மார்கழியில் வழிபாடு
இறை வழிபாட்டுக்கு உகந்த மாதம்
" மார்கழி "
__________________
மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.
மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம்.பகவத்கீதையில், கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், மாதங்களில் நான் மார்கழி என்கிறார். இந்து சமயத்தின் வேதங்களும், ஆகமங்களும், மார்கழி மாதத்தை இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த மாதமாகக் குறிப்பிடுகின்றன.
மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது.
அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம் என்று மார்கழியின் சிறப்பு எடுத்துரைககிறது.
பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும், புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. மார்கழி மாதத்தில் இறை வழிபாட்டில் சிவ தலமும், விஷ்ணு தலமும் சிறப்பு பெற்றது. இருப்பினும், இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலுமே அதிகாலை நேரங்களில் பூஜை நடைபெறும்.
அந்த நேரத்தில் கோவில்கள் மட்டுமின்றி, வீட்டிலும் பெண்கள் பூஜை செய்யலாம். அதிகாலையில் எழுந்து, வீட்டினை சுத்தம் செய்து, இறைவனை துதித்து வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இதனால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கூடும்.
திருவிளக்கில் ஒளியேற்றி, நம் மனதிற்கு பிடித்த தெய்வங்களுக்கு மலர் மாலை அணிவித்து அல்லது உதிரிப்பூக்கள் தூவி, அந்தத் தெய்வங்களைக் குறித்த பக்தி பாடல்களை பாட வேண்டும்.அதே போல் இந்த மார்கழி மாத வைகறை பொழுதான, பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலம், இறை வழிபாட்டுக்கு ஏற்றதாகும்.
அதிகாலை நேர துயில் கலைந்து குளித்து இறை வழிபாடு செய்வது என்பது நமது உடலுக்கு நன்மை செய்வதாக இருக்கிறது.கன்னிப்பெண்கள் மட்டும் நெய், பால் சேர்த்த உணவைச் சேர்க்கக்கூடாது. நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து சாப்பிடலாம்.மற்றவர்கள் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.
மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர்.
மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந்தது. மார்கழி மாத வழிபாடு வழி வழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.
மேலும் மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கபட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடிக்கொண்டும் ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் ஆலயங்களுக்குச் செல்வர். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள். இந்த மார்கழியில், சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு வந்து தவமிருப்பதாக நம்பிக்கை.🌺
You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments
Post a Comment