பெர்முடா முக்கோணமும் வேதங்களும்
பெர்முடா முக்கோணமும் வேதங்களும். பெர்முடா முக்கோணம் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன அதர்வண , ரிக் வேதங்கள் 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்' இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. 'கு' என்றால் பூமி, 'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள். இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் வார்த்தை. ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்ற