குங்குமத்தின் மகத்துவம்

 குங்குமத்தின் மகத்துவம்.

****************************



அவசியம் படிக்க தவறாதீர்கள் .......


சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் தான் உள்ளது ..


குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள்.


குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.


மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். 


இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.


கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. 


வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.


இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். 


இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில்இரும்புச் சத்தாக மாறிவிடும். 


படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. 


அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.


1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.


2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.


3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.


4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.


5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.


6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.


7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.


8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.


9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.


11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.


12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.


மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.


வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம்

வைங்க இந்திய கலாச்சாரத்தில் பெண்கள்

குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது

மங்களமானதாக கருதப்படுகிறது.


அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால்

உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை

தான் வைத்துக்கொள்ள வேண்டும்.


குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம்,

புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி

போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள்.


அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள்

உள்ளன.


வசியத்தில் இருந்து தப்பலாம்.

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில்

மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை

வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை

வசியப்படுத்தும் போது தம் பார்வை

ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின்

இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின்

பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.


கழுத்தின் பின்பகுதி சடையால்

மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில்

பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது.


இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும்.


இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும்

ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது;

வசியப்படுத்த முடியாது.


யோகசாஸ்திரம் கூறும் உண்மை

***********************************


மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில்

இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில்

தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம்

புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி

நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து

புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள்

தெரிவிக்கின்றன.


பெண்கள் அனைவரும் பொட்டு

வைத்துக்கொள்ள வேண்டும்.


திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில்

வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப்

பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல்

சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.


ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும்

தீமைகள்....

****************************************************


முன்னோர்கள் ஏன் பெண்கள் மஞ்சளை

தேய்த்துக் குளித்து குங்குமம் வைக்க

வேண்டும் என்று சொன்னார்கள் தெரியுமா?


பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட

மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது

ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர்

பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல

எதிர்கால சந்ததிகளையே கேள்விக்

குறியாக்கியுள்ளது நடு நெற்றியில் உள்ள

லலாட மத்தியை (புருவமத்தி என்றும்

அழைக்கப்படும்) நெற்றிக்கண் என்றும்

அழைக்கப்படும். பழங்காலத்தில்

மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச்

சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும்

சக்தியை செலுத்துவார்கள். மேலும் அந்த

பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும்

பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு

புள்ளியாக அக்குபங்சரில் பயன்படுத்தப்படு

கிறது.மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள்

திலர்த வர்மம் என வர்மப்பிரிவில்

குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ரக்ரந்தி என அழைக்கப்படுகிற்து.

படத்தில் காண்க. `


ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும்

சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச்

சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம்,

மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்?


செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம் (Phychic

Attacks & Evil Spirits Attachments)

போன்றவற்றையும் செயல்படுத்த படுகிறது.


மேலும் clairvoyance என்ற தொலைவில்

உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக

உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும்

நோய்களைக் களையவும்,வந்த நோய்களை

கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம்

நல்ல நிலையில் இருப்பது அவசியம்

ஆக்கினைச் சக்கரம் யோக சாதன

முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து.


தியானமுறைகளின் மூலமாக முக்தியை

அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பெண்களை இது போன்ற

தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்

ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம்

பொருந்திய குங்குமம்.


மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம்

பழசாற்றில் ஊறவைத்து, பின் உலர வைத்து

பொடிசெய்தால் குங்கமம் தயாராகும். (சிலர்

வெண்காரத்தையும் நன்றாக ஒட்டுவதற்காக

நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்)


பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும்

சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச்

சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,

இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு

நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.


மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால்

உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி

சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்

பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும்

சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID

STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை

செயல்படுத்த வைக்கும்.தைராய்டு

சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள்

இரண்டும்(T3,T4) பெண்களின்

மாதாந்தரவிலக்கை(MONTHLY PERIODS)

நிர்ணயம் செய்கிறது. இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன் (ESTROGEN)

சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.


தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி

பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற

மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்

கொண்டே இருக்க வேண்டும்.இதன்

பின்விளைவுகள் என்னென்ன என்று இங்கு

சொல்லாமல் விடுகிறேன். எஸ்ட்ரோஜன்

(ESTROGEN) சுரப்பு குறைவதாலும்

உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள், ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது.


இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே

கேள்விக்குறியாகி உள்ளது. எனவே ஸ்டிக்கர்

பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம்

காப்பதுடன் நம் நலமும் காப்போம்.


குங்குமம் தயாரிப்பது எப்படி?

*******************************


தேவையானவை:

1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள்

- ஒரு கிலோ

2) எலுமிச்சம் பழச்சாறு - 1 1/2 லிட்டர்

3)வெங்காரம் - 170 கிராம்

4)சீனாக்காரம் - 65-70 கிராம்

5)நல்லெண்ணை - 100 கிராம்

6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர் -

வாசனைக்கு தேவையான சில துளிகள்


கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக

உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில்

போடவும்.


அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை

சாறை அதனுடன் கலக்கவும். அத்துடன்

வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து

கலக்கவும் நன்றாகக் கலந்ததும் மெல்லிய

வெள்ளைத்துணியால் மூடி தனியே

வைக்கவும். தினமும் காலையும் மாலையும்

நன்றாகக் கிளறிவிடவும். கிளறுவதற்கு

மரக்கரண்டியையே உபயோகிக்கவும் சாறு

முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல்

கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சாறு ஏற

ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு

மாறியிருக்கும்.


பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி

நிழலில் காயவைக்கவேண்டும். இப்போது

கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும்

நேரமும் நிறைய பொறுமையும் பிடிக்கும்

வேலையிது!


நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள

இரும்பு உரல், உலக்கை கொண்டு கைப்பிடி

கைப்பிடி அளவாகப் போட்டு

இடிக்கவேண்டும். சுமாராக இடிபட்டதும் அதே

பாத்திரத்தின் வாயை மெல்லிய

வெள்ளைத்துணியால் கட்டி பொடி செய்ததை

அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்'

செய்யவேண்டும். மேலிருக்கும் கப்பியை

உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little

கப்பி. fine powder -ஆக கிடைத்த மஞ்சள்

பொடியை.... இனிமேல் 'குங்குமம்' என்றே

அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான

அளவு நல்லெண்ணை ஊற்றி கிளறவும்.


நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை

தேவை.


இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ

அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு

நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி

பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.


தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக

எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக்

கேட்பவர்க்கும் கொடுக்கலாம். சிறு

பிளாஸ்டிக் டப்பாவில் பக்கிங் செய்து

விற்பனை செய்யலாம் எல்லோரும் மஞ்சள்

குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ

வாழ்த்துகிறேன். பழைய பாட்டொன்றொடு

முடிக்கிறேன்.


"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு

புடவை கட்டி

நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை

பின்னிவிட்டு

உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு

புகழ்ந்ததையா

நற்றிடும் பழமை அதை நாடுவதே

நல்லதையா!"

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை