மஹா ப்ரத்யங்கிரா
சக்தியின் உக்கிரமான வடிவம்தான்
_மஹா_பிரத்யங்கரா.
இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்
பிரத்யங்கிரா தேவி இவளை நம்பி வணங்கும் பக்தர்களை காப்பாற்றி எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள்
பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள். அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் இவள். சம்சார பந்தத்திலிருந்து மீட்டு மோட்சம் தரக்கூடிய தேவதையும் இவளே.அம்பிகையை பைரவரே பூஜித்ததால் அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள். இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா. லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின் 22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்படுகிறது. தேவி உபாசகர்களிடம் விரோதம் பாராட்டுபவர்கள், தேவியின் பெயரால் உபாசகர்களை ஏமாற்றுபவர்கள் போன்றோரின் கண்பார்வையை இவர் மங்கச் செய்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அந்தகன் எனும் அசுரனை ஒழிக்க பைரவருக்கு உதவிய சக்தி பிரத்யங்கிராவே.
மந்திர தந்திரங்கள் என கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி நாச காரியங்களில் ஈடுபடுகிறவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள்.
‘‘பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனு
கம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம்
விதாரய’’
என தேவி மஹிம்ன ஸ்தோத்திரம் விளக்குகிறது. அதை எவனொருவன் ஸ்ரீவித்யா உபாசகனைக் குறித்து அபிசார கர்மா செய்கிறானோ அக்கர்மாவை பிரத்யங்கிராதேவி தானாகவே திருப்பி விட்டு அவனைக் கொன்று விடுகிறாள். அதர்வணவேதம் போற்றிப் பணிந்திடும் பத்ரகாளிதேவி இவள். அதர்வண பத்ரகாளியான இத்தேவியே எல்லா பலன்களையும் பக்தர்களுக்கு அருளுவதோடு மகாமாயையாக இருந்து திருமாலுக்கே மது-கைடபரை அழிக்க வழி வகுத்தவள். மது-கைடபர் சிந்தையில் இவள் புகுந்து அகம்பாவத்தை ஏற்படுத்தி, திருமாலிடமே, ‘எங்களுடன் இவ்வளவு தீவிரமாக போர்புரியும் திருமாலே! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறோம்’ என்று சொல்லவைத்தவள். திருமாலுக்கு வேலை சுலபமாயிற்று. ‘உங்கள் இருவரையும் கொல்ல வரம் கொடுங்கள்’ என்று கேட்டு அவர்களை சம்ஹாரம் செய்தார்.
முக்தியை அடைந்த மகான்கள் இந்த காளியை உபாசித்தவர்களே. மாயையை வெல்லவும் மோட்சத்தை அடைவதற்கான தகுதியைப் பெறவும் இவள் தயவு மிக மிக அவசியம். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட காளிமாதாவை உபாசித்தே கைவல்யபதம் அடைந்தார். இருபது அட்சரங்கள் கொண்ட மூல மந்திரமும், மாலாமந்திரமும் பிரபஞ்சசார தந்திரம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் தலை, 2000 கைகள் என்றால் அவள் விச்வரூபி என்றே கொள்ள வேண்டும். விஸ்வமென்ற ஸமஸ்த ஜகத்திலும் பரவி இருப்பவள் என்று பொருள். இதை, ‘யதாஹி கதலீ நாமத்வக் பத்ரான்யா ந த்ருச்யதே ஏவம் விஸ்வஸ்ய நான்யத்வம் த்வத்ஸ்தா ஈஸ்வர த்ருச்யதே’ என்கிறது விஷ்ணு புராணம்.
ப்ராக பாவம் (முன்பு இல்லை); த்வம்ஸாபாவம் (இனி இருக்கப் போவதில்லை) என்று பல பாவங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் அம்பிகைக்கு இல்லை. இதை பின்வரும் வாக்கியங்கள் விளக்குகின்றன:
ஸ பூர்வேஷாமயி குரு: காலேநா நவசச் சேதாத்
யோக ஸூத்திரம்
புமான் ஆகரசவத் வ்யாபீ ஸ்வாதிர்க்தம்
ம்ருஷா யத:
தேசத: காலதச் சாபி ஹ்யநந்தோ வஸ்துத:
ஸ்ம்ருத : ஸௌர ஸம்ஹிதை
கோபம் என்பது அற்ப குணம்தான். ஆனால், வீரபத்திரரின் கோபம் தர்மாவேசமானது. சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ வெறி அது. இதற்குப் பக்கத் துணையாக இருந்தவள் பிரத்யங்கிரா.
அம்பிகைக்கு ‘க்ரோத சமனீ’ அதாவது கோபத்தை நாசம் செய்பவள் என்று பெயர். ‘கோபமுடையவர் செய்யும் தானம், யக்ஞம், தபஸ், உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில் எடுத்த ஜலம்போல போய் விடுகிறது’ என்கிறது ஆபஸ்தம்ப ஸூத்திரம். தாருகனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்யங்கிராவே. தாருகனை அழிக்க சிவபெருமான் சிருஷ்டித்த இவளுக்கு காலகண்டி என்று பெயர் என்கிறது லிங்க புராணம்.
‘ஸ ஸர்ஜ காளீம் காமாரி : கால கண்டீம் காபர்தினீம்’ - அப்போது அவள் ருத்ரனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினாள் என்கிறது மார்க்கண்டேய புராணம்.
அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் சௌகை சாகையில் 32 ரிக்குகளும் பிப்பலாத சாகையில் 48 ரிக்குகளும் பிரத்யங்கிராவைப் பற்றியவை. இத்தேவியைப் பற்றி நாரத தந்திரம் எனும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. சரபர், பைரவர் எல்லோருமே சிவாம்சம். பிரத்யங்கிரா பைரவரின் பட்ட மகிஷி. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தை செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்பது திருநாமம்.
அம்பிகையை பைரவரே பூஜித்ததால் அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள். இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா. லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின் 22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்படுகிறது. தேவி உபாசகர்களிடம் விரோதம் பாராட்டுபவர்கள், தேவியின் பெயரால் உபாசகர்களை
ஏமாற்றுபவர்கள் போன்றோரின் கண்பார்வையை இவர் மங்கச் செய்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அந்தகன் எனும் அசுரனை ஒழிக்க பைரவருக்கு உதவிய சக்தி பிரத்யங்கிராவே.
தாரகன், தன் ரத்தம் கீழே சிந்தினால், அந்த ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஆயிரம் அசுரர்கள் தோன்றும் வரத்தைப் பெற்றிருந்தான். ஒரு பெண் மூலம்தான் தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அவனைக் கொல்ல விஷ்ணு வைஷ்ணவியையும் பிரம்மா பிராம்மியையும் மகேஸ்வரன் மாஹேஸ்வரியையும் குமரன் கௌமாரியையும் இந்திரன் இந்திராணியையும் யமதர்மராஜன் வாராஹியையும் ஷட்மாதர்களாக்கினர். அவர்கள் அறுவராலும் தாருகனைக் கொல்ல முடியாமல் போனது. அப்போது ருத்ரனின் கண்களிலிருந்து பிரத்யங்கிரா பத்ரகாளி ஆவிர்பவித்தாள்.
அவளுடன் காளீ, காத்யாயனீ, சாந்தா, சாமுண்டா, முண்டமர்த்தனி, த்வரிதா, வைஷ்ணவி, பத்ரா எனும் எட்டு சக்திகளும் தோன்றி அனைவரும் ஒன்றாகி தாருகனைக் கொன்றனர். சப்தசதியில் இந்த மகாகாளிக்கு ‘ஐம்’ பீஜம் கொடுக்கப்பட்டுள்ளது. காளியின் பீஜம் பொதுவாக ‘க்லீம்’ என்பதேயாகும். ஐம் எல்லா ஞானத்தையும் குறிக்கும். ஞானத்தைத் தருபவள் அதன் மூலம் ஆனந்தமும் தருகிறாள். எனவே ஐம் பீஜம் இவளுக்கு தரப்பட்டுள்ளது. மகாலட்சுமி சத் ரூபிணி. மகா சரஸ்வதி சித் ரூபிணி. சித் எனில் அறிவு. மகா சரஸ்வதி அறிவுதரும் சக்தியாக மட்டுமன்றி சிருஷ்டியை நடத்தி வைக்கும் பிரம்ம சக்தியாகவும் விளங்குகிறாள். சிருஷ்டிக்கு மனிதர்களைத் தூண்டுபவன் மன்மதன். க்லீம் மன்மத பீஜமாகும். ஆசை ஏற்பட்டால் மட்டுமே சிருஷ்டி ஏற்படும். எனவே இது காமராஜ பீஜமுமாகும். சிருஷ்டி சக்தியாகிய மகாசரஸ்வதிக்கு க்லீம் பீஜம் பொருத்தமானதே.
‘க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி
மஹத்பயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய’
என்று சொல்லப்பட்டிருக்கிறது. சரபர், பைரவர் எல்லோருமே சிவ அம்சம். பிரத்யங்கிரா பைரவரின் மஹிஷி. லோகத்திற்கு மரணம் (சிருஷ்டி) ரமணம் (ஸ்திதி) வமனம் (சம்ஹாரம்) செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்று பெயர். ஸ்ரீபுரத்தில் 22, 23வது பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அசுரனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது. சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திம காலத்தைக் கொடுக்கும் ரகசியத்தைச் சொல்லி அனுப்பினார். பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வந்தார். இதற்கு உதவியாக இருந்தவள் பிரத்யங்கிரா. பைரவ பத்தினியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.
இவள் ஞானத்தை தருபவளாதலால் வித்யை ரூபமாகவும் அவித்யை ரூபமாகவும் இருக்கிறாள். வித்யை, ஸ்வாத்மா ரூபமான ஞானம். அவித்யை (ஞானம் ஏற்படுவதற்கு முன்புள்ள நிலை). கடைசி விருத்தியின் ரூபமான ஞானம். இவ்விரண்டு ஸ்வரூபங்களாகவும் அம்பிகை இருக்கிறாள். இவ்விரண்டையும் உடையவன் அவித்யையினால் ம்ருத்யுவை ஜயித்து வித்யையினால் அமிர்தத்துவத்தை அடையச் செய்கிறான்.
‘வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயம்
ஸஹ
அவித்யாய ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமச
நுதே ச்ருதி’
-இந்த இரண்டு ரூபங்களில் வித்யா ரூபத்தால் ஜீவன் விடுவிக்கப்படுகிறதென்றும் அவித்யா ரூபத்தால் கட்டப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.
‘வித்யா வித்யேதி தேவ்யா த்வே ரூபே ஜானிஹீ
பார்த்திவ
ஏகயா முச்யதே ஜந்து : அந்யயா பத்யதே புந:’
-என்கிறது தேவி பாகவதம்...
Comments
Post a Comment