63 நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் 



அறுபத்து‌ மூன்று நாயன்மார்கள்:


நாயன்மார் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள். 

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். 
அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 
(63 பேர் அல்ல). 
சுவாமிமலைக்குப் படி 60. 
ஆண்டுகள் 60. 
மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு. 
ஒரு நாளைக்கு நாழிகை 60. 
ஒரு நாழிகைக்கு வினாடி 60. 
ஒரு வினாடிக்கு நொடி 60. 
இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். 

சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற்சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.

சிவபெருமானை போற்றுவதே தம் வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து உயர்ந்த நாயன்மார்கள் பெயர்கள் .

1. அதிபத்தர் நாயனார்

2. அப்பூதியடிகள்

3. அமர்நீதி நாயனார்

4. அரிவாட்டாயர்

5. ஆனாய நாயனார்

6. இசை ஞானியார்

7. மெய்ப்பொருள் நாயனார்

8. இயற்பகையார்

9. இளையான்குடி மாறார்

10. உருத்திர பசுபதியார்

11. எறிபத்த நாயனார்

12. ஏயர்கோன் கலிகாமர்

13. ஏனாதிநாத நாயனார்

14. ஐயடிகள் காடவர்கோன்

15. கணநாதர் நாயனார்

16. கணம்புல்லர் நாயனார்

17. கண்ணப்ப நாயனார்

18. கலிய நாயனார்

19. கழறிற்றறிவார்

20. காரி நாயனார்

21. காரைக்கால் அம்மையார்

22. கழற்சிங்கர் நாயனார்

23.குலச்சிறையார்

24. கூற்றுவர் நாயனார்

25. கலிக்கம்ப நாயனார்

26. குங்கிலிக்கலையனார்

27. சடைய நாயனார்

28. சிறுத்தொண்ட நாயனார்

29. கோச்செங்கட் சோழன் – மாசி சதயம்

30. கோட்புலி நாயனார்

31. சக்தி நாயனார்

32. செருத்துணை நாயனார்

33. சண்டேசுவர நாயனார்

34. சோமாசிமாறர்

35. சுந்தரமூர்த்தி நாயனார்

36. திருக்குறிப்பு தொண்ட நாயனார்

37. சிறப்புலி நாயனார்

38. திருநாளைப் போவார்

39. திருஞான சம்பந்தர்

40. தண்டியடிகள் நாயனார்

41. சாக்கிய நாயனார்

42. நமிநந்தியடிகள்

43. புகழ்ச்சோழ நாயனார்

44. நின்றசீர் நெடுமாறர்

45. திருநாவுக்கரச நாயனார்

46. நரசிங்க முனையர்

47. திருநீலகண்ட நாயனார்

48. திருமூல நாயனார்

49. திருநீலகண்ட யாழ்ப்பாணர்

50. திருநீலநக்க நாயனார்

51. மூர்த்தி நாயனார்

52. முருக நாயனார்

53. முனையடுவார் நாயனார்

54. மங்கையர்க்கரசியார்

55. பெருமிழலைக் குறும்பர்

56. மானக்கஞ்சாறர்

57. பூசலார் நாயனார்

58. நேச நாயனார்

59. மூர்க்க நாயனார்

60. புகழ்த்துணை நாயனார்

61. வாயிலார் நாயனார்

62. விறன் மீண்டநாயனார்

63. இடங்கழி நாயனார்

காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள்.

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். 

சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். 

மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள். கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். 

மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். 


திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

நாயன்மார்களை மரபு அடிப்படையில் நோக்கும் போது, அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், ஆதி சைவர், மரபுக்கொருவர், மரபு கூறப்படாதவர் என வகைப்படுத்துகின்றனர்.

நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.

சேர நாடு - 2 நாயன்மார்

சோழ நாடு - 37 நாயன்மார்

தொண்டை நாடு - 8 நாயன்மார்

நடு நாடு - 7 நாயன்மார்

பாண்டிய நாடு - 5 நாயன்மார்

மலை நாடு - 2 நாயன்மார்

வட நாடு - 2 நாயன்மார்

நாயன்மார்கள் செய்த தொண்டின் காரணமாக மூன்று விதமான முறையில் முக்தி அடைந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் குருவருளால் முக்தி பெற்றவர்கள் பதினொரு நாயன்மார்கள், சிவலிங்கத்தால் முக்தி பெற்றவர்கள் முப்பத்து ஒரு நாயன்மார்கள், அடியாரை வழிபட்டமையால் முக்தி பெற்றவர்கள் இருபத்து ஒரு நாயன்மார்கள்.

நாயன்மார்கள் பிறந்த தலங்களை நாயன்மார் அவதாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஐம்பத்தி எட்டு (58) தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மற்றவை பாண்டிச்சேரி (காரைக்கால்), ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்று என்ற வீதத்திலும், கேரளா மாநிலத்தில் இரண்டு இடங்களிலும் அமைந்துள்ளன.

நாயன்மார்களுக்கு தனிக்கோயில்கள் அரசர்கள் காலத்தில் எடுக்கப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்து ஒன்பதாகும்.

சிவத்தொண்டு புரிந்து அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்த அறுபத்து மூவர் பதம் பணிந்து அவர்களோடு நாமும் சிவபெருமானை வணங்கி பெரும் பேறு அடைவோம் .


You can join to my public group to learn more about spiritual information : -
https://www.facebook.com/groups/149636802419664/?refid=17&ref=bookmarks

Comments

Popular posts from this blog

பெருமாள் துதி

தியாஜ்யம் என்றால் என்ன..!?

நான்காம் பிறை