வேதங்கள்
நமது பாரததேசத்தின் அடிநாதமாக விளங்குவது வேதங்களாகும்.
வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நான்காகும்.
வேதங்களுக்கு மறை என்றும், மந்திரம் என்றும், கேள்வி என்றும், சுருதி என்றும், எழுதாகிளவி, எழுதாமறை என்று பலப் பெயர்கள் உண்டு.
வேதங்களை ஸ்வரம் சுத்தமாக ஓத வேண்டும்.வேதங்களுக்கு சப்தமே பிரதானம்.
வேத ஓலி நமது பண்டை தமிழகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது.
"ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் "-என்று #அப்பர்பெருமான் #வேதஓலிகளை புகழ்ந்து #திருவையாறு தேவாரத்தில் பாடுகின்றார்.
"கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும் வேதத் தொலியோவா வீழிமிழலையே " -என்று
சம்பந்தபெருமான் வேத ஒலியை தேவாரத்தில் போற்றி பாடுகின்றார்.
இத்தகைய சிறப்புடைய வேதங்களை ஓதுதல் மற்றும் பயிலும் முறையினை ஐந்து வகையாக பிரித்துள்ளனர்.
அவை,
சம்ஹிதா, பதம், கிரமம், ஜடை, கனம்.
சம்ஹிதா பாடம் :
மூலசம்ஹிதை என்றால் வேத மந்திரங்களை சந்தி சேர்த்துச் சொல்வதாகும்.இது அடிப்படை கல்வி போன்று.
பதப் பாடம் :
சம்ஹிதா பாடத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் பதப் பாடம் பயில்வார்கள்.
பதம் என்பது, வேதமந்திரங்களை பதம் பதமாக பிரித்து ஓதும் முறையாகும்.இது உயர் நிலை கல்வி போன்று.
கிரமப்பாடம்:
பதம் பாடத்தில் தேர்ச்சிபெற்றவர் கிரமம் பயில்வார்கள்.கிரமம் என்றால் ஒழுங்கு, முறைமை என்று பொருள்.
கிரமாய் சொல் என்று கூறுவார்கள்.
கிரமம் என்பது, வேத மந்திர பதங்களை முன்னும் பின்னுமாக சொல்லி ஓதும் முறையாகும்.இது மேல் நிலை கல்வி போன்று.
கிரமம் வரை படித்த அந்தணர்கள் குடியிருந்த பகுதியே #கிராமம் என்று அழைக்கப்பட்டது.
ஜடை ( அ)ஜடா பாடம் :
கிரமம் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜடா பாடம் பயில்வார்கள்.
ஜடை என்பது வேத மந்திரங்களை சேர்த்து சேர்த்து மறுபடியும் பிரித்து ஓதும் முறையாகும்.
அதாவது ஜடை பின்னல் போன்று.இது பட்டப் படிப்பு போன்று.
கனம் பாடம்:
ஜடா பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கனம் பாடம் பயில்வார்கள்.
கனம் என்பதற்க்கு பாரம், பரூமன், பெருமை, செறிவு எனப் பொருள்படும்.
வேதமந்திரங்களை விசேஷமாக மாற்றி மாற்றி பதங்களை ஒரு முறை இரு இருமுறை மும் மும்முறை மீண்டும் ஒருமுறை என ஓதும் முறையாகும்.
இது உயர் பட்டப்படிப்பு போன்று.கனம் படித்தவர்களை கனபாடிகள் என்று அழைப்பார்கள்.
வேதங்களை இம்முறையில் ஓதியும், ஓதப்பட்டும் வருவதால், வேதங்களில் இடைச்செருகல்கள் ஏற்படாமலும், ஒலிக்குறிப்புகளில் மாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகின்றது.
இவ்வாறு வேதங்களை ஒலிமாறாமல் ஸ்வரத் சுத்தத்தோடு சொல்வதில் தொன்னாட்டு அந்தணர்கள் முக்கியமாக தமிழக அந்தணர்கள் சிறப்புற்று விளங்கியுள்ளனர்.
சிவார்ப்பணம்.
Comments
Post a Comment