குபேரர் வரலாறு

#__குபேரர்__வரலாறு__


இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.
புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.
பிரம்மாவின் பேரனான விஸ்ரவன் என்பவருக்கும், சப்தரிஷிகளில் ஒருவரான பாரத்துவாசரின் மகளான இலவித என்பவருக்கும் பிறந்தவர் குபேரன். விஸ்ரவனுக்கும், அசுரர், (இந்து சமயம்)|அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசித் தம்பதியர்களுக்கு பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன் ஆவார்.
தேவர்களின் சிற்பியான விசுவகர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டிணத்தினை படைத்துத்தந்தார். இந்தநகரம் குபேரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக கருத்துண்டு.
குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் சேவை சாதிக்கிறார் குபேரன். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்.
சிறந்த சிவபக்தரெனவும், சிவனுடைய இனிய நண்பரெனவும் கதைகளில் கூறப்படுகின்றன. வடக்கு திசை அதிபதியாகவும் அஷ்டதிக் பாலகர்களில் ஒருவராகவும் வணங்கப்படுகிறார். குபேரன் சிவனின் தோழர் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு சிவனின் நண்பர் என்றும் பொருள் கொள்ளும் படியாக சிவசகா என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு.
சிவபெருமானைக் குறித்து 800 வருடங்கள் தவமியற்றி அவரது நட்பினை பெற்றார் எனவும், பிரம்மனை நோக்கித் தவமிருந்து வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார்.
பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.
#__ஸ்ரீ__லட்சுமி__குபேர__பூஜை__
செல்வம் விரைவாக கிடைக்க லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையான தீபஒளி திருநாளான தீபாவளி நாளன்று கொண்டாடப்படுகிறது.
#__குபேர__இயந்திரம்__
குறுக்கும் நெடுக்குமான எண்களைக் கூட்டும் போது 72 வரக்கூடிய மாய சதுரத்தினை குபேர எந்திரத்துடன் இணைத்து வைக்கின்றார்கள்.
குபேர மந்திரம் 1
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா.
குபேர மந்திரம் 2
ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா.
குபேர மந்திரம் 3
ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபா..
You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை