பாவமும் புண்ணியமும்..

#__புண்ணியமும்__பாவமும்_


பதிவுகளில் நன்மையே பயக்கும் செயல்களைப் புண்ணியம் என்றும் தீமை பயக்கும் செயல்களைப் பாவம் அல்லது பழிச்செயல்கள் என்றும் வழங்குகின்றோம்.

புண்ணியம்:

எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ பிற்காலத்திலோ அறிவிற்கோ உடலுக்கோ துன்பம் தராது விழிப்போடு துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியம் எனப்படும்.

பாவம்:

ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கோ பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுணர்ச்சிக்கோ, பகுத்திறிவுக்கோ துன்பம் விளைவிப்பதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் எனப்படும்.
பாவப் பதிவுகள் இருவழிகளில் வெளிப்படும்.

1. உடலில் நோய்
2. உள்ளத்தில் களங்கம்.

சிறுகதை

ஒரு திருடன்! அவனைக் காவலர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி அவன் ஒரு ஆசிரமத்திற்குள் நுழைந்தான்! ஆசிரமத்திலிருந்த துறவி அவனைப் பார்த்துவிட்டார். 
""பசி உயிர் போகிறது'' என்றான் திருடன்.
துறவி தட்டுத் தடுமாறி அவனுக்கு சமைத்துப் போட்டார். அவன் திருடன் என்பது அவருக்குத் தெரியவில்லை. வயிறார உண்டான் திருடன்! வயிறு நிறைந்ததும் அவன் மனசாட்சி அவனை உறுத்தியது! துறவியின் கால்களில் விழுந்தான்! 

""ஐயா, நான் ஒரு திருடன்.....காவலர்களால் தேடப்படுபவன்!....உங்கள் கருணைக்கு நன்றி!''என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்!
துறவி அதிர்ந்தார்! ஒரு திருடனுக்குப் போய் சமைத்துப் போட்டிருக்கிறோமே என்று மிகவும் வேதனைப் பட்டார். இந்தப் பாவிக்கு உதவி செய்தது சரியா என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எத்தனை பேரின் பொருளை அபகரித்தானோ! ஒரு வேளை தகாத மனிதனுக்கு உதவி செய்ததால் தன்னை பாவம் பீடிக்குமோ என பயந்தார். கடவுளை வேண்டினார். கடவுள் துறவியின் முன்னால் தோன்றி, ""இத்தனை வருட காலம் அவனுக்கு இந்த பூமியில் தங்க இடம் தந்து உணவும் தந்து நான் காத்திருக்கிறேனே!....நீ ஏன் வருத்தப்படுகிறாய்?.... நீ செய்தது மிகப் புண்ணிய காரியம்.....இப்போதுதான் அவன் திருந்தினான்! தன் திருட்டுத் தொழிலை விட்டுவிடுவதாக சபதமேற்றான்! என்னை மனமுருகப் பிரார்த்தித்தான்!'' ஒரு வேளை நீ அவனை விரட்டியிருந்தால்!....அவன் மனிதனாக மாற வாய்ப்பேது?...'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

You can join to my public group to learn more about spiritual information : -


Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை