Posts

நவராத்திரி சுலோகங்கள்

Image
மூன்று தேவியருக்கான நவராத்திரி சுலோகங்கள் ➗➗➗➗➗➗➗➗➗➗➗   கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்! துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!! பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும்,  லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும்  அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க  வைப்பவளே! அருள்புரிவாயாக. You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

கொலுவின் சிறப்புகள்

Image
கொலுவின் சிறப்புகள்... ➗➗➗➗➗➗➗➗➗➗➗ நவராத்திரியின், மிக முக்கியமான அம்சம் கொலு வைப்பதாகும். வீட்டையே மிக அழகாக மாற்றி, அனைவரையும் உற்சாகம் கொள்ள வைப்பது கொலுதான். மகிஷாசுரனின் வதத்துக்காக பிரம்மா, சிவன், விஷ்ணு முதலான அனைத்து தேவர்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்து பெரும் ஜோதியாகி அந்த ஒளிவடிவே தேவியாக உருமாறினாள். அப்போது அம்பிகைக்கு மூன்று தெய்வங்கள் உட்பட எல்லோரும் ஆயுதங்கள் தந்து தத்தம் சக்தியிழந்து பொம்மைகளாக நின்றார்களாம். எனவே தான், பொம்மைகளாக நின்ற தெய்வங்களை கொலு வைத்துச் சிறப்பிக்கிறோம்.  புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று கொலு அலங்காரம் தொடங்குகிறது. அப்போது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் கொலுப்படிகள் வைக்கப்பட வேண்டும். படிகளின் மேல் தூய துணி விரிக்கப்பட்டு, அம்பிகையின் கலசமும் விநாயகர் சிலையும் முதலில் வைக்கப்படும். பின்னர் மற்ற தெய்வங்களின் பொம்மைகள் அழகாக வரிசையாக வைக்கப்படுகின்றன. பழங்கால பாரம்பரிய பொம்மையாகிய மரப்பாச்சிகளும் இதில் இடம் பெறும்.  முதல் நாள் பூஜிக்கப்பட்ட கலசமும் பொம்மைகளும் படிகளில் வைக்கப்பட்டுவிட்ட

தோஷங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு

Image
தோஷங்கள் நீங்க பிரதோஷ வழிபாடு... 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹 பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.  பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு ஆகும். சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடும் பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பக

நவக்கிரக தோஷம் நீங்க

Image
நவக்கிரக தோஷம் நீங்க... ********************************* சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை தானமாக அளித்தால், செவ்வாய் கிரக பாதிப்பு விலகும். வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.  வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் கொடுப்பது, பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பது, கையில் வெள்ளி வளையம் அணிவது, காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு தொடர்ந்து 15 நாட்கள் கொடுப்பது, நீர் அருந்துவதற்கு வெள்ளி டம்ளர்களை பயன்படுத்துவது போன்றவை சுக்ரனின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும். நீலம் மற்றும் பச்சை நிறத்தினால் ஆன ஆடைகளை தவிர்ப்பதன் மூலமாக சனி மற்றும் புதன் கிரகங்களினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிந்து கொண்டால், குருவருள் கிடைக்க வழிபிறக்கும். அதே போல் வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதி கரிக்கும். கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதன் மூலமும், தோலில் செய்த மணிபர்சை பணம் வைக்க பயன்படுத்தாமல் இருப்பதும், சனியின் கிரக பாதிப்பை ஓரளவு குறைக்கும். கைப்பிடி அரிசியை எட

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

Image
விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை.. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ நாம் கடவுளை நினைத்து, பக்தியோடு விரதம் இருக்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள்.  விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும்.  கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. விரதம் மேற்கொள்ளும் கடைப்பிடிக்க வேண்டியவை : சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும். தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும். இன்முகத்தோடு நாள்முழுவதும் இருத்தல் வேண்டும். கேளிக்கைச் செயல்களிலோ, கோபம் கொள்வதோ,வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது. பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கண்டிப்பாக கூடாது. அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது. மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.விரும்பத்தகாத செயல்க

திருநீறு

Image
குளிக்காமல் நெற்றியில் திருநீறு பூசலாமா..!!! ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ நீராடியபின் விபூதி பூசுவது தான் சரியானமுறை. உடல்நலக்குறைவு, வயோதிகம், ஆபத்து நேர்ந்த காலத்தில் குளிக்காமல் பூசுவதால் தவறில்லை.  உடல் தூய்மையை விட உள்ளத் தூய்மையே முக்கியம் என்றாலும், இதையே காரணம் காட்டி சோம்பலும் எட்டிப் பார்த்து விடும்.  மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். இளைஞர்கள் குளியலுக்கு பிறகே திருநீறு பூச வேண்டும். You can join to my public group to learn more about spiritual information : - https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

சித்தர் கோவில்கள்...

Image
சித்தர் கோவில்கள்... ππππππππππππππππππππππ சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இவை: அகஸ்தியர் - திருவனந்தபுரம் கொங்கணர் - திருப்பதி சுந்தரனார் - மதுரை கரூவூரார் - கரூர் திருமூலர் - சிதம்பரம் தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில் கோரக்கர் - பொய்யூர் குதம்பை சித்தர் - மாயவரம் இடைக்காடர் - திருவண்ணாமலை

தீபாவளி தீபங்கள்

Image
பிரகாசமான வாழ்வளிக்கும் தீபங்கள்... 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ பிரகாசமான வாழ்க்கைக்கு தினமும் தீபம் ஏற்றுவது சிறந்தது.  இறைவனோடு நம்மை நேரடியாக சம்பந்தப்படுத்துவது தீப வழிபாடுதான். தீபம் என்பது இறைவனின் அம்சம்.  தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார்.  தீப ஜோதி நமோஸ்துதே அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை ஆன்ம ஜோதி ரூப என இறைவனையும், ஆன்மாவையும் ஜோதி ரூபமாக ஒளி பிரகாசமாக வழிபட்டு வரும் முறையை நம் முன்னோர் பண்டைய காலத்திலிருந்தே வழிமுறை படுத்தி உள்ளனர்.  எந்த மதத்திலும் தீப ஒளி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல நிகழ்வும் விளக்கு ஏற்றியே தொடங்கப்படுகின்றது. வீட்டிலும் சரி, கோவில்களிலும் சரி காலையும், மாலையும் தீபங்கள் ஏற்றுவது நமது கலாச்சாரம்.இதனால் வீடுகளில் பிரச்சினைகள் வராது. புண்ணியமும், ஞானமும் அதிகரிக்கும்.  திருவண்ணாமலை தீப தரிசனத்தினை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்காத இந்து

தான தர்மங்கள்...!!!

Image
தர்மவான்கள் செய்யும் தர்மங்கள்... ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள்.  அந்த முப்பத்து இரண்டு அறங்கள் வருமாறு:- 1.அநாதையர் விடுதி அமைத்தல்  2.ஓதுவார்க்கு உணவு அளித்தல்-மாணவர்களுக்கு உணவு அளித்தல்.  3.துறவிகளுக்கு உணவு அளித்தல்  4.பசுவுக்குப் புல் கொடுத்தல்  5.சிறைக் கைதிகளுக்கு உணவு அளித்தல்  6.இரப்பவர்க்கு ஈதல்  7.தின்பண்டங்கள் அளித்தல்  8.ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல்  9.மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு உதவுதல்  10.குழந்தைகளை வளர்த்தல்  11.தாயை இழந்த பிள்ளைகளுக்குப் பாலளித்தல்  12.ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்தல்  13.ஆதரவற்றவர்களுக்கு உடை கொடுத்தல்  14.சுண்ணப்பொடி கொடுத்தல்  15.நோயாளிகளுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தல்.  16.சலவைத் தொழிலாளியின் கூலியை உடனே கொடுத்தல்  17.சவரத் தொழிலாளியின் கூலியை உடனே கொடுத்தல்  18.கண்ணாடி கொடுத்தல்  19.தோடு கொடுத்தல்  20.கண்ணுக்கு மருந்

ஸ்ரீ சக்கரம்...

Image
ஸ்ரீ சக்கரம் மகிமை... ⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️⚛️ ஸ்ரீசக்ரத்தை, ஸ்ரீயந்த்ரம் என்றும் அதைச் சொல்வதுண்டு. சக்தியந்திர வழிபாடுகளில் மிக உயர்ந்தது ஸ்ரீசக்ரம். யந்திர ராஜா என்ற இதனைக் கூறுவார்கள். ஒரே அளவிலான 43 முக்கோணங்களைக் கொண்டது இந்த ஶ்ரீயந்திரம். மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம் துர்க்கை, ராஜேஸ்வரி, லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்வதும், யந்திரத்தைத் தனியாக வழிபாடு செய்வதும் வழக்கில் இருந்தது.  சக்திவாய்ந்த இதனை வழிபடுபவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும் என்பது ஐதீகம்.உபதேசங்கள் பெற்று உரிய நியமங்களை அறிந்து ஸ்ரீசக்ரத்தை வழிபடவேண்டும்.  மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது. முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பத