27) 9. கிரகங்கள்(9) 10. நவரத்தினங்கள்(9) 11. பூதங்கள்(5) 12. மஹா பதகங்கள்(5) 13. பேறுகள்(16) 14. புராணங்கள்(18) 15. இதிகாசங்கள்(3) இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். *தமிழ் வருடங்கள்:* 1. ப்ரபவ 2. விபவ 3. சுக்ல 4. ப்ரமோதூத 5. ப்ரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது(தாத்ரு) 11. ஈச்வர 12. வெகுதான்ய 13. ப்ரமாதி 14. விக்ரம 15. விஷு 16. சித்ரபானு 17. ஸுபானு 18. தாரண 19. பார்த்திப 20. வ்யய 21. ஸர்வஜித் 22. ஸர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத 30. துன்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வாரி 35. ப்லவ 36. சுபக்ருது 37. சோபக்ருது 38. க்ரோதி 39. விச்வாவஸு 40. பராபவ 41. ப்லவங்க 42. கீலக 43. ஸெளம்ய 44. ஸாதாரண 45. விரோதிக்ரு

திரிசூலம்

Image
சூலாயுதம் வைத்திருப்பது ஏன்...!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~ சூலம் தேவிக்குரிய ஆயுதம். அது மூன்று இலைகளைக் (பிரிவு) கொண்டது. இச்சூல வடிவத்தை பல்வேறு நிலைகளோடு ஒப்பிடுவார். மனிதனின் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மனிதனுக்குள்ள மூன்று நிலைகளாகவும் சொல்வர். மனம், வாக்கு, காயம் (உடல்) என்றும் சொல்லலாம். இம்மூன்றாலும் ஒரு மனிதன் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். மனம் ஒன்று நினைக்க வாக்கு ஒன்று சொல்ல, காயம் (உடம்பு) ஒரு செயலில் ஈடுபடக்கூடாது என்பதையே சூலத்தின் வடிவம் காட்டுகிறது. வாழ்வில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் தேவியின் அருள்பெற்று மகிழ்வார்கள். இச்சை (நியாயமான ஆசை), கிரியை (அதைச் செயல்படுத்தும் தன்மை), ஞானம் (அதனால் ஏற்படும் பலன்) என்றும் சொல்லலாம். இந்த மூன்று சக்திகளும் நமக்கு சிந்திக்க வேண்டும் என்பதையும் சூலம் காட்டுகிறது. சூலத்தை வெறும் கொல்லும் ஆயுதம் என்று பார்க்கக் கூடாது. தத்துவார்த்தமாகத் தரிசிக்க வேண்டும். எனவே தான் அம்பிகையை ‘திரிவர்க்க தாத்ரீ’ (படைத்தல், காத்தல், அழித்தலாகிய தொழிலுக்கு அதிபதி) என்று போற்றுகின்றோம். You can join to

ஹரிவராசனம்__தமிழ் விளக்கம்...

Image
++++++++++++++++++++++++++++++++++ ஹரிவராசனம் விஸ்வமோகனம் –   பொருள் – தமிழ் விளக்கத்துடன்.. ++++++++++++++++++++++++++++++++++ ஹரிவராசனம் விஸ்வமோகனம் ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம் அரிவிமர்தனம் நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்) பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ சரணகீர்த்தனம் சக்தமானசம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாஸுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம் ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்ச

சனி மஹா பிரதோஷம்

Image
சனி மஹா பிரதோஷம்... #___துன்பம்__போக்கும்__சங்கடங்கள்__தீர்க்கும்__சனி__மஹா_பிரதோஷம்___ சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும்.  சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.          பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகலகாரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷவிரதம். பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந