கல்யாண ஆஞ்சநேயர்
கல்யாண ஆஞ்சநேயர் கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர்தான் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால், ஆஞ்சநேயருக்கு ஒரு மனைவியும் மகரத்வஜன் என்ற ஒரு மகனும் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் வரும் மயில்ராவணன் கதை, கம்போடியா மற்றும் தாய்லாந்து நாட்டு ராமாயணங்கள் கூறுகின்றன. அனுமாரைப் போன்றே அவரது மகனும் பராக்கிரமசாலியாக இருந்தார் என்பதும், அந்த மகன் `மச்சவல்லபன்’, `சுறவக்கொடியோன்’ என்று தமிழிலும், `மகரத்வஜன்’ என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறார். மகரத்வஜன், ஆஞ்சநேயருக்கு மகனாகத் தோன்றியது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். ராம லக்ஷ்மணர்களைக் காப்பதற்காக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது, அவரது உடலில் பெருக்கெடுத்த வியர்வை கடலில் விழுந்தது. அப்போது மீன் வடிவில் கடலில் நீந்திக்கொண்டிருந்த தேவகன்னி ஒருத்தி, அந்த வியர்வையை விழுங்கினாள் என்றும், இலங்கையைத் தீக்கிரையாக்கிவிட்டு, பற்றியெரிந்த வாலை அணைப்பதற்காக அனுமார் கடலில் இறங்கியபோது அவரில் இருந்து வழிந்த