பஞ்சமுக ஆஞ்சநேயர்

 ஆஞ்சநேயர்_தன்_முகத்தோடு

நான்கு_முகங்களை_சேர்த்து

பஞ்சமுக_ஆஞ்சநேயராக

மாற_காரணம்_என்ன?



பஞ்சமுகத்தின்_தத்துவம்

என்ன?


ஆஞ்சநேயர் சுவாமி

இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார் என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். 


பஞ்சமுக_ஆஞ்சநேயரின்_தோற்றம்


பஞ்சமுக ஆஞ்சநேயரின் தோற்றத்தைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு கிளைக் கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம். 


இராம – இராவண யுத்தத்தின் போது, பாதாளலோக அரசனான மஹிராவணாவின் உதவியை இராவணன் நாடினான். ஹனுமார், இராம இலட்சுமணர்களைப் பாதுகாக்க, தனது வாலையே ஒரு கோட்டையாக மாற்றி, அதில் பத்திரமாக அவர்களைப் பாதுகாத்தார். ஆனாலும், மஹிராவணாவோ, விபீஷணன் உருவம் எடுத்து வந்து, அவர்களை சிறைப் பிடித்து, பாதாளலோகம் கூட்டிச் சென்றான்.


அதை அறிந்த ஹனுமார், அவர்களை பத்திரமாக மீட்க, பாதாளலோகம் சென்றார். அங்கு சென்ற பிறகு தான், அவ்விடத்தில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தால் தான், மஹிராவணாவின் உயிர் பிரியும் என்பதை அறிந்தார். 


உடனே, தன் முகத்துடன், ஸ்ரீநரசிம்ம சுவாமி, #ஸ்ரீஹயக்ரீவ சுவாமி, ஸ்ரீலஷ்மி_வராக சுவாமி மற்றும் ஸ்ரீமஹாவீர_கருட சுவாமி ஆகியோர் முகங்களையும் கொண்ட பஞ்ச முக வடிவம் எடுத்து, அந்த ஐந்து விளக்குகளையும் ஒரு சேர அணைத்தார். 


இதனால், கொடியவன் மஹிராவணான் மாண்டான். பிறகு ஹனுமாரும், இராம இலட்சுமணர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.


மேலும், பஞ்சமுக ஆஞ்சநேயர், மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார். அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது. அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.


கும்பகோணத்திலும், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 


திருவள்ளூர் (சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவு) அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர்

சிலை மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


பஞ்சமுகங்களின்_முக்கியத்துவம்!!!!


கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்குவதுடன், மனதையும் தூய்மைப் படுத்துகிறது.


தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமக்குள் இருக்கும் எதிரிகள் பற்றிய பயத்தைப் போக்குவதுடன், நம்மை வெற்றி பெறவும் வைக்கிறது.


மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீமஹாவீர_கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் காத்து கருப்பினால் ஏற்படும் தீய விளைவுகளைப் உடனடியாகப் போக்குவதுடன், கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும் விஷத்தையும் முறிக்கிறது.


வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி_வராக சுவாமி முகமானது, நமக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதுடன், அனைத்து விதமான அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கிறது.


மேல்_நோக்கியுள்ள_ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தினையும், நாம் ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியினையும், புத்ர பாக்கியம் அளிக்கிறது


ஜெய்_ஆஞ்சநேயா!!!

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை