Posts

Showing posts from January, 2020

ஸ்ரீ ஸ்யாமளா தண்டகம்

Image
ஸ்ரீ ஶ்யாமளா தண்டகம் ஸ்ரீ காளிதாஸர் இயற்றியது (ஸரஸ்வதி கடாக்ஷம் கிடைக்க) மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி. சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்குமராகசோ’ணே புண்ட்ரேக்ஷு பாசா’ங்குச’ புஷ்ப பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத: மாதா மரகதச்’யாமா மாதங்கீ மதசா’லினீ குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வன வாஸினீ ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸுகப்ரியா தண்டகம் ஜய ஜனனீ ! ஸுதா ஸமுத்ராந்த ஹ்ருத்யன் மணீத்வீப ஸம்ரூட பில்வாடவீ மத்ய கல்ப த்ருமா கல்ப காதம்ப காந்தார வாஸப்ரியே, க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே ! ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோல நீபஸ்கரா பத்த சூளீ ஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே ! ஶேகரீபூத ஶீதாம்ஶுரேகா மயூகாவளீபத்த ஸுஸ்நிக்த்த நீலாலகஶ்ரேணி ஶ்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே காமலீலா தனுஸ்ஸன்னிப ப்றுலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸுதா ஸேசனே சாரு கோரோசனா பாங்க கேளீ லலாமாபி ராமே, ஸுராமே ரமே ப்ரோல்லஸத்வாளிகா மௌக்திக ஶ்ரேணிகா சந

நாக தேவதை, மானசா தேவி

Image
நாக தேவதையான மானசா தேவியின் கதை! நாக தேவதையாக கருதப்படும் மானசா தேவியை வங்காளம் மற்றும் இந்தியாவின் இதர வட கிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் வழிப்பட்டு வருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள அனைத்தையும் மானசா தேவி தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல் அவரை வழிப்பட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. கருவளத்திற்கும், செழுமைக்கும் கூட மானசா தேவியை மக்கள் வணங்குகின்றனர். புராணத்தின் படி, சிவபெருமானின் மகளே மானசா தேவி. இருப்பினும் அவர் காஷ்யபா முனிவரின் மகள் என்றும் சிவபெருமானின் தூரத்து உறவு என்றும் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அவர் வாசுகியின் சகோதரி மற்றும் ஜரட்கரு முனிவரின் மனைவியுமாவார். அவர் பெற்றோர் யார் என்பதில் குழப்பம் இருந்ததால், மற்ற கடவுள்களுக்கு அளிக்கப்பட்ட அந்தஸ்து இவருக்கு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக தன்னை வழிப்பட மறுப்பவர்களிடம் சீற்றம் கொண்டும், வழிபடுபவர்களிடம் மிகுந்த கருணையுடனும் நடந்து கொள்வார். நாக தேவதையான மானசா தேவியைப் பற்றிய முழுக்கதையையும் தெரிந்து கொள்வோமா? கலந்த பெற்றோர்கள் சமயத்திரு நூலின் படி, மானசா தேவியின் ப

மஹா மேரு, ஸ்ரீ சக்கரம் வழிபாடு

Image
 ஸ்ரீ_ சக்ரமேரு வழிபாடு ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை. சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார். ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார். ஸ்ரீ ருத்தி

ஜென்ம நட்சத்திரக் குறியீடுகள்

Image
வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர். வெற்றிக்கு தனி வழி வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவர

திருவாதிரை பண்டிகை

Image
மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரை. பண்டிகை  ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”  என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.அன்று தான் தில்லையில் நடராஜர் வியாக்ரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தார் திருவாதிரை நட்சத்திரம்:  ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், "ஆ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார்.அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்... ஏன் தெரியுமா? சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, ம

திருவாதிரை களி

Image
திருவாதிரை களி பிறந்த கதை தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார் என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார். அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம். சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார். காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை. இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் ச

போகி பண்டிகை

Image
போகி பண்டிகை கொண்டாடப்படுவதன் ஆன்மிக தத்துவம் என்ன தெரியுமா ?                                                                        ...... நீண்ட நெடிய கலாசாரப் பெருமையைக்கொண்ட நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையும் மனிதனின் வாழ்வை மேம்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் உருவாக்கப்பட்டதே. அந்த வகையில் மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் திருவிழாவின் முதல் நாள் விழாவாக மார்கழி மாதத்தின் கடைசி நாளில் வரும் போகிப் பண்டிகை அமைந்திருக்கிறது. பண்டைய தமிழர்களின் வழக்கப்படி ஆண்டின் கடைசி நாளான இந்த நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நல்லவற்றைத் தொடர்ந்து செய்யவும் உறுதி ஏற்பார்கள். இதுவே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற கருத்துருவமாகத் தோன்றியது. ‘போக்கி’ எனும் இந்தப் பண்டிகையே குப்பை கூளங்களை நீக்கி வாழ்விடங்களைச் சுத்தமாக்கும் நாளாக மலர்ந்தது. நாளடைவில் ‘போக்கி’ என்பது மருவி “போகி” என்றானது. -  - ‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வர

உத்திராயனம் தக்ஷ்ணாயனம்

Image
தெரிந்த பெயர் =தெரியாத செய்திகள். உத்தராயனம், தட்சிணாயனம் தட்சிணாயனம்=== 'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி 1 -ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி அந்தத் தேவர்களை ஆராதனை செய்து வழி படுகிறார்கள். உத்தராயனம்==== 'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம