Posts

அருணகிரிநாதர்

Image
மகான் அருணகிரிநாதர் **************************** வரலாறு சுருக்கம் அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். உருவ அமைப்பு அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.  இனி அவர் வரலாறு  திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநா

ஸ்ரீபஞ்சாயுத ஸ்தோத்திரம்

Image
 " பகவான் விஷ்ணுவின் தசாவதார காயத்ரி மந்திரங்கள் மற்றும் ஸ்ரீபஞ்சாயுத ஸ்தோத்ரம் " தசாவதாரகாயத்ரி மந்திரங்கள்: ஸ்ரீராமஜெயம்🙏 ஓம் சமுத்ரராஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத் ஓம் தராதராய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ கூர்ம ப்ரசோதயாத் ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி தன்னோ வராஹ ப்ரசோதயாத் ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத் ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே சூக்ஷ்மதேஹாய தீமஹி தன்னோ வாமந ப்ரசோதயாத் ஓம் அக்னிசுதாய வித்மஹே வித்யாதேஹாய தீமஹி தன்னோ பரசுராம ப்ரசோதயாத் ஓம் தாசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி தன்னோ ராம ப்ரசோதயாத் ஓம் ஹலாயுதாய வித்மஹே மஹாபலாய தீமஹி தன்னோ பலராம ப்ரசோதயாத் ஓம் மஹாபுருஷாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத் ஓம் பரமபுருஷாய வித்மஹே பாபஹராய தீமஹி தன்னோ கல்கி ப்ரசோதயாத் ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி. ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்:   தினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள் நண்பர்களே! திருமாலின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும். திருமாலின் திருவருளும், அதனால்

பெர்முடா முக்கோணமும் வேதங்களும்

Image
பெர்முடா முக்கோணமும்  வேதங்களும். பெர்முடா முக்கோணம் பற்றி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன அதர்வண , ரிக் வேதங்கள் 23 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் மிக தெளிவாக 'பெர்முடா முக்கோணம்' போன்ற ஒரு பகுதியைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.   5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே 'பிரமாண்ட புராணத்தில்' இதுபோன்ற பகுதியை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.   பூமியில் இருந்து உருவான கிரகம்தான் செவ்வாய். அதனால்தான், பூமியின் மகன் ( son of bhumi) என்று சொல்கிறோம். அல்லது குஜா (kuja) என்றும் சொல்லப்படுகிறது. 'கு'  என்றால் பூமி, 'ஜா' என்றால் பிறந்தவன் என்பது அதன் பொருள்.  இது சமஸ்கிருதத்தில் சொல்லப்படும்  வார்த்தை. ரிக் வேதத்தில் இடம் பெற்றுள்ள 'அஸ்ய வாம்ஸய  என்னும் சூக்தத்தில் பூமியில் இருந்துதான் செவ்வாய் கிரகம் பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.  அப்படி பிறந்த செவ்வாய் கிரகம், பூமியை விட்டு தனியாக பிரிந்து சென்றபோது, முக்கோண வடிவத்தில் பூமி மீது காயம் ஏற்பட்டுள்ளது.  காயம்பட்ட பூமியில், தேவர்களின் மருத்துவர்களாகிய அஸ்வினி குமாரர்கள் இரும்பை காய்த்து ஊற்ற

அகப்பேய் சித்தர்

Image
 அகப்பேய்சித்தர் வரலாறு சுருக்கம் மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால்அகப்பேய்ச் சித்தர்எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது. அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.     வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார். அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்; ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ; வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே ! அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.   நஞ்சுண்ண வேண்டாமே - அகப்பேய்      நாயகன் தாள் பெறவே       நெஞ்சம் அலையாதே - அகப்பேய்      நீ ஒன்றும் சொல்லாதே.      என்று பாடி, மனம் பேய் ப

தேரையர் சித்தர்

Image
 தேரையர் வரலாறு சுருக்கம் தலையைப் பிளந்து அறுவைச்சிகிச்சை செய்வது என்பது இன்று அறிவியல் வளர்ந்த நிலையில் கூட கடுமையான சோதனைக்களத்தில் நிற்கும் உணர்வைத் தருகிறது. ஆனால், நம் தேசத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மூலிகை வகைகளைக் கொண்டே இந்த சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சிகிச்சையை செய்தவர் அகத்தியர் என்றாலும், அது வெற்றி பெற காரணமானவர் தேரையர். வைத்தியரே குழம்பிப்போய் நின்ற வேளையில், துணிச்சலும் சமயோசிதமும் கலந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற காரணமானார். தேரையர் சித்தர் மலையாள தேசத்தில், திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். அவரது வரலாற்றின் போக்கைக் கொண்டு இவ்வாறு கணிக்க வேண்டியுள்ளது. அவர் சமாதியானது மலையாள தேசத்திலுள்ள தோரண மலை என கணிக்கப்பட்டுள்ளது. தோரணமலை, குற்றாலம் அருகில் உள்ளது. முற்காலத்தில், குற்றாலத்தைச் சார்ந்த பகுதிகள் மலையாள தேசத்தில் தான் இருந்தன. மேலும், இவர் அகத்தியரின் சீடராக இருந்தார். அகத்தியரும், பொதிகை மலையில் தங்கியிருந்தார். இதையெல்லாம் கணக்கில் கொண்டால், இது உண்மையாக இருக்கலாம் என்றே நம்பலாம். தமிழ் மூதாட்டி அவ்வையார், தேர

புலிப்பாணி சித்தர்

Image
 புலிப்பாணி சித்தர் வரலாறு சுருக்கம் நான் எம்பெருமான் முருகனுக்கு சிலை செய்ய ஆசைப்படுகிறேன். உலோகங்களால் அவருக்கு பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், நான் ஆசைப்படுவது வேறு. இந்த முருகனைத் தரிசித்த மாத்திரத்திலேயே உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் விலகியோட வேண்டும். மன நோயும் விலக வேண்டும். எனவே, நான் மூலிகைகளைக் கொண்டு அவருக்கு சிலை செய்ய வேண்டும். நீ நோய் தீர்க்கும் மூலிகைகளைப் பறித்து வா, என்றார் குருவான போகர் சித்தர்.குருவின் கட்டளையை ஏற்ற புலிப்பாணி, ஏ புலியே கிளம்பு, என்றார்.  புலி மீது சவாரி செய்பவர் யார் எனக் கேட்டால், நீங்கள் ஐயப்பன் என்று பதில் சொல்வீர்கள். அவர் தெய்வம். தர்ம சாஸ்தாவான அவர், புலியின்மீது பயணம் செய்வதில் ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஒரு சித்தர் புலியின் மீது பயணம் செய்கிறார் என்றால், அவர் எப்பேர்ப்பட்ட சக்தி மிக்கவராக இருக்க வேண்டும். விலங்குகளை வசியப்படுத்தி, தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். அந்தளவுக்கு அவருக்கு தவசக்தி அமைந்திருந்தது.  புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. பழநியில் வசித்த போகர் சித்தர் சீனாவுக்கு வான்வழியே யோக சாதனையைப் பயன்படு

கருவூரார்

Image
கருவூரார் வரலாறு சுருக்கம்: என்ன கருவூராரைக் காணவில்லையா? சிறையில் அடைக்கப்பட்டவர் எப்படி வெளியே போவார் ? நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? மன்னன் இரணியவர்மன் கர்ஜித்தான். காவலர்கள் தங்கள் தலைக்கு கத்த வந்து விட்டது என்பதை புரிந்து கொண்டு நடுநடுங்கினர். போகர் சித்தரே ! அறியாமல் நடந்த பிழையை மன்னிக்க வேண்டும். தங்கள் மாணவன் தான் கருவூரார் என்பதை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டேன். நான் என்ன செய்வேன் !. எப்படி உங்களை சமாதானம் செய்யப்போகிறேன்! நான் செய்த தவறுக்கு வேண்டுமானால், என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள், மன்னன் புலம்பினான்.அவன் புலம்புமளவுக்கும், போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கு அப்படி என்ன நடந்து விட்டது ?கருவூரார் சோழநாட்டிலுள்ள போகர் சித்தர் கருவூராரைத் தேடி வருமளவுக்கும் அப்படி என்ன நடந்து விட்டது ? கருவூரார் சோழநாட்டிலுள்ள கருவூரில் (இன்றைய கரூர்) ஒரு அந்தணத்தம்பதியரின் மகனாக அவதரித்தவர். இளமையிலேயே ஞானம் தேடி அலைந்தார். அவருக்கு பழநியில் நவபாஷண முருகன் நிலை செய்த போகரின் தரிசனம் ஒருமுறை கிடைத்தது. அவரிடம், இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை அறிந

பாம்பாட்டி சித்தர்

Image
பாம்பாட்டி சித்தர் வரலாறு சுருக்கம் பாம்பாட்டிச் சித்தரும் பிறக்கும் போது சித்தராகப் பிறக்கவில்லை. பிறக்கும்போது எல்லோரும் சாதாரணம்தான். வளர்ப்பும் வழிகாட்டுதலுமே ஒருவரை உயர்ந்த இடத்துக்கோ, தாழ்ந்த இடத்துக்கோ கொண்டு செல்கின்றன. இந்த பாதிப்பின் காரணமாகத்தான் சிறு வயதில் நல்ல விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. பாம்பாட்டியும் அப்படிதான். திருக்கோகர்ணம் திருத்தலத்தில் ஒரு கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் மிதுன ராசியில் பிறந்தவர் பாம்பாட்டிச் சித்தர் என்று கூறப்படுகிறது. இவரின் தந்தை, பார்வை இல்லாதவர் என்கிற குறிப்பும் சொல்லப்படுகிறது. பிறக்கும்போதே கழுத்தில் மாலை சுற்றிப் பிறந்தார். ஜோகி எனப்படும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர் பிழைப்புக்காக பாம்புகளை உயிருடன் பிடித்தோ அல்லது கொன்றோ , இதை வாங்குவதற்கென்றே இருக்கும் வைத்தியர்களிடம் விற்று வந்தார். பாம்புகளின் பாஷை அறிந்தவர். இப்படிப் பாம்புகளைத் தேடி பாண்டிய நாட்டு காடுகளிலும் மருதமலைக் காடுகளிலும் (இன்றைய மருதமலை அமைந்திருக்கும் பகுதி) நேரம் காலம் பார்க்காமல் சுற்றி திரிவது இவரது வழக்கம். பாம்புகளின் விஷத்தை அசாதாரணமாக அரு

வேதங்கள்

Image
நமது பாரததேசத்தின் அடிநாதமாக விளங்குவது வேதங்களாகும். வேதங்கள் ரிக், யஜூர், ஸாமம், அதர்வணம் என்று நான்காகும். வேதங்களுக்கு மறை என்றும், மந்திரம் என்றும், கேள்வி என்றும், சுருதி என்றும், எழுதாகிளவி, எழுதாமறை என்று பலப் பெயர்கள் உண்டு. வேதங்களை ஸ்வரம் சுத்தமாக ஓத வேண்டும்.வேதங்களுக்கு சப்தமே பிரதானம். வேத ஓலி நமது பண்டை தமிழகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. "ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் "-என்று #அப்பர்பெருமான் #வேதஓலிகளை புகழ்ந்து #திருவையாறு தேவாரத்தில் பாடுகின்றார். "கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும் வேதத் தொலியோவா வீழிமிழலையே " -என்று   சம்பந்தபெருமான் வேத ஒலியை தேவாரத்தில்  போற்றி பாடுகின்றார். இத்தகைய சிறப்புடைய வேதங்களை ஓதுதல் மற்றும் பயிலும் முறையினை ஐந்து வகையாக பிரித்துள்ளனர். அவை, சம்ஹிதா, பதம், கிரமம், ஜடை, கனம். சம்ஹிதா பாடம் :   மூலசம்ஹிதை என்றால்  வேத மந்திரங்களை சந்தி சேர்த்துச் சொல்வதாகும்.இது அடிப்படை கல்வி போன்று. பதப் பாடம் :    சம்ஹிதா பாடத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் பதப் பாடம் பயில்வார்கள். பதம் என்பது, வேதமந்திரங்

காலங்கிநாதர்

Image
காலாங்கிநாதர் வரலாறு சுருக்கம்: திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பி