Posts

தன்வந்திரி பகவான் ஸ்லோகம்

Image
ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஸ்லோகம் சதுர்புஜம் பீத வஸ்திரம் ஸர்வாலங்கார சோபிதம் த்யோயேத் தன்வந்த்ரிம் தேவம் ஸூராஸூர நமஸ்க்ருதம். நோய்கள் விலக, நோயற்ற வாழ்வு கிடைக்க மேலே உள்ள மந்திரத்தை முழுமனதுடன் கூறி வழிபட்டு தன்வந்திரியை சரண் அடையவும்.

குழந்தை பேறு தரும் மந்திரம்

Image
குழந்தைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம்!   தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே தேஹிமே தநயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கத: தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகரப் பிரபோ தேஹிமே தநயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்

தேவாரப் பாடல்கள்

Image
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள் """""""""""""""""""""""""" நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம். அசுவினி: தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும் திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே பரணி: கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானை இருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப் பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை: செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார் எல்லிய விளங்க நின்ற

கல்யாண ஆஞ்சநேயர்

Image
 கல்யாண ஆஞ்சநேயர் கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர்தான் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆஞ்சநேயருக்கு ஒரு மனைவியும் மகரத்வஜன் என்ற ஒரு மகனும் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் வரும் மயில்ராவணன் கதை, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராமாயணங்கள் கூறுகின்றன. அனுமாரைப் போன்றே அவரது மகனும் பராக்கிரமசாலியாக இருந்தார் என்பதும், அந்த மகன் `மச்சவல்லபன்’, `சுறவக்கொடியோன்’ என்று தமிழிலும், `மகரத்வஜன்’ என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறார். மகரத்வஜன், ஆஞ்சநேயருக்கு மகனாகத் தோன்றியது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த   வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள் என்றும், இலங்கையைத் தீக்கிரையாக்கிவிட்டு, பற்றியெரிந்த வாலை அணைப்பதற்காக அனுமார் கடலில் இறங்கியபோது அவரில் இருந்து வழிந்த

அமாவாசை வழிபாடு

Image
*அமாவாசையில் வழிபடுவது எப்படி?* ***************************************************** அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யல

துளசி

Image
"து  ள  சி" எ ந்த வீட்டில் காலையிலும் - மாலையிலும், "துளசிதேவியை" வணங்கி வருகிறார்களோ, அங்கு, "யமதேவன்" நுழைய முடியாது. கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை. நாள்தோறும், "தீபமேற்றி" பூஜிப்பவர்களுக்கு 100 க்கணக்கான யாகம் செய்ததன் பலனை அடைவர். து ளசியின் காற்று பட்டாலும், துளசியை வலம் வந்து வணங்கினாலும் எல்லா பாவங்களும் நீங்கும். தொ டுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். ப கவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். ப கவானது தாமரைப் பாதங்களில் சந்தனம் கலந்து துளசி இலை யை ஒட்டுபவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். "துவாதசி" தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். து ளசி இலைகளை, பெள ர்ணமி, அ மாவாசை , து வாதசி, சூ ர்ய சங்கராந்தி, உ ச்சி மதியம், இ ரவு சந்தியா... ஆகிய வேளைகளில் பறிக்கக் கூடாது. பி ரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹங்கள் மதிக்கப்ப

சனிக்கிழமையும் பெருமாளும்

Image
சனிக்கிழமை பெருமாள் --------------------------------------------- ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!”

புத்ரதா ஏகாதசி

Image
புத்ரதா ஏகாதசி ➖➖➖➖➖➖ தை மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி அல்லது சந்தான ஏகாதசி எனப்படும். இந்த நாளில், விரதம் இருந்து, பெருமாளைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறது புராணம்! சுகேது மான் என்ற அரசன் பிள்ளை இல்லாக் குறையை இவ் ஏகாதசி விரத முறையைப் பின்பற்றி நல்ல மகனைப் பெற்றான். தன் நாட்டில் உள்ளோரும் இவ்விரத முறையைப் பின்பற்றச் செய்தான். வம்சாவளி பெருக்கம் தருவது சந்தான ஏகாதசி ஆகும். வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொண்டால் விரைவில் மழலை செல்வம் கிடைக்கும். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 பெருமாள் தியான ஸ்லோகம்! ➖➖➖➖➖➖➖➖➖➖➖ லக்ஷ்மிபதே கமலநாப சுரேஷ விஷ்ணு வைகுண்ட க்ருஷ்ண மதுசூதன ஸ்ரீ ஸ்ரீனிவாசா ப்ரமண்ய கேசவ ஜனார் தன சக்ரபாணே விஸ்வரூப விபோ மமதேஹி கராவலம்பம். 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 சந்தான கோபால மந்திரம் ! ➖➖➖➖➖➖➖➖➖➖➖ ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்- தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத ! தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம் !! குழந்தை பாக்கியம் வே

63 நாயன்மார்கள்

Image
அறுபத்து மூன்று நாயன்மார்கள்  அறுபத்து‌ மூன்று நாயன்மார்கள்: நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.  நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.  அவர் பாடிய நாயன்மார் 60 பேர்.  (63 பேர் அல்ல).  சுவாமிமலைக்குப் படி 60.  ஆண்டுகள் 60.  மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு.  ஒரு நாளைக்கு நாழிகை 60.  ஒரு நாழிகைக்கு வினாடி 60.  ஒரு வினாடிக்கு நொடி 60.  இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான்.  சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார். நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன.

பிள்ளையார்

Image
பிள்ளையார் அரச மர நிழலும், வன்னி மர நிழலும் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் ? பிள்ளையார் வழிபாடு என்பது தலையில் கொட்டி கொள்ளுதல், காதைப்பிடித்து கொண்டு விக்கி போடுதல், எல்லா காரியங்களின் தொடக்கத்திலும் பிள்ளையார் பிடித்து வைத்து தொடங்குதல் என்பவை எல்லோரும் அறிந்ததே. பொதுவாக பிள்ளையார் குளக்கரையிலும், மரத்தடியிலும் அருள்புரிவதைப் பார்க்கலாம். இதனால் அவர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். வன்னிமரப் பிள்ளையார்: இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரப் பிள்ளையார்: ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்க