சித்தர் கோவில்கள்...

சித்தர் கோவில்கள்...
ππππππππππππππππππππππ



சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.

உலகில் கடவுளை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இவை:

அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
சுந்தரனார் - மதுரை
கரூவூரார் - கரூர்
திருமூலர் - சிதம்பரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
இராமதேவர் - அழகர்மலை
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
இவைகள் போலவே, தமிழகத்தில் மிகப் பிரபலமாக உள்ள கோவில்களில் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளதை அறியலாம்.

ஜீவசமாதிகள் பெரும்பாலும், மூலவருக்கு அருகிலேயே தனிச்சன்னதி கொண்டு இருக்கும். அங்கு சென்று, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், நமது எல்லா செயல்களும் வெற்றி பெறுவது நிச்சயம் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

You can join to my public group to learn more about spiritual information : -

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை