மனத்தூய்மை

மனத்தூய்மை தரும் நல்வாழ்வு

“நான் யார்’ என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.

உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புவமை இல்லாத ஒரு பெரிய பொருளை (இறைவனை) போல நம்மையும் உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.

நானே பிரம்மமாக (தெய்வமாக) இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீதும் ஆசை வராது. அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்று ஆகியவை நம்மை விட்டு விலகிவிடும்.

தன்னை அறிந்த நிலையில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகிறது.

You can join to my public group to learn more about spiritual information : -

https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை