Posts

கிரகப்பிரவேசம்

Image
 கிரகப்பிரவேசம்  வேதங்களில்!வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும்  வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும்.  அது எப்படி செய்வது முறை என்று அறிவோம். கிரகப்பிரவேசம் செய்யும் முறை:...............  பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும்.  அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம். தெய்வாம்சம் பொருந்திய இல்லம்   கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம்.  காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது.  அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்

மூன்று குணங்கள்

Image
 மூன்று குணங்கள்..! மனதிடம் மூன்று குணங்கள் உள்ளன. அவைகள், தாமச குணம், ராஜஸ குணம் மற்றும் சத்துவ குணம் என்பதாகும். அன்பு, கருணை, பணிவு, ஒழுக்கம், சந்தோஷம் எதற்கும் பதற்றப்படாமல், சாந்தமான மன நிலையில் அனைவரின் மீதும் பிரியமாக எப்பொழுதும் இருந்து கொண்டே, நல்ல சிந்தனா சக்தியுடனும், கிரியா சக்தியுடனும் இருப்பதைத்தான் “சத்வ குணம்” என்ற சாத்விகம் கொண்ட மனம் எனப்படும். எப்பொழுதும் ஒரே பதற்றம், ஆசை, கோபம், விருப்பு, வெறுப்பு மற்றும் உணர்ச்சி வசப்படுவது, இவை எல்லாம் ரஜஸ் - “ரஜோ குணம்” அல்லது ராஜஸ குணம் பெற்ற மனம் எனப்படும். ஒரே கருமித்தனம், சோம்பேறித்தனம் மந்தத் தன்மையுடன் இருப்பது, எதிலும் ஆர்வமில்லாமல் காணப்படுவது, அடிக்கடி தூங்கி வழிவது போன்றவைகள் “தாமஸ குணம்” கொண்ட மனம் எனப்படும். இந்த மனம் எப்படி இருக்கின்றதோ, அதுப்போலவே, அந்த ஜீவனின் செயல்பாடுகள் காணப்படும். அந்த செயல்களின் வெளிப்பாடாக ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையைப் பார்த்து அறிய முடியும். இவ்வாறு செயல் செய்யும் மனிதன் தன்னுடைய செயல்களை சாஸ்திரம் சார்ந்து செய்தால், அந்த செயல்களின் வெளிப்பாடு நன்றாகவும், மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும்

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 10

Image
 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 10  தச மஹாவித்யா தேவியரில் பத்தாவதாக தரிசிக்க இருப்பது வறுமைப் பிணியகற்றும் ஸ்ரீ கமலாத்மிகா தசமஹா தேவியரில் கடைசி தேவி அதே நேரம், அனைத்து சக்திகளின் ஆற்றலும் உடையவள். சாட்சாத் ஸ்ரீ மஹாலட்சுமி அம்சம் சொரூபம் சக்தி உடையவள். 🌺 தோற்றம் மற்றும் வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்: இவள் பரப்ரஹ்ம ஸ்வரூபிணி. இந்த சக்தி சுவர்ண நிறத்தினள். தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் பதித்த ஆபரணங்கள் அணிந்தவள். சந்திரனைப் போன்று மக்களை மகிழ்விப்பவள். இந்த சக்தியின் சாந்நித்தியமானது எங்கு நிறைந்துள்ளதோ, அங்கே பொன், பசுக்கள், குதிரைகள், நண்பர்கள், குழந்தைச் செல்வம் ஆகியன நிறைந்திருக்கும். ராஜ சம்பத்தை அள்ளி அருள்பவள். இவள் முறுவல் பூத்த முகத்தினள். ஆபரணங்களாலும் உயர்ந்த குணங்களாலும் ஜொலிப்பவள். இந்த தேவி நறுமணம் உடைய இடத்தில் வசிப்பவள்.தான் திருப்தியாய் இருந்து, அனைவருக்கும் திருப்தியை அளிப்பவள். சூரியன் போன்று பிரகாசிப்பவள். உள்ளும் புறமுமாயுள்ள துன்பம் வறுமை ஆகியவற்றை போக்குபவள். இந்த தேவியை வழிபடும் அடியவர்களை குபேரசம்பத்து வந்தடையும். பசி, தாகம், பாப ரூபமாக விளங்கும் அனைத்தும

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 9

Image
 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 09 தச மஹாவித்யா தேவியரில் ஒன்பதாவதாக தரிசிக்க இருப்பது ராஜயோகம் அருளும் ஸ்ரீராஜமாதங்கி. 🌺 பெயர் காரணம்: பிரம்மாவின் புத்திரரான மதங்க மஹரிஷியின் பிரார்த்தனைக்கு தவத்திற்கு ஏற்ப ஆதிசக்தியின் அம்சமாக மாதங்கியாக தோன்றினாள். இந்த சக்தியை மந்த்ரிணி எனப் போற்றுவர். 🌺 வேறு பெயர்கள்: தேவர்கள் இந்த தேவியை ஸங்கீத யோகினீ, ச்யாமா, ச்யாமளா, மந்த்ரிநாயிகா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேசீ, சுகப்ரியா, வீணாவதீ, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியக ப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவன வாசினீ, ஸதாமதா என்று பலவாறு துதித்தனர். வீணை, குழல், மிருதங்கம் ஆகியவை தரித்த சங்கீத யோகினிகள் ஆகிய சக்திகள் எப்போதும் இந்த தேவியின் பக்கம் இருப்பர். இந்த சக்தியின் நாமாக்களை அனுதினமும் வழிபடுபவர்களுக்கு வேண்டியது கிடைக்கும். 🌺 வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்: வேண்டியதை மாரி(மழை) போல் வாரி வழங்குவது அன்னையின் சிறப்பு. ராஜாங்க காரியங்களில் வெற்றி, ஆட்சி செய்பவர்களுக்கு வெற்றி ஆகிய அனைத்தையும் அளிப்பவள் ராஜமாதங்கீ. இந்த தேவியை உபாசிப்பவர்களுக்கு ஸர்வ ஸித்திகளையும் அளிப்பாள். குறிப்பாக வாக்குஸித்தி ஏற்பட

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 8

Image
ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர்  பகுதி - 08 தச மஹாவித்யா தேவியரில் எட்டாவதாக தரிசிக்க இருப்பது வெற்றிகள் அருளும் ஸ்ரீ பகளாமுகி. 🌺 உருவக் காரணம்: நமது சனாதன தர்மத்தில் செய்யப்படும் எந்தவொரு மந்திர உபாஸனையும் உலக நன்மைக்காகத்தானே தவிர, தனி மனித விருப்பு - வெறுப்புகளை நிறைவேற்றி கொள்வதற்காக அல்ல. இதை நாம் புரிந்து கொண்டோமானால் நாம் இந்த தேவதைகளின் பெருமைகளை மேலும் அறியலாம். இதுபோன்று தீமைகளை அழிக்கும் தெய்வங்களை நாம் வணங்கும் போது, நம்மில் இருக்கும் அசுரத்தன்மை விலகி, நம்மை சுற்றி இருக்கும் தீமைகளும் போக்கப்படுகிறது. அப்படிபட்ட அசுர தன்மை கூறிக்கும் வகையில் அசுரனை தண்டிக்கும் கோலத்தில் இந்த தேவியை தியானிப்பது மரபு. 🌺 பெயர் காரணம்: அசுரர்கள், தேவர்களை அழிக்க சில ஆபிசார பிரயோகங்கள் செய்த வஸ்துக்களை புதைத்து விட்டுச் சென்றனர். புதைத்து விட்ட சென்ற வஸ்துக்களை ‘க்ருத்யா' என்று கூறுவர். அவற்றை அழிக்கும் வாக்கு அல்லது சொல்லுக்கு, ‘வலகஹனம்' என்று பெயர். வலகா என்பது ‘பலகா’ என மறுவி, பிறகு ‘பகளா’ என்று அமைந்தது. அதனுடன் ‘முகி’ சேர்ந்து ‘பகளாமுகி’ என்ற பெயர் ஏற்பட்டது. ‘பகளா’ எனில் பேசக்கூடிய சக

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 7

Image
ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 7 தச மஹாவித்யா தேவியரில் ஏழாவதாக தரிசிக்க இருப்பது துன்பங்கள் நீக்கும் ஸ்ரீ தூமாவதி தேவி. தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்த தாட்சாயணி பிறகு வேள்வி குண்டத்தில் தன் சரீரத்தை வீழ்த்தினாள். அதனால் அதற்கு கௌரி குண்டம் எனப்பெயர் ஏற்பட்டது. அந்த குண்டத்தினின்று எழுந்த புகை மண்டலமே தூமாவதி என்ற சக்தியாய் உருவெடுத்தது என சாக்த தந்திரங்கள் கூறுகின்றன. இவள் தோன்றிய மாதம் பால்குனம், செவ்வாய்க்கிழமை, அட்சயதிரிதியை, ஸாயங்கால நேரம். இவள், ஸர்வ ஸம்ஹார சஞ்சலா - அனைத்தையும் சம்ஹாரம் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவள். 🌺 தேவியின் தோற்றம்: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள். கருத்த முகம் உடையவள் ஆதலால் காலமுகீ என்றும் ஜ்யேஷ்டா தேவி, மூதேவி, முத்ததேவி என்று பலவிதமாக வடிவங்கள் உடையவர். அன்னை குறித்த தகவலை நேரடியாக அறிய முடியா விட்டாலும் வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டியது கிடைக்கும், தீயவர்களுக்கு தீயவை ஏற்படும், தொற்று நோய்கள் தீரும் வஞ்சனை எண்ணம் கொண்டு

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 6

Image
 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 6 ************************************ தச மஹாவித்யா தேவியரில் ஆறாவதாக தரிசிக்க இருப்பது துஷ்ட சக்திகளை அழிக்கும் ஸ்ரீ சின்னமஸ்தா. "தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாயச" என்ற வாக்கியத்துக்கு இணங்க 'தீயவர்களை அழிக்கவும் நல்லோர்களை காக்கவும் ஆயுதங்களைத் தாங்கியுள்ளேன்' என்று விவரிக்கிறாள் சக்தி தேவி. 🌺 அன்னை உருவம்: இந்த தேவியின் திருவுருவம், தரிசிப்பவருக்கு ஒருவித பயத்தை உண்டாக்கும். எனினும், உயர்வான தத்துவத்தை உணர்த்துவது இந்த வடிவத்தின் நோக்கம். நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் இடா, பிங்களா, சுஷும்னா என மூன்று நாடிகள் முக்கியமானவை. நமது உடலின் இயக்கமே ரத்த ஓட்டத்தினால் தான் ஒரு மனிதனுக்கு சீரான உடல்நிலை இருப்பதற்கும், யோக மார்கத்தில் சிறந்து விளங்கி, தன்னை அறிந்து பிறவிப் பயனை அடைவதற்கும் இந்த தேவியானவள் அருளுகிறாள் என்பது, நம் முன்னோர்கள் இந்த சக்தியின் உபாசனையை செய்து நமக்கு அளித்த அனுபவம். அதேபோல் வர்ணினீ, டாகினி தேவியர்களுடன் தலையைக் கொய்தவளாக உக்ர கோலத்தில் அம்பிகைக் காட்சித் தருவாள். இந்தத் திருக்கோலமும் தீயவற்றை அழிக்கவே என

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 5

Image
 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 5 தச மஹாவித்யா தேவியரில் ஐந்தாவதாக தரிசிக்க இருப்பது அச்சம் அகற்றும் ஸ்ரீ திரிபுர பைரவி. "இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே" ஆதி சக்தியான காளியே ஸம்ஹார காலத்தில் பைரவி உருவை எடுத்து அருள்கிறாள். சிவப்பரம்பொருள் நிகழ்த்திய லீலையில் சிவபெருமானிடம் இருந்து பல பைரவர்கள் தோன்றினர். அவர்கள் அனைவரும் சிவபெருமானைப் போன்றே உருவம் பெற்றிருந்தனர். அந்தகனாக உள்ள அசுரனை சிவபெருமான் ஆட்கொண்ட பிறகு, மலைகளில் உறைந்து பக்தர்களை காத்து அருள் புரிந்து, வேண்டிய வரம் அருளி, சிவார்ச்சனை விதிகளையும், தந்திரங்களையும் உலகுக்கு அளித்து அருளும் படி பைரவர்களைப் பணித்தார் சிவபெருமான். பைரவர்கள் வேண்டிய சக்தியைப் பெற்றிட, எல்லாம் வல்ல பராசக்தியை தியானித்து ஆராதனை செய்யுமாறு கட்டளையிட்டார் சிவபெருமான். அதன்படி அனைத்து பைரவர்களும் பராசக்தி ஆராதனை செய்து அன்னை அருளால் சக்திகள் பெற்றனர். பைரவர் சக்திகளுக்கெல்லாம் மூலமானவளே தி

மாங்காடு காமாட்சி அம்மன்

Image
🚩மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவில் வரலாறு 🚩 சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அம்மன் கோவில்கள் பல இருந்தாலும், சொல்லும்போதே மனதில் வைராக்கியத்தையும், உற்சாகத்தையும், தைரியத்தையும்,ஆறுதலையும் அளிக்கும் அம்பாள் என்று சொன்னால்,'மாங்காடு காமாட்சி அம்மனையும்,திருவேற்காடு தேவி கருமாரியம்மனையும், திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், பாரிமுனை காளிகாம்பாளையும்தான் சொல்வார்கள். அம்மன் திருத்தலங்கள் பகுதியில் இன்று இடம் பெறுகிறார், தவமாய் தவமிருந்து வரங்களை வாரி வழங்கும் மாங்காடு காமாட்சி அம்மன்! 🔯மாங்காடு ஒருகாலத்தில்  நெல் வயல்களுக்கு மத்தியில் பசுஞ்சோலைவனத்தில் அமைந்திருந்த கோவில் இன்று கான்கிரீட் காடுகளால் சூழப்பட்டு இருக்கிறது. காலமாற்றங்கள் எது நடந்தாலும் நெருப்பின் மீது நின்ற நிலையில் தவமிருக்கும் காமாட்சி அன்னை,தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தவமாய் தவமிருந்து வரம் வழங்கி வருகிறார்.  இப்படி தவக்கோலத்தில் ஈசனை நோக்கி அம்பாள் தவமிருப்பது எதனால்? 🚩நெருப்பின் மீது நின்று தவம் பனி படர்ந்து கிடக்கும் கயிலாலய மலையில் உலக நன்மையை நினைத்திருந்த ஈசனின் கண்களை உமையவள் தன் செந்தாமரைக் கரங்களால்

தச மஹா வித்யா தேவியர் - பகுதி 4

Image
 ஸ்ரீ தச மஹாவித்யா தேவியர் - பகுதி 4 தச மஹாவித்யா தேவியரில் நான்காவதாக தரிசிக்க இருப்பது புவனம் காக்கும் ஸ்ரீபுவனேஸ்வரி. புவனங்களுக்கு எல்லாம் தலைவியாகத் திகழ்பவள், ஸ்ரீபுவனேஸ்வரி. ஞானியர் போற்றும் குண்டலினி சக்தி இவளே. "நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே" " வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ " என்ற படி, வேண்டியவற்றை வேண்டிய படி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் புவனேஸ்வரி தேவி ஒருவளே. 🌺 அபய-வரத முத்திரைகள்: நாம் அனைவரும் அந்த ஆதிசக்தியின் குழந்தைகள். அம்மையின் திருக்கரங்களில் திகழும் அபய-வரத முத்திரைகள், அவளது தாயுள்ளத்தையே காட்டுகின்றன. உலகத்தவருக்கு பயம் வந்தால், அதைப் போக்க பராசக்தியால்தான் முடியும். அப்படி, சகல ஜீவராசிகளுக்கும் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதையே தனது அபய முத்திரையால் உணர்த்துகிறாள் சக்திதேவி. எதை நினைத்ததும் இந்த ஸம்ஸார ஸாகரத்தினின்று விடுபடுகிறோமோ அதை அபயம் என்று போற்றுவதாகக் கூ