திதி அறிந்திருப்போம்
திதி அறிவோம்! ••••••••••••••••••••••• திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். திதி - தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை! பிரதமை - முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள். துவிதியை - இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும். திருதியை - கெளரிமாதாவுக்கு உகந்த நாள். சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும். சதுர்த்தி - நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீழ்த்துதல், தடை தகர்தல் ம