நாக தேவதை, மானசா தேவி

நாக தேவதையான மானசா தேவியின் கதை!



நாக தேவதையாக கருதப்படும் மானசா தேவியை வங்காளம் மற்றும் இந்தியாவின் இதர வட கிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் வழிப்பட்டு வருகின்றனர். பூமியில் உள்ள பாம்புகள அனைத்தையும் மானசா தேவி தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே போல் அவரை வழிப்பட்டால் பாம்புக்கடி குணமாகும் என்றும் நம்பப்படுகிறது. கருவளத்திற்கும், செழுமைக்கும் கூட மானசா தேவியை மக்கள் வணங்குகின்றனர்.
புராணத்தின் படி, சிவபெருமானின் மகளே மானசா தேவி. இருப்பினும் அவர் காஷ்யபா முனிவரின் மகள் என்றும் சிவபெருமானின் தூரத்து உறவு என்றும் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அவர் வாசுகியின் சகோதரி மற்றும் ஜரட்கரு முனிவரின் மனைவியுமாவார். அவர் பெற்றோர் யார் என்பதில் குழப்பம் இருந்ததால், மற்ற கடவுள்களுக்கு அளிக்கப்பட்ட அந்தஸ்து இவருக்கு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக தன்னை வழிப்பட மறுப்பவர்களிடம் சீற்றம் கொண்டும், வழிபடுபவர்களிடம் மிகுந்த கருணையுடனும் நடந்து கொள்வார்.
நாக தேவதையான மானசா தேவியைப் பற்றிய முழுக்கதையையும் தெரிந்து கொள்வோமா?

கலந்த பெற்றோர்கள்
சமயத்திரு நூலின் படி, மானசா தேவியின் பெற்றோர்தன்மை குழப்பத்தில் உள்ளது. அவர் நாகராஜாவான சேஷாவின் சகோதரியான கட்ரூ மற்றும் காஷ்யப் முனிவருக்கும் பிறந்தவே என சில புராணங்கள் கூறுகிறது. இன்றும் சில சமயத்திரு நூல்கள் அவரை சிவபெருமானின் புதல்வி எனவும் கூறுகிறது. ஆனால் அவர் காஷ்யப் முனிவரின் மனதிற்கு பிறந்தவர் என புகழ் பெற்ற கதைகள் கூறுகிறது. மனதில் இருந்து உதித்தவர் என்பதால் தான் மானசா என்ற பெயரைப் பெற்றார்.
 

கணவனால் நிராகரிக்கப்பட்டவர்
புராணங்களின் படி, மானசா தேவியை ஜரட்கரு முனிவருக்கு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் மணம் முடித்து வைத்தார் காஷ்யப் முனிவர். அதாவது, என்றாவது தன் பேச்சை மீறி மானசா நடந்தால், அன்று அவளை கைவிட்டு விடுவதாக ஜரட்கரு கூறினார். ஒரு முறை காலையில் மிகவும் தாமதமாக ஜரட்கருவை எழுப்பிவிட்டார் மானசா தேவி. அதனால் தன் காலை வழிப்பாட்டுக்கு தாமதமாக சென்றார். இதனால் கடுஞ்சினம் கொண்ட அவர், மானசாவை கைவிட்டார். சிறிது காலம் கழித்து மீண்டும் வந்தார். அவர்களுக்கு அஸ்திகா என்ற மகனும் இருந்தான்.
 

சக்தி வாய்ந்த பாதி கடவுள்
நாகங்களின் கடவுளாக விளங்குகிறார் மானசா தேவி. ஒரு முறை கடுமையான விஷத்தில் இருந்து சிவபெருமானை மானசா காப்பாற்றியுள்ளார் என வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தன் பக்தர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் கருணையை கொண்டுள்ளார் அவர். தன்னை வழிப்பட மறுப்பவர்களிடம் அதே அளவிற்கு சீற்றத்தையும் காண்பிப்பார்.
 

நாக தேவதை
பாம்புகளை ஆபரணமாக அணிந்து அழகாக காட்சியளிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளார் மானசா தேவி. ஏழு நாகபாம்பை கொண்ட விதானத்தின் மீதுள்ள தாமரையின் மீது அவர் அமர்ந்திருப்பார். அவரை ஒற்றை கண் கடவுள் என்றும் அழைக்கின்றனர். சில நேரம் தன் மடியில் தன் மகன் அஸ்திகாவை வைத்திருப்பதை போலவும் இருப்பார்.

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை