உத்திராயனம் தக்ஷ்ணாயனம்
தெரிந்த பெயர் =தெரியாத செய்திகள்.
உத்தராயனம், தட்சிணாயனம்
தட்சிணாயனம்===
'தட்சண்' என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி. அதாவது சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செல்லும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி 1 -ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் படுக்கையில் இருந்து விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோவில்களில் பஜனை பாடி அந்தத் தேவர்களை ஆராதனை செய்து வழி படுகிறார்கள்.
உத்தராயனம்====
'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். 'அயனம்' என்றால் வழி என்று பொருளாகும். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாகும்..
உத்தராயனமும், தட்சினாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும்.
சூரியன் தெற்காகவும் வடக்காகவும் நகருவதாக நமக்குத் தோன்றுவது ,புவியானது தனது அச்சில் 231/2 பாகை சாய்ந்து சூரியனைச் சுற்றி வருவவதால் தான்.
நமது பூமி 23.5 கோணம் சாய்ந்து சுற்றுகிறது . அதனால்தான் தன்னைத்தானே சுற்றும்போது கடக ரேகையிலிருந்து மகர ரேகை வரை சூரியனின் ஒளி நேரடியாக படும் வகையில் சுற்றுகிறது ...அதனால்தான் காலநிலை மாற்றம் நமக்கு ஏற்படுகிறது.
இயற்கையின் விதிப்படி தை முதல் ஆனி மாதம் வரை வடதிசை நோக்கி கதிர்வீசும் சூரியன், தென் திசை மீது தன் பார்வையை திருப்பும் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம். இதனால் வெப்பம் நிறைந்த கோடைக்காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர்காலமாக மாறுகிறது. இது மழைக்காலத்தின் தொடக்கம். புது உயிர்கள் பிறக்கும் காலம். விதைத்த பயிர்கள் செழித்து வளரும். அதனால்தான் ’ஆடிப்பட்டம் தேடிவிதை” என்றனர்.
தஷ்ணாயனம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
உத்தராயனத்தைப் புண்ணிய காலம் என்று சொல்வார்கள். மகாபாரதப் போரின் பத்தாம் நாள் வீழ்ந்த பீஷ்மர், உத்தராயணம் வரும்வரை நான் உயிரோடு இருப்பேன் என்று சொன்னார். நினைக்கும்போது மரணத்தைத் தழுவிக்கொள்ளும் வரத்தைப் பெற்றிருந்த அவர், உத்தராயணத்தில் இறந்தால் புண்ணியம் என்பதேலேயே அப்படிச் சொன்னார். அந்த உத்தராயனத்தின் தொடக்கத்தையே சங்க்ராந்தி என்று நாட்டின் பிற இடங்களில் கொண்டாடுகிறார்கள்.
சங்க்ராந்தி என்னும் சொல்லின் பொருள் இந்தப் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். சம்யக் + க்ராந்தி = சங்க்ராந்தி. அதாவது சரியான புரட்சி. சமுதாயத்தில் நல்ல விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் புரட்சியைச் சரியான புரட்சி என்று சொல்லலாம். அத்தகைய புரட்சியை விழையும் நல்லுணர்வின் வெளிப்பாடுதான் இந்தப் பெயர்.
தமிழகத்தின் பொங்கல் பண்டிகையிலும் இந்தப் ‘புரட்சி’ என்னும் அம்சம் இருக்கிறது. கடும் உழைப்புக்கும் மழைக்காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக் காலம் இந்தத் தினத்தில்தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நாள் இது. உழவுக்குத் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். புதிய வளமை, புதிய உற்சாகத்தையும், புதிய மாற்றத்தையும் கொண்டுவருகிறது. எனவே பொங்கல் பண்டிகையிலும் சமுதாயத்திற்குத் தேவையான புரட்சி இருகிறது.
‘பழையன கழிந்து புதியன பிறக்கும்’ உணர்வைக் கொண்டாடப் பொங்கலுக்கு முதல் நாள் பழைய பொருள்களையெல்லாம் நெருப்புக்குத் தீனியாக்குவார்கள். பொருள்கள் வெறும் அடையாளங்கள்தாம். பழையன என்று சொல்லும்போது காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் விடுத்துப் புதிய சிந்தனைகளை, வழக்கங்களைக் கைக்கொள்வதே இதன் உட்பொருள். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் மறுமலர்ச்சிச் சிந்தனையின் வெளிப்பாடே இந்த நிகழ்வு. இந்த மறுமலர்ச்சியே சரியான புரட்சி.
சங்க காலத்தில் பொங்கல் விழாவைத் தமிழர்கள் இந்திர விழாவாக, தை மாதம் முழுவதும் கொண்டாடினராம். இந்த விழாவிற்குப் பல மாதங்களுக்கு முன்னர் அதாவது ஆடி மாதமே மழை வேண்டி இந்திரனைக் குறித்து விரதம் இருப்பார்களாம் விவசாயிகள். ஆறு மாதம் கடந்த பின் தை மாதம் விரதம் முடித்து, பழையன கழிதலும், புதியன புகுதலுமாய்மார்கழி இறுதி நாள் போகிப் பண்டிகை கொண்டாடுவர் தமிழர்.
புதுப் பானை, புது அரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு நிவேதனம் செய்யும் பொங்கல் திருநாள் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இதனுடன் முழுக் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து ஆகியவற்றுடன் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் ஆகியவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள். இந்த விழா இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா. இயற்கையோடு ஒன்றி வாழும் உழவர்களைக் கொண்டாடும் வகையில் தை இரண்டாம் தேதி உழவர் திருநாளாகச் சிறப்பு பெறுகிறது. உழவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டை கிராமப்புறங்களில் நிகழ்த்துவார்கள்.
இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறையம்சத்தைக் காண்பது இந்திய மரபு. உலகுக்கு உயிரும் ஒளியும் தரும் சூரியனைப் போற்றும் பொங்கல் பண்டிகை இதற்குச் சரியான உதாரணம்.
இயற்கையை இறை சக்தியாகக் கொண்டு வழிபடும் இந்தப் பண்டிகை, உலகுக்கு அமுதூட்டும் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும் திருநாளாகவும் விளங்குகிறது. பொங்கலுக்கு முன்னும் பின்னும் நடக்கும் பண்டிகைகள் சமூகப் பார்வையையும் நம் வாழ்வுக்கு உறுதுணையாய் விளங்கும் விலங்குகளை நேசிக்கும் தன்மையையும் பிரதிபலிக்கின்றன.
https://www.facebook.com/gandhi.mohan.399

Comments
Post a Comment