விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை..
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖



நாம் கடவுளை நினைத்து, பக்தியோடு விரதம் இருக்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

விரதம் என்ற சொல்லுக்கு கஷ்டப்பட்டு இருத்தல் என்று பொருள். 
விரதமிருப்பவர், அன்று முழுவதும் சுவாமியின் அருகிலேயே இருப்பதாக எண்ண வேண்டும். 
கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.

விரதம் மேற்கொள்ளும் கடைப்பிடிக்க வேண்டியவை :

சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.
தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
இன்முகத்தோடு நாள்முழுவதும் இருத்தல் வேண்டும்.

கேளிக்கைச் செயல்களிலோ, கோபம் கொள்வதோ,வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.

பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கண்டிப்பாக கூடாது.

அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.

மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.

அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே! என்ற எண்ணத்துடன் கொடுக்க வேண்டும்.

அரிசி சாதத்தையும், வெங்காயம், பூண்டு இவற்றையும் தவிர்த்து விட வேண்டும். அரிசி, வெங்காயம், பூண்டு இவற்றைச் சாப்பிட்டால் தூக்கம் வரும். சிந்தனை மாறும். இதனால் தான் இவற்றை வேண்டாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. 

அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் ஃபல் என்றால் பழம் என்று பொருள்படும்.ஆஹார் என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். ஃபல் + ஆஹார் = பலஹார் என்று ஆகிறது.

பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் பலகாரம் என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது. 

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே இறை விரதத்தின் நோக்கமாகும். 

எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி இறைவனை நினைத்து விரதம் இருப்பதே சிறந்த விரதம் ஆகும்.

You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை