சிவ பெருமான் அருளைப் பெற

எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால்_
சிவனின்_முழு_அருளை_பெறலாம்


மேஷம்
மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்.

ரிஷபம்
திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுனம்
திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்
திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம்.

சிம்மம்
சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

துலாம்
சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

விருச்சிகம்
திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

தனுசு
திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

மகரம்
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

கும்பம்
சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனம்
வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

ஓம் நமச்சிவாய 🙏

You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை