Posts

மஹா ப்ரத்யங்கிரா

Image
 சக்தியின் உக்கிரமான வடிவம்தான்  _மஹா_பிரத்யங்கரா.  இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்  பிரத்யங்கிரா தேவி இவளை நம்பி வணங்கும் பக்தர்களை காப்பாற்றி எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள் பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள். அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் இவள். சம்சார பந்தத்திலிருந்து மீட்டு மோட்சம் தரக்கூடிய தேவதையும் இவளே.அம்பிகையை பைரவரே பூஜித்ததால் அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள். இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா. லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின் 22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்படுகிறது. தேவி

பஞ்ச வில்வம்

Image
சிவனுக்குகந்த பத்திரங்கள் - பஞ்சவில்வம் அவை :  1. வில்வம்  2. நொச்சி 3. முட்கிளுவை 4. விளா 5. மாவிலங்கை (அ)      முல்லை (6) மஹாவில்வம். இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. சிவ  சிவ....

கிரிவலம்

 கிரிவலச் சிறப்பு :  திருஅண்ணாமலையில் சாட்சாத் சிவபெருமானே பூரண யோக சித்தலிங்க மலை வடிவில் காட்சியளிப்பதால் மலையைச் சுற்றி வலம் வருவதுதான் மிகச் சிறந்த வழிபாடு ஆகிறது. இன்றைக்கும் பலகோடி சித்தர்களும், மஹான்களும், யோகியர்களும் தினந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இப்பூவுலகில் பல மலைவலங்கள் இருந்தாலும் இரண்டு மலைவலங்கள்தான் மிகவும் தெய்வீக ஈர்ப்பு வாய்ந்தவையாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று இமயமலையில் கைலாய கிரிவலம்; மற்றொன்று திருஅண்ணாமலை கிரிவலம். திபெத் நாட்டில் தெய்வீகப் பெருவாழ்வு வாழ்கின்ற ‘லாமாக்கள்' (Lamas) எனப்படும் அற்புதமான யோகியர்கூட இன்றும் பூத உடலால் (Physical Body) திருக்கயிலாய மலையையும், சூட்சும சரீரத்தால் (Spiritual Body) திருஅண்ணாமலையையும் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். துமட்டுமா? அந்தந்த கிழமைக்குரிய கிரஹாதிபதிகளும், நட்சத்திர தேவதைகளும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதுண்டு. புழுக்கள், விலங்கினங்கள், தாவரங்கள், வண்டினங்கள் என ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரித்தான தேவதைகளும் தங்கள் இனத்தின் நலம் திருஅண்ணாமலையை வலம் வருகின்றன. வேண்டித் ஸ்ரீஆஞ்சநேயர்

தன்வந்திரி 108 போற்றி

Image
 ஏற்கனவே இருந்த நோய்களும் இனி நோய் வராமல் இருக்கவும் சொல்ல வேண்டிய தன்வந்திரியின்_108_போற்றிகள். நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பவர் தன்வந்திரி பகவான் ஆவார். தன்வந்திரி பகவான் வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்கனவே உடலில் இருக்கும் நோய்களும், இனி வர இருக்கும் பிணிகளும் தீரும் என்பது நம்பிக்கை. மனித குலத்திற்கு ஆயுர்வேதத்தை அளித்த தன்வந்திரி பகவான்! பாற்கடலில் இருந்து தோன்றிய அமிர்த கலசத்தில் இருந்து உருவானவர் தன்வந்திரி பகவான் ஆவார். தினமும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும்! எவ்விதமான நோய்களும் நம்மை அண்டுவதில்லை என்கிறது சாஸ்திரம். தன்வந்திரி பகவான் 108 போற்றியை இப்பதிவில் காணலாம். தன்வந்திரி_108_போற்றி 1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி! 2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி! 3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி! 4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி! 5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி! 6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி! 7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி! 8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி! 9. ஓம் அமரர் தெய்வமே போற்றி! 10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி! 11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி! 12. ஓம் அருள

வீரபத்திரர்

Image
 வீரபத்திரர் யார்? தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.  ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு.. தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.  அதற்கு பதில் தன் அரு

நட்சத்திரங்களுக்கு உரிய மூல மந்திரங்கள்

Image
 *** அவரவர்களுடைய பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ;---.  1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி:                         ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம: 2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி:                        ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம: 3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி:                         ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம: 4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி:                          ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம: 5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி:                           ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம: 6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி:                           ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம: 7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி:                            ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம: 8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி:                            ஓம் ஸ்ரீம

அஷ்டதிக் பாலகர்கள்

Image
 அஷ்டதிக் பாலகர்கள் இந்திரன்      *திசை:கிழக்கு* *பத்தினி:இந்திராணி,(சசிதேவி)* *வாகனம்:வெள்ளை யாணை* *ஆயுதம்: வஜ்ராயுதம்*     *த்யானம்* _________________ *||ஐராவத கஜாரூடம் ஸ்வர்ண வர்ணம் கிரீடினம்,|* *|ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ர பாணிம் விபாவயேத்||* ____________________________       *அக்நி*      ____________ *திசை: தென்கிழக்கு* *பத்தினி: ஸ்வாஹாதேவி* *வாஹனம்: ஆட்டுக்கிடா* *ஆயுதம்:அக்னி ஜ்வாலையுடன் கூடிய வேல்*      *த்யானம்*       ___________ *||ஸப்தார்சிஷஞ்ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டுலம்|* *|ஜ்வாலா மாலா குலம் ரக்தம் ஸக்தி ஹஸ்தஞ்ச காநஸம்||* ____________________________      *யமன்* ________________ *திசை:தெற்கு* *பத்தினி: குபேரஜாயை* *வாகனம்: எருமைக்கிடா* *ஆயுதம்: பாசக்கயிறு* *சூரியனின் குமாரன்,* *சனியின் சகோதரர்,* *சகோதரி: யமி,,or (யமுனை)*     *த்யானம்*      ____________ *||க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம்|* *|காலபாஸ தரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிண திக்பதிம்||* _____________________________      *ந்ருதி* ________________ *திசை: தென்மேற்கு* *பத்தினி:கட்கி* *வாகனம்: ப்ரேதம்* *ஆயுதம்:கட்

அரைஞாண் கயிறு (அரணாக்கொடி)

Image
 *வெள்ளி அரணாக்கொடி* இதை பழைய காலத்தில் குடியானவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்.. குடியானவர் குடும்பம் மட்டுமே இல்லை கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில் தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இருப்பீர்கள்.... என்ன அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும் கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???) அணிந்து மட்டுமே இருப்பார்கள்.. இதை பார்த்து பார்த்து பழகி இன்றைய பேரன்மார்கள்  இப்பொழுது வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்ட தகாத பொருள் போல இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.. அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு.. ஆண்களின் இடுப்பில்  உரசி கொண்டே இருக்கும்  அரணா என்பது  ஆண்களின்  விந்தணு பையில் வைத்து இருக்கும் விந்தணுக்கள் எதை அழிவில்லாது காப்பாற்றி கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது.. ஜோதிட ரீதியான அடிப்படையில் சனி பகவான் சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார்.. இந்த சனி பகவான் நம் உடலில்  ஆங்கிலத்தில் ஸ்பைனல் கார்ட் என

துளசி மாடம்

Image
வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி கூடவே இருப்பார்”… வீட்டுக்கு முன்னாடி கட்டாயம் வைங்க..!! ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன பாதிப்பும் இல்லை. வீடுகளில் துளசிமாடம் அமைப்பதன் மூலம் பூச்சிகள் நுழையாமல் தடுக்கலாம். வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடுவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளை மட்டுமல்ல பகவான் கிருஷ்ணரின் அருளையும் பெறலாம். பகவான் கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும். பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற

குழந்தை பாக்கியம்

Image
 'தப்பாமல் குழந்தைபாக்கியம் தரும் சீராளம் பொம்மை'..."  "திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்தராபதீசுவரர் திருக்கோயில்"..உத்ராபதியாகிய பைரவத்தொண்டருக்கு சாப்பிட சிறுத்தொண்ட நாயனார் தன் மகன் சீராளனை பலியிட்டு கறி சமைத்து கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் சித்திரை பரணி நட்சத்திர நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.பிள்ளைக்கறி அமுது படையல் குங்குமப்பூ, பச்சை கற்பூரம், அரிசி மாவு கொண்டு செய்யப்படும். அதற்கு சீராளம் என்று பெயர்.மாவில் செய்த ‘சீராளம் பொம்மை’. புத்திர பாக்யத்திற்கு சீராளம் என்பார்கள். இந்த சீராளம் பற்றி ஒரு ஐதீகம்.  குழந்தை இல்லாதவர்கள் இந்த சீராளம் சாப்பிட்டால் மறுவருடத்திற்குள் குழந்தை பிறக்கும் என்கிறார்கள்.  மயிலாடுதுறையில் இருந்து 42 கி.மீ..நன்னிலத்துக்கு தென்கிழக்கே 9 கி.மீ.....திருவாரூரில் இருந்து 15 கி.மீ.