அன்புக்கும் அருளுக்கும் பாலமுருகன்
அன்புக்கும் அருளுக்கும் குறை வைக்காத பால முருகன்... அழகுக் குமரன் அவனை நாளும் தரிசிக்கக் குறையொன்றும் இல்லையே..! கந்த சஷ்டியில், 'சூரர்' களை வதைத்த திருமுகத்துக்கு உரியவரான குமரனின் தரிசனத்தை பார்ப்போமே... 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பார்கள். தெய்வம், தன்னை அன்புடன் கொண்டாடி போற்றுபவர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் வரமாகத் தருவது போலவே- குழந்தையும் தன்னிடம் அன்பு காட்டி கொஞ்சுபவர்க்கெல்லாம், தன்னிடமுள்ள எது ஒன்றையும் கேட்காமலேயே கொடுக்கக்கூடியது. 'இதனால்தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று கூறியிருக்கிறார்கள். அந்த தெய்வமே குழந்தை வடிவில் இருந்துவிட்டால்..!!!, அங்கே அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமே இல்லை. அப்படிக் குழந்தை வடிவத்தில் நம்மால் கொண்டாடப்பெறும் தெய்வங்கள் சைவத்தில் சிவகுமாரனும், வைணவத்தில் வசுதேவ குமாரனான கண்ணனுமே ஆவர். அழகுக்கும் தமிழுக்கும் ஒரு வடிவமாகத் திகழ்பவர் முருகப் பெருமான். முருகனைக் குழந்தையாக அன்பு செலுத்தி, அவன் புகழ் பாடிப் பரவசப்பட்டவர்கள் பலர். அக