திரிசூலம்

சூலாயுதம் வைத்திருப்பது ஏன்...!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~


சூலம் தேவிக்குரிய ஆயுதம். அது மூன்று இலைகளைக் (பிரிவு) கொண்டது. இச்சூல வடிவத்தை பல்வேறு நிலைகளோடு ஒப்பிடுவார். மனிதனின் விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மனிதனுக்குள்ள மூன்று நிலைகளாகவும் சொல்வர்.
மனம், வாக்கு, காயம் (உடல்) என்றும் சொல்லலாம். இம்மூன்றாலும் ஒரு மனிதன் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். மனம் ஒன்று நினைக்க வாக்கு ஒன்று சொல்ல, காயம் (உடம்பு) ஒரு செயலில் ஈடுபடக்கூடாது என்பதையே சூலத்தின் வடிவம் காட்டுகிறது.
வாழ்வில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் தேவியின் அருள்பெற்று மகிழ்வார்கள். இச்சை (நியாயமான ஆசை), கிரியை (அதைச் செயல்படுத்தும் தன்மை), ஞானம் (அதனால் ஏற்படும் பலன்) என்றும் சொல்லலாம்.
இந்த மூன்று சக்திகளும் நமக்கு சிந்திக்க வேண்டும் என்பதையும் சூலம் காட்டுகிறது. சூலத்தை வெறும் கொல்லும் ஆயுதம் என்று பார்க்கக் கூடாது. தத்துவார்த்தமாகத் தரிசிக்க வேண்டும். எனவே தான் அம்பிகையை ‘திரிவர்க்க தாத்ரீ’ (படைத்தல், காத்தல், அழித்தலாகிய தொழிலுக்கு அதிபதி) என்று போற்றுகின்றோம்.

You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை