முழு முதற் கடவுள் - விக்ன விநாயகர்

விநாயக பெருமானின் பேரருள்!!
________________


எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்க முன்னர் விநாயகரை வணங்குவது சைவத் தமிழர் (இந்துக்களது) மரபாகும். தடைகள், இடையூறுகள், அவலங்கள் ஏற்படாதவாறு எண்ணிய கருமங்கள் விநாயகர் வழிபாட்டால் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. வழிபடும் அடியார்களுடைய இடையூறுகளைக் களையவே விநாயகர் தோன்றினார் என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய,

பிடி அதன் உரு உமைகொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன்

என்னும் தேவாரத்தின் மூலம் அறியலாம். நம்பியாண்டார் நம்பியும் இதனையே தமது திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலையில்,

என் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் எனக் குறிப்பிடுகிறார். விநாயகபுராணம்,
இடர்கள் முழுவதும் அவனருளால் எரிவிழும் பஞ்செனமாயும் எனக் காட்டுகின்றது.

விநாயகன் என்றால் தனக்கு மேல் நாயகன் அற்றவன் என்று பொருள் படும். ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமுமான எல்லாம் வல்ல முழு முதற்கடவுளான விநாயகத் திருவுருவமும் இதைக் காட்டுகிறது. பரந்த வெளியில் ஓங்கார நாதத்திலிருந்து அண்ட சராசரம் தோன்றியது என்பதை அலங்கார வடிவான விநாயகரின் திருவுருவம் விளக்கி நிற்கிறது.

‘மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்தொளிய தாரகையுங் திசைகளெட்டுந் திரிசுடர்கள் ஒரிரண்டும் பிறவுமாய பெருந்தகையை’ என்று பாடுகிறார் அப்பர் சுவாமிகள்.

எல்லா உயிர்களிடத்தும் விநாயகர் நீக்கமற நிறைந்துள்ளமையைச் சுந்தார்.

ஒரு மேக முகிலாகி ஒத்துலகந் தானாய்
ஊர்வனவும் நிற்பனவும் ஊழியகந் தானாய்
பொருமேக கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் விளக்குவார்.

You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை